அக்கா... அக்கா..வ்!..
சரி.. உடம்பு சரியில்லாம இருக்கீங்க.. ரொம்பவும் பேசக்கூடாது.. தொண்டையெல்லாம் காய்ந்து போயிருக்கும்.. முதல்ல தண்ணி குடிங்க.. அப்படின்னு.. பக்கத்தில இருந்த குளத்தில இருந்து தண்ணி எடுத்து எல்லாருக்கும் கொடுக்கிறாள்..
ஆகா!..
நீ .. யாரும்மா!.. ந்னு கேட்டதுக்கு நான் இந்தப் பக்கம் தான் சுத்திக்கிட்டு இருப்பேன்.. காலையில வந்து பார்க்கிறேன்..ன்னு சொல்லிட்டுப் போய் விடுகின்றாள்.. கொஞ்ச நேரத்தில ஜூரமும் போயிடுது.. எல்லாருக்கும் ஆச்சர்யம்.. அன்னைக்கு ராத்திரி கனவுல வந்து தரிசனம் கொடுக்கிறாள்...
புல்லரிக்குது அக்கா!..
பொழுது விடியறப்ப - மறுபடியும் அம்பாள் காட்சியளிக்கிறா.. அம்மா.. நாடி வந்த அம்மா!.. ந்னு விழுந்து புரண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாங்க..
நாடியம்மன் என்ற பேருக்கு இது தான் காரணமா!..
உடனேயே புதிதா கோயில் திருப்பணி செய்றாங்க.. அம்பாள் கூட வந்த வீரனுக்கும் சந்நிதி கட்டுறாங்க..
மதுரை வீரனா... அக்கா!..
இல்லேம்மா.. அவர் வேற.. இவர் வேற.. பட்டுக்கோட்டை பக்கம் வீரனார் கோயில் நிறைய இருக்கு.. வீரன் அம்பாளுக்கு காவல் நாயகன்.. ஊர்க்காவல்.. இந்தப் பக்கம் நிறைய பேருக்கு வீரன்.. வீராசாமி ..ன்னு பேர் வைக்கிறதுல இருந்தே வீரனார் சிறப்பை புரிஞ்சுக்கலாம்..
ஆச்சர்யம் அக்கா!..
பட்டுக்கோட்டை வட்டாரத்தில கிராமத்துக்குப் பத்துப் பேராவது நாடிமுத்து, நாடியப்பன்..ன்னு இருப்பாங்க.. நாடியம், நாடியம்பாள் புரம் அப்படி..ன்னு கிராமங்களே இருக்கு..
அந்த அளவுக்கு நாடியம்மன் அவங்க வாழ்க்கையோட கலந்து இருக்கிறா..
இன்னைக்கு நாடியம்மன் தேர் ஏறி வீதி வலம் வர்றா.. வரகரிசி மாலை அன்னைக்கு கூடின கூட்டம் போல இன்னைக்கும் கூடும்.. நாளைக்குத் தான் தேர் நிலைக்கு வரும்..
நேற்றைக்கு அம்பாளுக்கு மாவிளக்கு வைபவம்!.. எத்தனை பேர் மாவிளக்கு போட்டிருப்பாங்க .. சொல்லு பார்ப்போம்!..
ஆயிரம்.. இரண்டாயிரம்!..
அதெல்லாம் இல்லை.. பல்லாயிரக் கணக்கு .. லட்சத்தைத் தாண்டி!..
அடேயப்பா!..
அதெல்லாம் எண்ணி முடியாது..
அம்பாள் பெருமையை சொல்லி முடியாது.. தாமரை!..
நம்பிக்கை வைத்தவரை நாடி வருபவள் - நாடியம்பாள்!..
அவளப் பத்தி இவ்வளவு நேரம் பேசினதே புண்ணியம்!..
இன்னொரு தடவை ஆர அமர போய்ட்டு வரணும் அக்கா!..
ஆமாம் தாமரை.. இப்போ பார்த்தாயா.. இங்கே கோடியம்மன் காளியாட்டத் திருவிழா முடிஞ்சதும் பெரிய கோயில்..ல கொடியேத்திட்டாங்க...
