நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 18, 2017

ஸ்வாமியே சரணம்

நேற்று கார்த்திகை முதல் நாள்..


சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை மனதில் கொண்டு
விரதம் ஏற்கும் அன்பர்கள் மாலையணிந்திருக்கின்றனர்..

எவ்விதமான கோள் சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை..
கார்த்திகை முதல் நாள் மட்டும் அப்படி ஒரு சிறப்பினை உடையது...

கார்த்திகை முதல் நாளைத் தவற விட்டால் -
அதன் பிறகு மாலையணிவதற்கு நாள் கணிக்க வேண்டும்...

ஆனால் -
இன்றைய அவசரமான காலகட்டத்தில்
இதையெல்லாம் பின்பற்றுகின்றார்களா!?..

தெரியவில்லை..

மிகக் கடுமையான நடைமுறைகளைக் கொண்ட விரதம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் -
சபரி மலைக்கு மாலையணிபவர்கள் வீட்டை விட்டு வெளியேறி
கோயில் மண்டபங்களில் தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு
இருமுடிகட்டி ஸ்வாமி தரிசனம் செய்திருக்கின்றார்கள்...

இன்றைக்கு -
ஒற்றைக் குடித்தனத்திற்குள் விரதமும் விசேஷங்களும் தொடர்கின்றன..

அவரவர் சூழ்நிலை அப்படி!..

இவையெல்லாம் ஐயப்பனின் விருப்பம்...

நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..

மாலையணிந்ததில் இருந்து இருமுடி கட்டும் வரைக்கும்
அடுத்து வரும் சனிக்கிழமை ஒவ்வொன்றும்
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கியமானவை...

முதன்முறையாக மலைக்குச் செல்லும் பக்தர் நடத்தும்
கன்னி பூஜையில் இருந்து விஸ்தாரமான படி பூஜை வரைக்கும்
சனிக்கிழமைகளில் தான் நடைபெறும்...

ஐயப்ப விரதத்தின் முக்கிய நோக்கம் -
இயன்றவரை பிறருக்கு உதவுவது..
அனைவரிடத்தும் அன்பு கொள்வது!..

குறிப்பாகச் சொன்னால் -
வையகத்தை வாழ்த்துதலும் வளப்படுத்துதலும்!..

இவை இரண்டையும் தலைமேற்கொண்டு விட்டால்
நம் இல்லத்தின் பூஜை மாடத்திலேயே
ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைத் தரிசனம் செய்யலாம்!..

இந்த அளவில் இன்றைய பதிவில்
ஸ்ரீ ஐயப்ப வழிபாட்டு ஸ்லோகங்கள்..

முதலில் உள்ள ஐந்து கண்ணிகளும் 
ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம் என வழங்குகின்றது..

வேறு சில குறிப்புகளில் இவையெல்லாம் 
ஸ்ரீ சாஸ்தா தசகம் எனப்படுகின்றது..

எவையாகிலும் எல்லாம் ஐயப்பனுக்குரியவை..

ஐயன் அருள் உண்டு 
என்றும் பயமில்லை...


ஓம்
லோக வீரம் மஹா பூஜ்யம்
சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருத யானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம்
விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரசாத நிரதம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

மத்த மாதங்க கமனம்
காருண்யா ம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் ஸத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பாண்ட்யேச வம்ச திலகம்
கேரளே கேளி விக்ரஹம்
ஆர்தத் த்ராண பரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பஞ்ச ரத்னாக்ய மேதத்யோ 
நித்யம் சுத்த: படேன்னரஹ
தஸ்ய ப்ரசன்னோ பகவான் 
சாஸ்தா வஸதி மானஸே..


த்ரயம்பக புராதீசம்
கணாதிப ஸமன்விதம்
கஜாரூட மஹம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

சிவவீர்ய ஸமுத் பவம்
ஸ்ரீநிவாஸ தனூத் பவம்
சிகிவாகனா னுஜம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

யஸ்ய தந்வந்த்ரிர் மாதா
பிதா தேவோ மஹேஸ்வர:
தம் சாஸ்தா மஹம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பூதநாத ஸதாநந்த
ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம்
வாஸோ வசானம் அருணோத் பலதாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே..

