இன்று மங்கலகரமான
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை..
இன்றைய பொழுதில் -
சிந்திப்பதற்கும் வந்திப்பதற்கும்
அன்னை அபிராமவல்லியின் திருவடிகள்..
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - ஸ்ரீ ஐயாறப்பர் |
அதிசயம் ஆனவடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயம் ஆகமுன் பார்த்தவர்தம்
மதிசயம் ஆக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!.. (017)
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து என்விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!.. (019)
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே!.. (020)
மாமதுரை மீனாள் |
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண் கொடியே!.. (021)
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே!.. (024)
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே!.. (027)
ஸ்ரீ காந்திமதி - நெல்லை |
சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும்தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!.. (028)
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகும்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!.. (034)
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!.. (037)
ஸ்ரீ அபிராமவல்லி |
பரிமளப் பூங்கொடியே பைரவி
நின் புதுமலர்த் தாள்
போற்றி.. போற்றி!..
ஓம் சக்தி ஓம்!..
* * *
அன்பின் ஜி
பதிலளிநீக்குபரிமளப் பூங்கொடி தரிசனம் கண்டேன்.
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பரிமளப்பூங்கொடியாள் பாடல்கள், படங்கள் அருமை.
பதிலளிநீக்குதரிசனத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பரிமளப்பூங்கொடி ..அழகிய பெயர் கொண்ட அன்னையின் தரிசனம் ஆஹா சிறப்பு..
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா... அருமை...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பரிமளப் பூங்கொடி! அழகான பெயர்.
பதிலளிநீக்குசிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பெயர்ச்சிறப்பை அனைவரையும் போல நானும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பரிமளப் பூங்கொடி பெயர் அழகு
பதிலளிநீக்குபரிமளப் பூங்கொடி அழகான பெயர்....அழகான பதிவு! நிறைய அறிந்தும் கொண்டோம்...மிக்க நன்றி
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பூங்கொடியே வாசனை உள்ளதுதான். அதிலும் பரிமளப் பூங்கொடி - இன்னும் வாசனை மிக்கது. அம்மையின் பல்வேறு படங்களைக் கண்டு தரிசனம் கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபரிமளப்பூங்கொடி என்ற வார்த்தையெல்லாம் அபிராமி பட்டர் அருளியவை..
அபிராமி அந்தாதி எனும் வற்றாத ஊற்றுதான் நமது தாகத்தைத் தணிவிக்கின்றது..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..