நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

வடுவூர் ஸ்ரீராமன்


ஸ்ரீ ராமநவமியாகிய இந்நன்னாளில்
ஸ்ரீ ராம தரிசனம்..

வடுவூர்
அபிமான திருத்தலம்


எம்பெருமான் - ஸ்ரீ கோதண்டராமன்

உற்சவர் - ஸ்ரீ கோதண்டராமன் 
ஸ்ரீ விமானம் - ஸ்ரீ புஷ்பக விமானம்..

ஸ்ரீ வைதேகி இளையபெருமாள்
ஆஞ்சநேயர் உடனாகிய திருக்கோலம் ..

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்


ராவண வதம் முடிந்தது..
அயோத்தி மாநகருக்குத் திரும்பும் வேளை..

ஸ்ரீ ராமனையும் வைதேகியையும் வந்து தரிசித்த 
முனிவர்கள் தம்முடனேயே இருக்குமாறு
வேண்டிக் கொண்டனர்..

அதற்கு - மறுநாள் காலையில் 
விடை கூறுவதாக அருளினான்
சர்வலோக சரண்யன்..

அதன்படி பொழுது விடிந்ததும்  
தானே உகந்து - தன் திருமேனியை
தன்னை வந்து சந்தித்த முனிவர்களுக்கு 
ஸ்ரீராமன் அருளினான்..

அந்தத் திருமேனியின் வனப்பினில் மகிழ்ந்த
முனிவர் அன்பினொடு ஆராதித்துக் களித்தனர்..

முனிவர்களின் காலத்திற்குப் பின்
பூமிக்குள் அடைக்கலமாகின திருமேனிகள்..



நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு
தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னரின்
கனவில் தோன்றி
ஹிரண்ய கர்ப்பமாக இருந்த விக்ரகங்களை
மீட்டெடுக்குமாறு அருளினான்
அவதார புருஷன்..

அதன்படி, தலைஞாயிறு எனும் கிராமத்தில் 
திரு விக்ரகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன..

தஞ்சையை நோக்கி வரும் வழியில்
அன்றிரவு வடுவூரில் தங்கும்படியானது..
பொழுது விடிந்தவேளையில்
வடுவூர் மக்கள் வேண்டிக் கொண்டதன் பேரில்
ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்டன..


அது முதற்கொண்டு
ஆராவமுதனாகிய எம்பெருமான்
ஸ்ரீ கோதண்டராமன் எனத் திருப்பெயர் கொண்டு
திருக்கோயிலில் மட்டுமல்லாமல்
ஆயிரமாயிரம் அன்பர்களின்
நெஞ்சங்களிலும்
கோலோச்சி வருகின்றான்..


இத்திருத்தலத்தில் - நேற்று (14/4) முதல் 
பிரம்மோத்ஸவம் தொடங்கி நடைபெறுகின்றது..

13/4 புதன் கிழமை  
காலையில் 108 கலச திருமஞ்சனம் நிகழ்ந்தது..

மாலை 6 மணியளவில்
அனுக்ஞை மிருத்யுஸங்க்ரஹணம் நடைபெற்றது..

14/4 வியாழக்கிழமை
காலை 10.30 மணியளவில் திருக்கொடியேற்றம் ஆனது..

மாலையில் ஸ்ரீராமபிரான் சிவிகையில் எழுந்தருளி
திருவீதி வலம் வந்தருளினன்..

ஆண்டாள் திருக்கோலம்
தொடரும் நாட்களில் காலையில்
பல்லக்கில் திருக்கோலம் கொண்டு எழுந்தருளல்..

15/4 வெள்ளிக்கிழமையாகிய 
இன்று இரண்டாம் திருநாள்

மாலையில் சூரிய பிரபையில்
திருவீதி எழுந்தருளல்..

16/4 சனிக்கிழமை - மூன்றாம் திருநாள் - இரவு
வெள்ளி சேஷ வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..

