நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 20, 2017

மார்கழிக் கோலம் 05

தமிழமுதம்

வானின்று உலகம் வழங்கி வருதலான்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று..(011)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 05


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூயபெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் மலர்தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்..


தித்திக்கும் திருப்பாசுரம்

மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்டு
ஆலின் இலைத்துயின்ற ஆழியான் - கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று..(2100)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
கஞ்சனூர்இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ கற்பகாம்பிகை
ஸ்ரீ கற்பகாம்பிகை - கஞ்சனூர்
மயில் வாகன மூர்த்தி
தல விருட்சம் - புரச மரம்
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே..(6/90)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 05


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ!!!

  மாயனை மன்னனு வட மதுரை மைந்தனையும், பூதங்கள் தோறும் நிற்கும் உமாபதியை உருத்திரனை, உமாபதியை, உலகானானையும் கண்டு நல்ல தரிசனம் பெற்றோம்!!! அருமையான தரிசனம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கணினியின் பிரச்சனையால் எழுத்துப் பிழை வந்திட்டது...!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அழகாக இருக்கின்றன. இறைவனைக் காண்பதும் மக்கிழ்ச்சியாக இருக்கிறது..இனிய காலைப் பொழிட்தில்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஜி
  காலையில் அழகிய தரிசனம் நன்று வாழ்க! நலம்.

  பதிலளிநீக்கு
 5. நல்தரிசனம்..

  ஆண்டாள் திருவடிகளே சரணம்.....

  பதிலளிநீக்கு
 6. பாடல்களைப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள கஞ்சனூர் சென்றுள்ளேன். இன்று உங்கள்மூலமாக மறுபடியும்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஐயா!

  ஆன்ம முன்னேற்றத்திற்கு அவசியமானது இறை பக்தி!
  அதனை எமக்கு நாம் இருக்குமிடத்திற்கே நீங்கள் கொண்டுவந்து தருகிறீர்கள்.
  சிறப்புமிக்க கோயில்களும் அங்கு வீற்றிருக்கும் தெய்வத் திருமூர்த்தங்களும் பார்க்கையில் பரவசம்!
  அறிந்து கொண்டேன்!

  அருந்தொண்டாற்றும் உங்களுக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 8. நான் வந்து படித்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 9. மாயனை.... வடமதுரை மைந்தனை.... சிறப்பு.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு