நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 04, 2017

மா மழையே வருக..

சில நாட்களாக -
வடகிழக்குப் பருவ மழை பெய்து கொண்டிருக்கின்றது..

தமிழகத்தின் உட்பகுதிகளில் பரவலாகவும்
தலைநகர் சென்னையில் சற்று அதிகமாகவும்
பெய்து கொண்டிருக்கின்றது...


தமிழக உட்பகுதி மக்கள் மழைக்காகக்
காத்துக் கிடக்கின்றார்கள்...

இந்த மழையில் -
இன்னும் நிறையாத ஏரிகள்.. குளம் குட்டைகள்..

இந்நிலையில் -

தமிழகத்தின் தொலைக்காட்சித் திரைகளில் எல்லாம்
மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!.. - என்ற ஓலம்!..

கிராமங்களில் சொல்வார்கள் -
நோகாமல் நுங்கு தின்பது!.. - என்று..

அதுபோல -

வருடம் முழுதும் தண்ணீர் வேண்டும்..
ஆனால் - யாருக்கும் நோகக் கூடாது...

தொலைக்காட்சிகளின் பார்வையில்
அடை மழைக்காலம் என்பது
மக்களின் அவதிக்கான காலமா!..

மழை என்றாலே மக்களுக்குத் தேவையற்றது..
எனும் பாவனை இளஞ்சிறார்களின்
மனங்களில் பதியத் தொடங்குகின்றது...


மழை என்றால் பூமி ஈர்த்துக் கொண்டது போக
எஞ்சிய நீர் ஓடத்தான் வேண்டும்..

ஏரிகளைச் சென்றடைவதற்கு வழிகள் இல்லை..
அவையெல்லாம் அடைக்கப்பட்டு விட்டன..

ஏரிகள் தூர்க்கப்பட்டு கட்டிடங்களாகி விட்டன..
மழை நீரை உள்வாங்கிக் கொள்ளும்
தகவமைப்புகளும் அமைக்கப்படவில்லை..

பின் என்ன தான் செய்வது?..

சென்னையில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடைக் கழிவுடன் சங்கமித்து விட்டது மழை நீர்..

ஒருபுறம் மக்கள்
மறுபுறம் அரசு பணியாட்கள்..

2015 ல் படாதபாடு பட்டும்
யாரும் திருந்த வில்லை என்றே தோன்றுகின்றது..

சென்னையில் உள்ள
மழைநீர் வடிகால்கள் எல்லாம்
மாநகராட்சியால் பராமரிக்கப்படுகின்றன..
இதில் புதிய கட்டுமானங்கள் தவிர்த்து
ஏற்கனவே இருக்கும் கட்டுமானங்களைப்
பராமரிப்பதற்கு மட்டும்
ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் வரை
செலவிடப்படுவதாக - இன்றைய தினமலர் நாளிதழில்
செய்தி வெளியாகி உள்ளது..

இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகைக்கு
ஈடாக பராமரிக்கப்பட்டிருந்தால்
இத்தகைய அவலம் மீண்டும் நேர்ந்திருக்காதே!...


வேளாண் பூமியாகிய தமிழகத்திற்கு
தண்ணீர் தேவை.. தேவை..

அந்தத் தண்ணீரைத் தருபவை மழை மேகங்களே!..

அவற்றை -
வரவேற்று மகிழ்ந்தவன் தமிழன்..
வாழ்த்தி மகிழ்ந்தவன் தமிழன்!..

ஆனால்,
இன்றைய ஊடகங்கள் மழை என்றாலே
 - வெறுக்கத்தக்க ஒன்று என்பது போலவும்

பெய்கின்ற மழையும் சென்னை மக்களின்
இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காதபடிக்குத் தான்
பெய்ய வேண்டும்!.. - என்பது போலவும்
ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன..

இப்படிச் செய்வது நல்லதல்ல!..

மண்ணுடனும் மரபுடனும் வாழ்ந்தவர்களுக்கே
மழை நீரின் அருமையும் பெருமையும் தெரியும்..
***

நேற்று இரவு வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது
நண்பர் திருமிகு. பாலசுப்ரமணிய ஆதித்தன் அவர்கள் 
Facebook ல் வழங்கியிருந்த பதிவு ஒன்றினைக் கண்டேன்... 

அந்தப் பதிவு
இன்று நமது தளத்தில்..

திருமிகு. பாலசுப்ரமணிய ஆதித்தன் அவர்களுக்கு 
மனமார்ந்த நன்றி..

