நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 14, 2017

நெல்லையில் திருவிழா

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி!... 
- என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு..

நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளிய பரமன் -
மூங்கில் வனத்தில் சுயம்பாக முளைத்தெழுந்தவர்...

மூங்கில் வனநாதர் - என்பது திருப்பெயர் எனினும்
நெல்லையப்பர் என்றது கொஞ்சு தமிழ்..

நெல்லையப்பருடன் கலந்து உறவாடி நிற்பவள் - ஸ்ரீ காந்திமதி அம்பிகை..

மதுரையம்பதியைப் போலவே நெல்லையிலும்
ஸ்ரீ காந்திமதி தனிக் கோயிலில் அருளாட்சி செய்கின்றனள்..

அகத்திய மாமுனிவருக்குத் திருக்கல்யாணத் திருக்காட்சி வழங்கிய திருத்தலங்களுள் நெல்லையும் ஒன்று..

அளவில் பெரியதான திருக்கோயில்..
கற்களெல்லாம் கலைநயம் கொண்டு கதை பேசுகின்றன..

வருடம் முழுதும் விசேஷங்கள் பல நடந்து கொண்டிருக்கின்றன..

நிகழும் ஐப்பசியில் உத்திர நட்சத்திரத்தை அனுசரித்து -
திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுகின்றது..

03/11 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில்
நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் காந்திமதி எழுந்தருளினள்..

திருவிழாக் காட்சிகளை FB ல் வழங்கியோர் -
உழவாரத் திருப்பணி மற்றும் 
நெல்லையப்பர் அடியார் திருக்கூட்டத்தினர்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

இன்றைய பதிவினில் - 
நெல்லை திருவிழாக் காட்சிகள்..தவக்கோலத்தில் அன்னை
பத்தாம் நாள் தவநிலை கொண்டருளினள்..

தவக்கோலம் எய்திய அன்னை தவம் முடித்தவளாகி
மங்கல நீராட்டு கண்டருளினாள்..
நெல்லை ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள்
நெல்லை ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமான் -
வேணுவன நாதனை மணக்கோலம் கொண்டு
அம்பிகையின் திருக்கரம் பற்றுதற்கு வேண்டினார்..

திருவிழாவின் பதினோராம் நாளாகிய இன்று காலைப் பொழுதில் ஸ்ரீவேணுவனநாதனுக்கும் காந்திமதி அம்பிகைக்கும்
கோலாகலமாக திருக்கல்யாணம் நடைபெற்றது...

திருக்கல்யாண நாயகன்
திருக்கல்யாண நாயகி
மாங்கல்யதாரணம்
மகா ஆரத்தி
பட்டினப்பிரவேசம்
மாங்கல்யதாரணத்திற்குப் பின் அம்பிகையும் ஸ்வாமியும்
பூப்பல்லக்கில் பட்டினபிரவேசம் எழுந்தருளினர்..

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்கின்றது..

அம்மையப்பனின் மணக்கோலம் கண்டு
மங்கலம் பெறுவோமாக!..

மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர்தாமே!..(3/92) 
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

22 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  அழகிய புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் சென்றது நினைவிருக்கிறது ஆனால் கோவில் நினைவுக்கு வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அழகிய படங்களில் தரிசனம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. திவ்விய தரிசனம் கிடைத்தது அருமையான படங்களின் மூலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மணக்கோலம் கண்டேன்.
  தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.
  படங்கள் அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. நெல்லையப்பர் - காந்திமதி.. அழகிய பெயர்கள்... கொடித்தம்பம் அழகாக இருக்கு.. கொடி கோயில் கூரைக்கு வெளியேதான் தெரிகிறது போலும்.

  அழகிய படங்கள். 3 நாட்களுக்கு அன்ன ஊஞ்சலோ? கொடுத்து வைத்தவர்கள்.. நான் ஒரு நாள் மட்டும்தான் கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..

   நெல்லையில் ஊஞ்சல் உற்சவம் மூன்று நாட்களுக்கு நடக்கின்றது..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. ஆஹா எங்கள் ஊரும், காந்திமதி அம்பாளும் ! பதிவு மிகவும் அற்புதம். நங்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று விடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. மிக அழகிய படங்களுடன் அம்மன் தரிசனம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. கோவில் தரிசனம் அருமை. முகநூலால் விளைந்த நல் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. படங்களும் தகவல்கள் மற்றும் படங்களின் வழி தரிசனம் மிக அருமை!

  கீதா: வேணுவநாதன் என்று சிவனின் பெயரா?!!! முதல்தடவையாக அறிகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா அவர்களுக்கு..

   வேணு என்றால் மூங்கில் என்பதாகும்..
   இங்கே மூங்கில் தான் தல மரம்..

   திருநெல்வேலியில் தொன்மைத் திருப்பெயர் வேணு வனம்..
   எனவே ஈசனின் திருப்பெயர் - வேணுவனநாதன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு