இன்று மங்கலகரமான நாள்..
ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..
சம்ப்ரதாயமாக திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..
மீண்டும் ஒரு கோடை வந்தது!.. - என்னும்படிக்கு வெயிலின் தாக்கம்..
நீர் நிலைகளின் நிலை சொல்லும் தரமன்று...
இந்த வருடமாவது வேளாண்மை தொடருமா?.. தெரியவில்லை..
இந்த நிலையிலும் குலுக்கல் கும்மாளங்களுடன்
தங்களிடம் மட்டுமே சேலை வாங்க வருமாறு
கதறுகின்றன துணிக்கடைகள்..
அதைக் கேட்டு விட்டு - பெருகும் வியர்வையுடன் -
ஆடித் தள்ளுபடி!.. அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!..
- என்று அலைகின்றனர் மக்கள்...
இவற்றுக்கிடையில் -
திருக்கோயில்களை நாடிச் சென்று
ஐயனையும் அம்பிகையையும்
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..
இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.
ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..
ஊழிகளின் தொடக்கத்தில் - புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.
அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..
அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-
மங்கலங்களுடன் மங்கலமாக -
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..
திரு ஆடிப்பூரம் - கோதை நாச்சியாரின் திரு அவதாரத் திருத்தலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..
சம்ப்ரதாயமாக திருக்கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது..
ஐந்தாம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெற்றது..
ஏழாம் திருநாளன்று ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்க மன்னார் சயனத் திருக்கோல சேவை சாதித்தருளினார்..
எட்டாம் திருநாள் புஷ்ப பல்லக்கு...
ஒன்பதாம் திருநாளான்று திருத்தேரோட்டம்..
இதை முன்னிட்டு - ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப் பெற்றது..
பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை முதலான சீர்வரிசைகள் பதினைந்து தட்டுகளில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருள்கின்றாள்..
இதன்பிறகு யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைகின்றது..
திருஆடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..
மீண்டும் ஒரு கோடை வந்தது!.. - என்னும்படிக்கு வெயிலின் தாக்கம்..
நீர் நிலைகளின் நிலை சொல்லும் தரமன்று...
இந்த வருடமாவது வேளாண்மை தொடருமா?.. தெரியவில்லை..
இந்த நிலையிலும் குலுக்கல் கும்மாளங்களுடன்
தங்களிடம் மட்டுமே சேலை வாங்க வருமாறு
கதறுகின்றன துணிக்கடைகள்..
அதைக் கேட்டு விட்டு - பெருகும் வியர்வையுடன் -
ஆடித் தள்ளுபடி!.. அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!..
- என்று அலைகின்றனர் மக்கள்...
இவற்றுக்கிடையில் -
திருக்கோயில்களை நாடிச் சென்று
ஐயனையும் அம்பிகையையும்
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..
எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..
இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.
ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..
மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..
அதிலும் முக்கியமாக -
ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..
அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு..
ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..
அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..
ஓம் சக்தி ஓம்..
* * *
ஆடிப்பூரம் - செய்திகளும் தகவல்களும் சிறப்பு. படங்கள் வழமை போல வெகு சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் ஜி
பதிலளிநீக்குஇன்றைய விடியலில் அழகிய தரிசணம் கண்டேன்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குபக்கத்தில் இருக்கும் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிக்கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உண்டு.
மாரி மகிழ்ந்து மாரியைக் கொடுக்க வேண்டும்.
நேற்று தொலைக்காட்சியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கொடியேற்றம் பார்த்தேன். கருட சேவையும் பார்த்தேன்.
இன்று உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன்.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குமாரி மனம் மகிழ்ந்து மாரியைக் கொடுக்க வேண்டும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகிய தரிசனம்
பதிலளிநீக்குநன்றி ஐயா
ஆடிப்பூரம் பற்றிய அனைத்து செய்திகளும் சிறப்பு ஐயா...
பதிலளிநீக்குஸ்ரீகாந்திமதி அம்மனின் படம் வெகு அழகு...
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆடி மாதத்தின் சிறப்பான நாள்களில் ஒன்றைப் பற்றி சிறப்பான செழிப்பான பகிர்வு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஒவ்வொரு திருவிழாவின் போதும் கண்டு அறிந்திட ஆவல்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆடிப்பூரம் செய்திகள் அருமை. இடுகையின் ஆரம்பத்திலேயே 'திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே' என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நீங்களும் அதனைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு"வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து."
அர்த்தத்தையும் குறிப்பிட்டிருக்கலாம். வறியவர்களுக்குக் கொடுப்பதே ஈகை எனப்படும். ஏனென்றால், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க இயலாது. மற்றவர்களுக்குக் கொடுப்பது 'பயன் கருதிச் செய்யும்' செயல்.
அன்புடையீர்..
நீக்குபதிவின் இறுதியில் சொல்லப்பட்ட குறள் எளிதில் எவர்க்கும் விளங்கக் கூடியது என்பதாலேயே அதன் பொருளைக் குறிப்பிடவில்லை..
மேலும்
ஏழைப் பெண் குழந்தைகளுக்கு - என்று குறித்திருப்பதன் மறைபொருளே இந்தக் குறள் தான்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்சி.. நன்றி..
தாமதம் வழக்கம் போல். திருஆடிப் பூரத்து ஜெகத்துதித்தவளின் படங்களும், தகவல்களும் அருமை!!!
பதிலளிநீக்குகீதா
அன்புடையீர்..
நீக்குதங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..