விவசாயி ஒருவரின் சோகக் குமுறல்..


வட கிழக்குப் பருவமழை ஆரம்பிச்சு
சில நாள் கூட ஆகலை..

எல்லா TV  சானல்களிலும்
மக்கள் அவதி..
வீட்டுக்குள் வெள்ளம்..
ரோடெல்லாம் வெள்ளம்..
சுகாதாரம் இல்லை..
சோறு தண்ணி இல்லை..

அது.. இது... ன்னு
பொதுமக்கள் பலரையும் பேட்டி எடுத்து
ஒரே ஒப்பாரிப் பாட்டு..

கேட்கவே எரிச்சலாக இருக்கு..

இது மழை பெய்கிற காலம்..
மழை பெய்யத் தான் வேண்டும்..

புண்ணியத்துக்கு இந்த வருஷம்
சொன்ன தேதியில மழை ஆரம்பித்து விட்டது..

சென்னையை மட்டுமே போகஸ் பண்ணி
மழையால மக்களுக்கு அவதி..ன்னு
பிலாக்கணம் பாடுறானுங்க..

மாநிலம் முழுக்க விவசாயம் செழிக்க
தண்ணீர் பிரதான தேவை..

பல ஆண்டுகளுக்குப் பிறகு
எல்லா ஏரி குளங்களும் நிரம்பி வருகின்றன..

இந்தப் பருவமழை நல்லா பெய்தால் தான்
அணைகள் எல்லாம் நிரம்பி
வறட்சியில் இருந்து தமிழகம் மீளும்..

திங்கிறதுக்கு சோறும் கிடைக்கும்
கழுவறதுக்கு தண்ணியும் கிடைக்கும்..

நிலமை இப்படியிருக்க
இந்த TV காரனுங்க செய்யிற அலப்பறை
ரொம்பவே வெறுப்பேற்றுகிறது..

மீண்டும் சொல்கிறோம்..

தமிழுக்கு தமிழ் நாட்டுக்கு இந்த மாதிரி
சானல்கள் எதுவும் தேவையே இல்லை..

நாசமா போறவனுங்க -
பெய்கிற மழையை இப்படிப் பேசியே
கெடுத்துடுவானுங்க போல இருக்கு..

எல்லா சானல்களிலும்
தொடர்ந்து மழையை குறை சொல்லி
வசை பாடுவது போலவே
ஒளிபரப்புவது பொறுப்பற்ற
செயலாகவே தோன்றுகிறது..

அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..

கூவம் ஆற்றுக்குள்
தண்ணீர் போகிற வழியை
அடைத்துக் கட்டிய கட்டிடங்களை
முதலில் அப்புறப்படுத்துங்கள்..

இவங்க படுத்துற பாட்டுல
மழை இனி எப்படிப் பெய்யுமோ..
எப்போது பெய்யுமோ?..

மாமழை போற்றுதும்..
மாமழை போற்றுதும்!.. 
***

22 கருத்துகள்:

  1. சரியாகச் சொன்னீர்கள். நன்றாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மழை என்பது இயற்கை இறைவன் நமக்கு கொடுத்தது .நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வெளியே தூங்க வைப்போமா ? :(
    அவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுப்போம் அப்படிதான் பொழியும் மழையை சரியான இடத்தில வைத்து பாதுகாக்காதது ஏரிகளை ஆக்கிரமித்தது நமது குற்றம் .இனியாவது மக்கள் விழிக்கட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நீர் ஆதாரங்களாகிய ஏரி குளங்களைப் பாதுகாக்கத் தவறியது மனிதனுடைய குற்றம்.. இதை விடுத்து இயற்கையை நொந்து கொள்வதில் பயனேதும் இல்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    மிகவும் அழகாக தங்களது பாணியில் விளக்கினீன்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்த மழைக்குத் தெரிய மாட்டேன் என்கிறது ஒரு பக்கம் அவதிக்குள்ளாக்குகிறது ஒருபுறம் தேவையைப் பூர்த்திசெய்ய மாட்டேன் என்கிறதுஎத்தனை நாள் தான் குறை சொல்லிக் கொண்டிருப்போம் மழைவழித் தடங்கள் அழிக்கப்பட்டு விட்டன கட்டிடங்கள் எழுந்து விட்டனா இவற்றுக்கு மாறாக சிந்தனை வேண்டும் சென்னையில் இருப்போர் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவதிப்படுவதையே ஏற்றுக் கொள்ள முடியாமல் பதிவிடலமா நோகாமல் நுங்கு தின்பது அல்ல தன்னை கிள்ளி வலி தெரிய வேண்டும் நேர்ந்துவிட்ட தவறுகளை மாற்றி அமைக்க முடியுமா என்றசிந்தனை வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சென்னையாக இருந்தாலும் தஞ்சையாக இருந்தாலும் மக்களின் அவதி அவதி தான்..

