நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 21, 2017

மார்கழிக் கோலம் 06

தமிழமுதம்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்..(019)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 06

ஸ்ரீ பார்த்தசாரதி
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..

தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ ஒப்பிலியப்பன்
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானைபடு துயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி..(2110)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருகோடிகா

இறைவன் - ஸ்ரீ கோடீஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ திரிபுரசுந்தரி


தல விருட்சம் -
தீர்த்தம் - சிருங்க தீர்த்தம்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

ஸ்ரீ திரிபுரசுந்தரி - திருக்கோடிகா
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைகள் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புடஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!..(6/81)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 06


பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்துஎம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. மீ தான் இம்முறை 1ஸ்ட்டா வந்து அருளைப் பெற்றுக் கொண்டேன்ன்ன்ன்ன்ன்_()_.

    பதிலளிநீக்கு
  2. திருக்கோடிகா - இதுவரை கேள்விப்பட்டதில்லை. எங்கே இருக்கிறது?

    மார்கழி காலையில் இனிய தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மார்கழி 6 ஆம் தினம் அழகான தரிசனம். புள்ளும் சிலம்புகின்றன இங்கு அத்துடன் தளத்தில் திருப்பெருந்துறை சிவபெருமானையும், வண்டார்பூங்குழலியையும், திருக்கோடிகா இறைவனையும் (திருக்கோடிகா கேட்டதே இல்லையே!!) ஒப்பிலா பெருமானையும் ஔவை மொழியுடன் கண்டு தரிசித்தாயிற்று!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி தரிசித்தேன் மார்கழிக் கோலம் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  5. பாடல்களை ரசித்தேன். திருக்கோடிக்காவல் இரு முறை சென்றுள்ளேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா!
    தேவாரம் திருவாசகம் திருப்பாடலென காலையில் படிக்க அரிய பதிகங்களும் கண்களுக்கு இனிமையான காட்சிகளும்...
    அருமையான தெய்வ தரிசனம் இன்றும்.
    நன்றி ஐயா!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  7. ஒப்பிலி அப்பன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன் வாழ்த்துகள் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. ஒப்பிலியப்ப தரிசனம். இவர் சன்னதியில்தான் எங்கள் திருமணம் நடந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..