நானும் மாமா அத்தை எல்லாரும் கோடியம்மன் கோயிலுக்குப் போயிருந்தோமே!.. பச்சைக் காளி பவளக் காளி ஆட்டம்.. அடேயப்பா.. மாமா பெரிய மாலையா ரெண்டு சாமிக்கும் போட்டு விட்டார்.. என்னை கிட்ட கூப்பிட்டு தலைல கை வைச்சி விபூதி பூசி எலுமிச்சம் பழம் கொடுத்தாங்க!.. அப்ப உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு!..
அப்புறம் என்ன.. அடுத்த வருஷம் தாலாட்டு தான்!..
என்னக்கா.. நீங்க!...
நாலாந்தேதி பெரிய கோயில்..ல கொடியேற்றம் ஆனது.. வர்ற பதினெட்டாம் தேதி திருத்தேர்.. இருபத்தொன்று அன்றைக்கு தியாகராஜர் முத்துப்பந்தல்..
போன வருஷம் மாதிரி இல்லாம - முன்னாலேயே போயிடணும்..
போன வருஷந்தான் - தேர் பார்க்கிறதுக்கு..ன்னு நடுராத்திரியே ஜனங்க ராஜ வீதியில கூடிட்டாங்களே..
ஆமாங்கா.. எங்க தெருக்காரங்க ஒன்னாக்கூடி தண்ணீர் பந்தல் மோர் வழங்க
ஏற்பாடு செஞ்சிருக்காங்க!...
நல்லது தானே!..
சரி..க்கா.. நானும் கிளம்பறேன்!..
இரும்மா.. புதினா மோர் கொண்டு வருகிறேன்.. ஒருவாய் குடி!..
புதினா மோர் வயிறு வேக்காளத்துக்கு நல்லது... ஜீரண கோளாறுகள் சரியாப் போகும்.. புதினா சட்னி எவ்வளவு நல்லது தெரியுமா!..
அப்பா!. ஜில்லு..ன்னு இருக்கு.. கண்ணுல கண்டதையெல்லாம் குடிக்காம வெயிலுக்கு மோர் குடிக்கிறதே நல்லது.. அதுவும், அக்கா கையால குடிக்கிறது ரொம்ப நல்லது.. சரிக்கா.. போய்ட்டு வர்றேன்!..
சரிம்மா!.. பத்திரமா.. போய்ட்டு வா!.. உன் டார்லிங்கை அங்கே தேவகோட்டை பெரிய மீசையையும் வெள்ளந்தி மனசு குமாரையும் பார்க்கச் சொல்லு.. பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்!..
ஆகட்டும் அக்கா!.. அங்கே அபுதாபியில.. அஞ்சு கிலோவை வெச்சிக்கிட்டு ஆராய்ச்சி பண்றாராம்.. தேவகோட்டை.. அதென்னான்னு.. பார்க்கணும்!..
வாம்மா.. தாமரை.. வா.. வா!.. உன்னைத் தான் நினைத்தேன்.. வந்து விட்டாய்!..
ஏங்..க்கா!..
அன்னைக்கு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் திருவிழாவுக்கு போய்ட்டு வரும் போது உனக்கு கொஞ்சம் காய்ச்சலாக இருந்ததே.. நீயும் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் ஒரு சேதியும் சொல்லலை.. நானும் கிளம்பி வந்து உன்னைப் பார்க்க முடியலை..
ஸ்ரீ நாடியம்மன் |
அதனால... என்னக்கா!.. நாடியம்மனை நெனைச்சுக்கிட்டு ஒரு கஷாயம் போட்டுக் குடிச்சிட்டு படுத்தேன்.. காய்ச்சலுக்கே காய்ச்சல் வந்து ஓடிப் போச்சு..
நல்லா பேசுறே!..
எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்டது தான்!...
ஆமா.. அதென்ன.. கையில டிபன் பாக்ஸ்?..
ஆ.. மறந்தே போயிட்டேன்.. கடலை மசாலா.. அன்னைக்கு பட்டுக்கோட்டை திருவிழாவுல நிலக்கடலை ஒரு மரக்கா வாங்கினோம் இல்லையா!..
ஆமா!.. ஈரக் கடலை.. மண் வாசனையோட!..
