நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

மார்கழிக் கோலம் 09

தமிழமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற..(034) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 09 

கமலவல்லியும் அழகிய மணவாளனும்
- உறையூர் பங்குனிச் சேர்த்தி -
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணைமேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!.. 
***

தித்திக்கும் திருப்பாசுரம்

உறையூர் ஸ்ரீ கமலவல்லி
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும்
தருமனையே நோக்கும் ஒண்தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு..(2148)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணைசிவ தரிசனம்

திருத்தலம்
திருஎறும்பூர்


இறைவன் - ஸ்ரீஎறும்பீசர் 
அம்பிகை - அருள்மிகு நறுங்குழல் நாயகி

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்


தேவர்கள் எறும்பின் வடிவாக 
ஈசனை வழிபட்ட திருத்தலம்..

திருச்சி மாநகருக்கு அருகில் உள்ளது.
*** 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

அம்மையும் அப்பனும் - திருஎறும்பூர்
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்புரிந்து அருள் செய்தஎம் அங்கணன்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே..(5/74) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 09

ஸ்ரீ தாயுமான ஸ்வாமி - ஸ்ரீ மட்டுவார்குழலி
திருச்சிராப்பள்ளி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..
*
இன்று காலைப் பொழுதில்
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
திருஆதிரைத் திருவிழாவிற்கான
திருக்கொடியேற்றம் நிகழ்கின்றது..

மார்கழியின் பதினேழாம் நாளன்று
(1 ஜனவரி 2018)
திருத்தேரோட்டம்

மறுநாள் (2 ஜனவரி 2018)
அதிகாலையில் திரு ஆருத்ரா தரிசனம்..

திரு ஆதிரையைப் பத்தாம் நாளாகக் கொண்டு
திருவெம்பாவை பாராயணம் நிகழ்வது மரபு..

இன்று முதல்
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 01 -02


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்..

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்... 


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  ஞாயிறு தரிசனம் நலமுடன் நிகழ்ந்தது.

  பதிலளிநீக்கு
 2. நேற்று தான் மலைக்கோட்டை சென்று மட்டுவார் குழலைமையை தரிசனம் செய்தோம்.....

  இன்று இங்கு அவர் படங்கள் ...அருமை

  பதிலளிநீக்கு
 3. நல்ல தரிசனம். எறும்பீசர் கோவில் நானும் சென்றிருக்கிறேன்.

  தொடரட்டும் மார்கழிக் கோலம்!

  பதிலளிநீக்கு
 4. திருவெறும்பூர் தாயுமானவர் சன்னதி போன்ற இடங்கள் என்நினைவலைகளை மீட்கிறது

  பதிலளிநீக்கு
 5. எங்கும் சென்றதில்லை! தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல தரிசனம்! ஒவ்வொரு தினமும் அருளமுதத்துடன்! ஒவ்வொரு பாடலும் எம் எல் வியின் குரலை நினைவுக்குக் கொண்டு வருகிறது!

  கீதா

  பதிலளிநீக்கு