நேற்று முன் தினம் முன்னிரவுப் பொழுதில் அழகர் மலையில்
தங்கப்பல்லக்கில் ஆரோகணித்து ஸ்ரீ பதினெட்டாம் கருப்பஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்ட அழகர் -
பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன் பட்டி, கடச்சனேந்தல் வழியாக - பற்பல திருக்கண்களிலும் ( மண்டகப்படி ) எழுந்தருளிய வண்ணம் -
நேற்று காலை 6.00 மணியளவில் மதுரையின் எல்லையான மூன்று மாவடியை வந்தடைந்தார்..
அங்கே சிறப்பாக எதிர் சேவை நிகழ்ந்தது..
பக்தர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்ட அழகர் - தொடர்ந்து,
சர்வேயர் காலனி, புதூர், ரிசர்வ்லைன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வழியாக எழுந்தருளி மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்டார்..
தல்லாகுளம் பகுதியிலுள்ள திருக்கண்களில் சேவை சாதித்த அழகர் - இரவில்
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருளினார்..
அங்கே நள்ளிரவுப் பொழுதில் திருமஞ்சனம் ஆகியதும் - பச்சைப் பட்டுடுத்தி ஆண்டாள் மாலையை அணிந்தவராக தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்..
இன்று அதிகாலை 2.00 மணியளவில் தல்லாகுளம் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி திருக்கோயிலின் முன் தங்கக்குதிரையில் எழுந்தருளிய கள்ளழகர் -
கோரிப்பாளையம் வழியாக ஆழ்வார் புரம் வந்து -
காலை 6.20 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார்..
அவரை வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் எதிர் கொண்டு அழைத்தார்..
கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நீரைப் பீய்ச்சியடித்து ஆனந்தமடைந்தனர் - பக்தர்கள்..
கோவிந்தா.. கோவிந்தா!.. - என முழங்கியவாறு -
சர்க்கரைச் செம்பில் கற்பூரம் ஏற்றி - கண் குளிர வழிபட்டனர் மக்கள்..
காலை 7.30 மணியளவில் - அழகர் வைகையிலிருந்து புறப்பட்டு
10.00 மணியளவில் ராமராயர் மண்டபத்திற்குச் சென்றார்..
இன்றிரவு வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருள்கின்றார்..
நாளை (23/4) காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் மதியப் பொழுதில் கருட வாகனத்தில் ஆரோகணித்து மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருள்கின்றார்..
பற்பல திருக்கண்களில் எழுந்தருளிய வண்ணம் -
இரவு மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்..
அங்கே இரவு முழுதும் தசாவதாரத் திருக்காட்சி நிகழ்கின்றது..

புவி நாளன்று புதுப் புனலுடன் வைகை |

***
இன்றைய நிகழ்வினை அழகிய படங்களாக வழங்கியோர்
திரு.குணா அமுதன். திரு ஸ்டாலின், திரு அருண்.,
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***
வைகை ஆற்று நீரும்
அழகர் என ஆவலுடன் வந்தது..
வள்ளல் தன் கோலங்கண்டு
வளநகரும் மகிழ்ந்தது..
கள்ளழகர் திருவடிகள் போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***
படங்களுக்கும்
பதிலளிநீக்குபகிர்விற்கும் நன்றி ஐயா
அருமை
விரிவான விளக்கம் அருமை ஜி புகைப்படங்கள் ஸூப்பர்
பதிலளிநீக்குபகிர்வு அருமை நண்பரே ..
பதிலளிநீக்குஅழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வை மிக அழகான படங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்... அருமை ஐயா...
பதிலளிநீக்குமற்ற எல்லாப் பகிர்வுகளையும் பார்த்து... ரசித்து... ஆனந்தப்பட்டேன்...
அருமை...
நேரில் பார்த்து போன்ற உணர்வு,, அருமை அருமை,,
பதிலளிநீக்குமதுரையில் இருந்து போக முடியாமல் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பு பார்த்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவில் நேரடி காட்சிகள் பார்த்து விட்டேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்.