வீட்டுக்கு வந்ததும் எங்க அத்தைக்கு ரொம்ப சந்தோஷம்.. அவங்களுக்கு நிலக்கடலை..ன்னா ரொம்பப் பிடிக்குமாம்!..
அப்படியா!.. மாமியார் மெச்சின மருமகள் ஆயிட்டே!..
எங்க அத்தைக்கு எப்பவுமே நான் செல்லப் பொண்ணுதான்!..
வீட்டுக்கு வீடு அப்படித்தாம்மா இருக்கணும்.. அதுதான் நிம்மதி.. சந்தோஷம்..
அந்தக் கடலையில செஞ்சது.. அதுவும் நானே செஞ்சது..
நீயே செஞ்சியா!?..
அக்கா பயப்படாம சாப்பிட்டுப் பாருங்க!.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க!..
உங்க அத்தை சொல்லிக் கொடுத்தாங்களா?..
இல்லே.. இல்லே.. நாந்தான் செஞ்சேன்.. நானே தான் செஞ்சேன்.. மண்டபத்துல இருந்து யாரும் சொல்லிக் கொடுக்கலே!..
ஏய்.. இதானே வேணாங்கிறது!..
அக்கா.. நானே எங் கற்பனையோட..
நம்ம உமையாள் காயத்ரி அக்கா,.
பாளையங்கோட்டை சாரதா அக்கா -
அவங்களோட வலைத் தளத்தில சில குறிப்புகளப் படிச்சிட்டு அதெல்லாத்தையும் ஒன்னா போட்டு கலக்கி செஞ்சது!..
நம்ம உமையாள் காயத்ரி அக்கா,.
பாளையங்கோட்டை சாரதா அக்கா -
அவங்களோட வலைத் தளத்தில சில குறிப்புகளப் படிச்சிட்டு அதெல்லாத்தையும் ஒன்னா போட்டு கலக்கி செஞ்சது!..
அட... கம்ப்யூட்டர் இப்ப சரியாயிடுச்சா!..
ஆயிடிச்சே!.. என்னைப் பார்த்துப் பேசாம - துபாய்..ல டார்லிங்குக்கு மண்டை காஞ்சி போச்சு.. உடனே அங்கேயிருந்து திர்ஹாம் பறந்து வந்திச்சி.. இங்கே வைரஸ் ஒழிஞ்சு போச்சு.. பிரச்னையும் பறந்து போச்சி...
எப்படியோ.. பொண்ணும் மாப்பிள்ளையும் முகம் பார்த்து பேசிக்கிட்டா சரிதான்!..
இந்த கலம் மzஜ்பூத்!..
என்னது.. மzஜ்பூத்..தா?... அப்படின்னா?..
இது அரபி..க்கா!.. அரபி!..
அது இருக்கட்டும்.. இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?.. திட்டலையே!..
நீங்க நல்லா சொல்றீங்க!.. அப்படின்னு அர்த்தம்!.. வேணும்..ன்னா கில்லர் ஜி அண்ணாவைக் கேட்டுக்கோங்க.. இன்னும் குமார் அண்ணாவையும் கேட்டுக்கோங்க!..
இதெல்லாம் எத்தனை நாளா.. நடக்குது!..
நானும் டார்லிங்கும் பேசிக்கிறப்ப.. இந்த மாதிரி ஏதாவது நடுவுல வரும்.. நான் என்ன அர்த்தம்....ன்னு கேட்பேன்... அதுக்கு இதுதான்... ந்னு சொல்லுவார்..
பார்த்தும்மா.. ஊரு விட்டு ஊரு போயி - குலுவாலி.. லே மாதிரி ஆயிடப் போகுது!..
போங்கக்கா!.. எனக்கு வெட்கமா இருக்கு!...
ம்ம்.. கடலை மசாலா நல்லாவே இருக்கு.. அதுவும் புதுக் கடலையா.. பால் வாசம் மாறாம இருக்கு!..
அதென்னக்கா.. எங்கப் பார்த்தாலும் பட்டுக்கோட்டையில தென்னை மரமா இருக்கு!..
