நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 01, 2017

தொடரும் கதை..

வாசகர்களின் கற்பனை, கதை, கவிதை, கலக்கல்களை வெளியிட்டு
அவர்களை மகிழ்விப்பதுடன் தாமும் மகிழும் தளம்..

நம்ம ஏரியா..

சிறப்பான அந்தத் தளத்தில் - எனது முதல் சிறுகதை...

அப்பாவின் மகள்!..
* * *


அப்பா எனக்கு அது வேணும்!..

எதுடா.. செல்லம்?..

திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் -
அகல்யாவின் காதோரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன....

அமர்ந்திருந்த பூங்காவின் அழகில் அவளுடைய மனம் ஒன்றவில்லை...

அழகழகாக பூத்திருந்த பூக்கூட்டங்களோ அப்படியும் இப்படியுமாக தத்திக் கொண்டிருந்த குருவி இனங்களோ அவளை ஈர்க்கவில்லை...

அனைத்தையும் மீறிய அலைகடலாக
அவள் மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது...

ஏன்?.. ஏன்?.. - இப்படியொரு சம்பவம் நடந்தது?...

எத்தனை எத்தனையோ நிமிடங்களாக நாட்களாக வருடங்களாக
நெஞ்சக் கிடங்குக்குள் சேர்த்து வைத்திருந்த நிம்மதியெல்லாம் ஒரு விநாடியில் புகைந்து போனதே...

மீண்டும் அந்தக் குரல் அவளது செவிப்பறையில் மோதியது

திடுக்கிட்டுத் திரும்பினாள் - அகல்யா... 
* * *


தொடரும் கதையை நம்ம ஏரியா தளத்தில் வாசித்து மகிழ்க..

தளத்தில் சொல்லியிருந்தபடி இரண்டாவது கருவிற்கான கதை அது..

அப்பாவின் மகள்.. - எனும் கதை அனைவரையும் கவரும் என நம்புகின்றேன்..

இந்தக் கதை நம்ம ஏரியா தளத்தில்
எப்போது வெளியாகக் கூடும்?.. தெரியவில்லை..

அவர்களது தளத்தில் வெளியான பிறகு
நமது தளத்திலும் பதிவு செய்கிறேன்..

அப்படி இன்றைக்கு (ஜூலை/1) வெளியாகின்றது எனில் -
மிகவும் மகிழ்ச்சியடைவேன்..

ஏனெனில்
இன்று காலையில் - குவைத்திலிருந்து அபுதாபிக்குப் பயணம்..

அங்கிருந்து தொடர்கின்றேன்..
வாழ்க நட்பும் நலமும்.. 
* * *

15 கருத்துகள்:

  1. ஆஹா அபுதாபி என்றதும் மதினா ஸாயித் நினைவு வந்தது ஜி.

    பேத்தி வர்ஷிதா உள்பட அனைவரின் நலம் காண ஆவல்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      நான் புறப்படும் முன் தங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மகள், பேத்தியை பார்க்க போகிறீர்கள். மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வாருங்கள். வாழ்க வளமுடன். கதையை நம்ம ஏரியாவில் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      உண்மையில் மிகவும் ,மகிழ்ச்சியாக இருக்கிறது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா ! கதையின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறதே!! வாசிக்கிறோம் அங்கு...

    தங்களின் பயணம் இனிதாக அமைய...அருமை மகள் குடும்பத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியான நொடிகளை சுவைத்து வரவும்...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நம்ம ஏரியாவில் கதைக்கான கரு தெரியவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ..
      நமது ஏரியா தளத்தில் இரண்டாவது கதைக்கான கருவை வெளியிட்டுள்ளார்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பயணம் சிறக்கட்டும். வாழ்த்துகள். கதையை என் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள். உடனே போட்டு விடுகிறேன். கௌதமனுக்கு உடல் நலமில்லை. அவர் எப்போது மெயில் பார்ப்பார் என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் ..

      திரு கௌதமன் அவர்கள் நலமடைய வேண்டுகிறேன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஸார்... கதை நம்ம ஏரியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      எனது கதை பிரசுரம் ஆனதை அறிந்தேன்.. மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  8. இங்கு ஆரம்பித்தோம். அங்கு தொடர்வோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..