ஓம் 
ஸ்வாமியே சரணம் 
சரணம் ஐயப்பா!.. 
*** 

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இரு முறை சபரிமலை சென்றுவந்துள்ளேன். மறக்கமுடியாத அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சுவாமியே ...சரணம் ஐயப்பா....

    பதிலளிநீக்கு
  4. சபரிமலைப் பயணம் மறக்க முடியாத நினைவுகளைக் கொடுக்கும்.
    நாங்கள் மழையில் நனைந்து கொண்டு மலையேறிய நாட்கள் எத்தனை இனிமையானவை.
    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...
      தங்களது வருகையும் மேலதிக தகவலும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அந்த அந்த சமயத்துக்கேற்ற இடுகை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மாதங்கள் தோறும் மங்கல வைபவங்கள்..
      இயன்றவரை அவற்றினூடாக பயணம் தொடர்கின்றது..
      தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இப்பொழுதுதான் ஐப்பசி பிறந்ததுபோல் இருக்கு, அதுக்குள் கார்த்திகை அவசரமாக வந்து விட்டது.. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      யாருக்காக நிற்கின்றது காலம்!.. ஓடிக் கொண்டே இருக்கின்றது..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஒரு மண்டலமாவது விரதமிருக்க வேண்டும் ஆனால் இன்று மாலையணிந்து நாளைப் பயணம் மேற்கொள்கின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இப்படியான ஆதங்கம் என்னுள்ளும் உண்டு..
      ஆனால் விமர்சனம் செய்வதற்கில்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. சரணம் ஐயப்பா.

    இப்போதுதான் சாஸ்தா பற்றி படித்துக் கொண்டு இருந்தேன்,
    உங்கள் பதிவிலும் சபரி மலை சாஸ்தா!

    //மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகரவிளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்//

    இப்போது விரதகாலங்கல் குறைந்தாலும் மக்களின் பக்தியும் நம்பிக்கையும் தான் முக்கியம் என்று ஐயப்பன் ஏற்றுக் கொண்டார்.

    வாழ்த்துக்கள் உங்களுக்கு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இப்படியான ஆதங்கம் எனக்கும் உண்டு..
      அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுதற்கு இருந்தேன்..
      தாங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்..

      >>> விரத காலங்கள் குறைந்தாலும் மக்களின் பக்தியையும் நம்பிக்கையையும் ஐயப்பன் ஏற்ற்க் கொண்டார்.. <<<

      எல்லாம் ஐயப்பனின் இஷ்டம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அன்பின் ஜி
    தங்களது பகிர்வு என்னை 1988 முதல் 1991 வரையிலான நினைவுகளை கொண்டு வந்தது வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. ஸ்வாமி சரணம்.

    ஒரே ஒரு முறை சபரிமலை சென்றிருக்கிறேன் - விரதம் இல்லாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      நானும் சில வருடங்கள் மலைக்குச் சென்றதுண்டு..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. அருமையான பதிவு!

    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே

    கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்தசாரதியின் மைந்தனே உனைக் காணவேண்டியே தவமிருந்து...

    எத்தனை பாடல்கள் இப்போது வந்தாலும் இந்த அருமையான பாடல் நினைவிலிருந்து நீங்கவில்லை...ஸ்வாமியெ சரணம் ஐயப்பா!!

    என் தம்பி அத்தை பையனும் மாலையணிந்து விரதமிருந்துதான் செல்வான். ஐயப்ப பக்தன் அவன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்/கீதா..

      முதல் இரண்டு வருடங்கள் மட்டுமே பெரிய பாதை..
      குவைத்திற்கு வந்தபிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பிள்ளைகளுடன் காரில் பயணம்..

      அதன்பிறகு அவ்வப்போது விடுமுறையில் வரும்போதெல்லாம் மலைக்குச் செல்வதுண்டு..

      தற்போது மூன்றாண்டுகளாகின்றன மலைக்குச் சென்று..

      ஆனாலும் கார்த்திகை முதல் தைப் பூசம் வரைக்கும் விரதம் தவறுவதில்லை..

      இப்போதும் இங்கே விரதம் பூண்டுள்ளேன்..

      ஐயன் எல்லாருடைய குற்றங்களையும் மன்னித்து நல்வாழ்வு அருள்வானாக..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      சாமியே சரணம் ஐயப்பா!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..