17/4 ஞாயிற்றுக்கிழமை - நான்காம் திருநாள் - இரவு
வைரமுடி தரித்து கருட சேவை


18/4 திங்கட்கிழமை - ஐந்தாம் திருநாள் - இரவு
ஆஞ்சநேய வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..

19/4 செவ்வாய்க்கிழமை - ஆறாம் திருநாள் - இரவு
யானை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..
சீதா தேவி அன்ன வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.. 

20/4 புதன்கிழமை - ஏழாம் திருநாள் - காலை
திருக்கல்யாணம்..


மாலையில் சூர்ணாபிஷேகம்
இரவு - பல்லக்கில் திருவீதி எழுந்தருளல்.. 

21/4 வியாழக்கிழமை - எட்டாம் திருநாள் - இரவு
குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.. 



22/4 வெள்ளிக்கிழமை - ஒன்பதாம் திருநாள்
காலை 10.00 மணிக்குள்
திருத்தேரோட்டம்..

மாலையில் சரயு தீர்த்தத்தில் தீர்த்தவாரி..

23/4 சனிக்கிழமை - பத்தாம் திருநாள்
காலையில் சப்தாவர்ணம்..
மாலையில் புஷ்பயாகம்..


ஆயுளில் ஒருமுறையேனும் 
வடுவூர் அழகன் ஸ்ரீ ராமனை ஆராதித்து
கண் கொண்ட பயனைப் பெறவேண்டும்..

தஞ்சை மன்னார்குடி சாலையில் உள்ளது வடுவூர்..
தஞ்சையிலிருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன..
தஞ்சை மன்னார்குடி வழித்தடத்தில் 
புறநகர் பேருந்துகளும் வடுவூருக்கு இயங்குகின்றன..
***

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்..
-: கம்பர் :-

ஸ்ரீராம ராம ஜய ராம ராம..  
***

18 கருத்துகள்:

  1. கண்ணைக் கவரும் படங்களுடன்
    அருமையான பதிவு...
    அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தஞ்சையில் 19 வருஷங்கள் இருந்தபோதிலும்
    இரு முறை தான் இந்த அழகன் ராமனை தரிசித்து இருக்கிறேன்.

    நினைத்துக்கொள்வேன். ராமனை உலோகத்தில் வடித்த
    இந்த சிற்பி எந்த புண்ணியம் செய்தானோ என ...

    அது என்ன சாதாரண புன்னைகையா !
    தெய்வீக புன்னகை அல்லவா இது ...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் சொல்வது போல் - சாதாரணப் புன்னகையா!..
      மந்தஹாசம் என்பார்களே - அந்தப் புன்னகை - இது!..

      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வடுவூர் அழகனைக் கண்டுள்ளேன். தங்களின் பதிவால் இன்று மறுபடியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின்ஜி வடுவூர் அழகன் அழகு விடயங்கள் பிரமிப்பாக இருக்கின்றது வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வடுவூர் அழகனைக் கண்டு மனம் பேரானந்தம் அடைந்தது.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகிய படங்களுடன் வடுவூர் குறித்து அறியத் தந்தீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நான் திருச்சியில் இருந்தபோது வடுவூர் ராமனை தரிசிக்க வரச் சொல்லி நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் சந்தர்ப்பமும் நேரமும் அமைய வில்லை. நான் கோவிலைக் காண மிஸ் செய்தது இப்போது உறுத்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான தகவல்கள் ஐயா. படங்கள் உட்பட...பகிர்விற்கு மிக்க நன்றி.

    கீதா: வடுவூர் எனது மாமியாரின் ஊர். வாங்கல் எனது மாமனாரின் ஊர். அதன் அருகில் காவிரி ஆற்றைக் கடந்தால் (இப்போது பாலம் உள்ளது சுற்றிச் செல்ல) மோஹனூர். மூன்று ஊர்களுக்கும் சென்றிருக்கிறோம். வடுவூர் ராமரையும் தரிசித்திருக்கிறோம்...அருமையான தகவல்கள் ஐயா...நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..