      ஆறோடும் நீரோடும் வாழ்கின்ற எங்களால் ஆறு குளங்கள் பாழ்பட்டுக் கிடப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை..

      செய்தி ஊடகங்களின் ஓலங்களைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

      மழைக் காலத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.. மக்களைத் தயார் படுத்த வேண்டும்..

      ஆண்டு முழுதும் கேளிக்கை தான் வாழ்வு என்றால் அது இயலாது..

      ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் பலவகையிலும் சிந்தித்து விட்டுத்தான் பதிவினை வெளியிடுகின்றேன்..

      நோகாமல் நுங்கு தின்றவன் அல்ல நான்..

      18 வயதிலிருந்து நெற்றி வியர்வை மட்டுமல்ல..
      ரத்தத்தையும் சிந்தி உழைத்து வாழ்கின்றவன்..
      எல்லா வகையான வலிகளையும் நான் அனுபவித்திருக்கின்றேன்..

      படித்தவர்களால் இயங்கும் அரசு நிர்வாகம் எப்படி தவறு செய்ய முடியும்?..

      மதி தவறிய மனிதர்களாலும் நீதி தவறிய அரசு அலுவலர்களாலும் நிர்வாகம் சீர்கேடு அடைகின்றது..

      நேர்ந்து விட்ட தவறுகளை மாற்றி அமைக்க முடியுமா என்ற சிந்தனை வேண்டும்..

      ...என்கின்றீர்களே - இது யாருக்கு என்று சொன்னால் நன்றாக இருக்கும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வேதனையான விடயம்... கேக்கும்போது கிடைக்காது, வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லும்போதெல்லாம் இல்லை இந்தா பிடி என அள்ளிக்கொடுக்கிறார் இறைவன்... அவரின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று போலும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சென்னையில் இத்தனை மழை பெய்தும் தமிழகத்தின் உட்பகுதிகளில் இன்னும் சரிவர மழை பெய்யவில்லை..

      நீங்கள் சொல்வது போல இதுவும் அவன் திருவிளையாடல் என்று தான் மனதை தேற்றிக் கொள்ளவேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. எங்களின் ஆதங்கமும் இதுவே...

    கடந்த சில வருடங்களாக சரியான மழை இல்லாமல் சொந்தங்கள் எல்லாம் வருத்தத்தில்...


    ஏதோ இந்த வருடம் மழை பெய்ய பெய்ய தான்..

    ஏரி எல்லாம் நிரம்புகிறது ..என மகிழ்ச்சியாக சொல்கிறார்கள்....

    அதை உணராமல்..
    வருகின்ற மழையை சேமிக்காமல்...வெட்டி கதை பேசி வீணாக்குகிறார்கள் இவர்கள் என்ன சொல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மையில் விவசாய நிலங்கள் தான் ஒரு நாட்டின் உயிர் நாடி..
      அதனோடு உறவாடிக் கிடந்தவர்களால் தான் மழையின் அருமையை உணர்ந்து கொள்ள முடியும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மிக மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். மாமழையைப் போற்றுவோம். வரவேற்போம். தகுந்த ஏற்பாடுகளுடன். இன்னும் சென்னை பாடம் படிக்கவில்லை என்பதே உண்மை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்னும் சென்னை பாடம் படிக்கவில்லை என்பதே உண்மை..
      படித்துக் கொள்ள மாட்டார்கள் எனப்தும் உண்மை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. உண்மை ரொம்ப சரியாய் சொல்லி இருக்கீங்க சரியான நேரத்தில் அது பொழிகிறது மும்மாரி பொழிந்தது என்று படித்தோம் இப்பொழுது ஒரு மாதம் மாரி வருவதர்கே கஷ்டம் என்று நினைத்தால் இதுவுமில்லையென்றால் தண்ணீரில்லாமல் என்ன செய்வார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு அன்பின் நல்வரவு..
      முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..

      ஊடகங்களின் தவறுகளால் மழை என்றாலே தொந்தரவு - என்ற எதிர்மறை வளரும் பிள்ளைகள் மனதில் பதிக்கின்றது..

      தண்ணீர் இல்லாமல் என்ன செய்வார்கள். - சிந்திக்க வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..