நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 28, 2017

திருக்குடமுழுக்கு

ஸ்ரீ வீரபத்ரகாளி..

தஞ்சையிலுள்ள எட்டு காளி சந்நிதிகளுள் - 
இவளுடைய சந்நிதியும் ஒன்று..

கோபம் கொண்டு கொதித்திருந்த ஸ்ரீவீரபத்ரகாளியை
சித்தர்களும் சாதுக்களும் பூஜித்து சாந்தப்படுத்தியதாக ஐதீகம்...


தஞ்சை மாநகரிலுள்ள சிவாலயங்களுள்
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று..

இத்திருக்கோயில் - வடக்கு வாசல் அகழியைக் கடந்து வடக்கு அலங்கம் பகுதியில் ராஜாகோரி மயானத்திற்குச் செல்லும் சாலைக்குக் கிழக்காக பழைய திருவையாறு சாலையில் உள்ளது..

இந்த சாலையை சிரேயஸ் சத்திரம் சாலை என்றும் சொல்வர்..

சிறப்புறும் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் பின்புறமாக செல்லும் இந்தச் சாலை வெண்ணாற்றங்கரையில் நெடுஞ்சாலையுடன் இணைந்து விடுகின்றது..

ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருந்து
அன்பர்க்கு நலம் புரிபவள் ஸ்ரீ வீரபத்ரகாளி..

கறுப்பு நிறத்தில் விளங்குவதால் கரியகாளி என்றும் சொல்வார்கள்..

திருவடியில் அசுரன் கிடப்பதால் மகிஷாசுரமர்த்தனி என்பதும் வழக்கம்...

சென்ற ஆண்டு இக்கோயிலுக்குச் சென்று வந்த பிறகு
இத்திருக்கோயிலின் சிறப்புகளைச் சொல்லியிருந்தேன்..

அவற்றைக் கீழ்க்காணும் இணைப்புகளின் வழியாகக் காணலாம்

ஸ்ரீ வீரபத்ரகாளி 1

ஸ்ரீ வீரபத்ரகாளி 2

இத்திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று
நேற்று வெள்ளிக்கிழமை (27/10) காலையில்
அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது..






தொடர்ந்து 
மூலவர் அம்பிகை சந்நிதிகளிலும் ஸ்ரீ வீரபத்ரகாளி சந்நிதியிலும்
மகா அர்ச்சனையும் பெருந்தீப வழிபாடும் நடந்தன..



ஸ்ரீ கேசவதீஸ்வர ஸ்வாமி
ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி


ஸ்ரீ வீரபத்ரகாளியின் சந்நிதி
கும்பாபிஷேக வைபவத்திலும் மகா ஆராதனை நிகழ்வுகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இன்புற்றனர்..

நேற்றிரவு -
ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகேசவதீஸ்வர ஸ்வாமியும்
ஸ்ரீ வீரபத்ரகாளி அம்பிகையும் சிறப்பு அலங்காரங்களுடன்
திருவீதி எழுந்தருளி அருள்பாலித்தனர்..



அந்த நிகழ்வுகளை இன்றைய பதிவினில் 
மகிழ்வுடன் வழங்குகின்றேன்..

FB வழியாக
படங்களை வழங்கியவர்
திரு. ஞானசேகரன் - தஞ்சை..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
***

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.. (077)

யாதுமாகி நின்றாய் காளீ!..
ஓம் சக்தி ஓம்..
***

9 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். தரிசனம் செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கும்பாபிஷேக தரிசனம் கிடைத்தது ஜி

    பதிலளிநீக்கு
  3. தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரில் செல்லமுடியவில்லை என்பது எனக்குக் குறையாக இருந்தது. தற்போது தங்களால் குடமுழுக்கு கண்டேன் ஐயா. விரைவில் கோயிலுக்குச் செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்கள். உங்கள் மூலம் எனக்கும் கும்பாபிஷேக தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காளி அம்மனைப் பார்க்கவே பயம்மாக்கிடக்கூஊஊ... அத்தனை படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அனைத்தும் அருமை.
    குடமுழுக்கை நேரில் பார்த்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. அதனுடனாக விவரங்களும். நேரில் கண்டது போல...அருமை

    பதிலளிநீக்கு
  8. வீரகாளி அம்மன் தரிசனம் பெற்றோம் தங்களால்...நன்றி பல

    அணுவிற்குள் அணுவும் நீ ...

    அண்டங்கள் அனைத்தும் நீ...

    ஆள்கின்ற அரசியும் நீ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..