அதிகமா தென்னை வெளைற பகுதியில பட்டுகோட்டை வட்டாரமும் ஒன்னு.. புஞ்சைக் காட்டுப் பயிர்களும் அமோகம்... கடலை, பயறு, சோளம், கரும்பு அப்படின்னு ஜனங்க வருஷம் முழுக்க பாடுபடுகிற பூமி.. அது மட்டுமா.. பலாப்பழத்துக்கு பட்டுக்கோட்டை பிரசித்தம்..
அப்படியா.. ஆச்சர்யமா இருக்கு!..
சென்னைக்குப் போற தேங்காய்கள்..ல பட்டுக்கோட்டை காய்கள் தான் அதிகம்.. தேங்காய பார்த்ததும் சொல்லிடலாம்.. இது பட்டுக்கோட்டை தேங்காய்..ன்னு.... ஒரே மாதிரி சீரா இருக்கும்.. நல்ல அழுத்தமா தேங்காய் சில்லு .. இதோட ருசியே தனிதான்.. எதனாலே..ன்னு தெரியுமா?..
எனக்கு என்னக்கா.. தெரியும்?..
பட்டுக்கோட்டையில இருந்து பத்து மைல் தூரத்திலயே கடல்.. கடல் காற்று தென்னைக்கு நல்லது.. தாமரங்கோட்டை தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, அதிராமபட்டினம், மல்லிப்பட்டினம் - அப்படின்னு நிறைய ஊர்கள்.. அங்கெல்லாம் தென்னை மரங்க அதிகம்.. சமயத்தில கடும் வறட்சியான சமயத்தில பாதிப்பு இருக்கும் .. மற்றபடி மழைக்காலத்தில நீர்ப்பிடிப்பு பகுதிகள்.. கோட்டகம்... ந்னு சொல்வாங்க!..
இதெல்லாம்.. எப்படி.. எப்படிக்கா!..
நான் அங்கே பதினைஞ்சு வருஷம் இருந்திருக்கின்றேன்.. பட்டுக்கோட்டை வட்டாரம் முழுதும் அத்துப்படி!.. ஊருக்கு ஒரு சிறப்பு.. அதெல்லாம் சொல்லணும்..ன்னா பொழுது விடிஞ்சிடும்..
ஓ!...
உனக்குத் தெரியுமா!.. தஞ்சை மாவட்டத்தில பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஊர் பட்டுக்கோட்டை.. அந்தக் காலத்திலேயே ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு ஒருத்தராவது சிங்கப்பூர் மலேஷியா.. ந்னு இருந்த பெருமை.. இன்னைக்கும் அப்படித்தான்!..
ஓஹோ!..
என்ன ஓஹோ!.. போன வருஷம் நம்ம பிரதமர் சிங்கப்பூர் போயிருந்தப்ப சிங்கப்பூர் பிரதமரோட சிற்றுண்டி சாப்பிட்டாரே...
ஆமாம்!.. கோமள விலாஸ் உணவகம்!..
அதே.. அந்த உணவகத்தை உருவாக்கினதே பட்டுக்கோட்டைக்காரர் தான்!..
இன்னைக்கு சிங்கப்பூர் இப்படியிருக்கிறதுல அன்றைக்கு அங்கேயிருந்த தமிழர்கள் தான் காரணம்.. ஆனால் - அதிலேயும் பட்டுக்கோட்டைக் காரங்க நாட்டுக்கோட்டைக் காரங்க - இவங்க தான் முக்கிய காரணம்!...
அட.. பட்டுக்கோட்டை நாட்டுக்கோட்டை!.. எதுகை மோனையா!..
அது உண்மைதான் செல்லம்!..
நாட்டுக்கோட்டைக் காரங்க நம்புறது குடிகாக்கும் கொப்புடைய அம்மன்..ன்னா,
நாட்டுக்கோட்டைக் காரங்க நம்புறது குடிகாக்கும் கொப்புடைய அம்மன்..ன்னா,
பட்டுக்கோட்டைக் காரங்க நம்புறது நாடி வந்த நாடியம்மனைத் தான்!..
ஆமாங்..க்கா.. நானும் தான் பார்த்தேனே.. எத்தனை எத்தனை ஆயிரம் ஜனங்க..
ஆமாங்..க்கா.. நானும் தான் பார்த்தேனே.. எத்தனை எத்தனை ஆயிரம் ஜனங்க..
அவங்களுக்குத் தான் எத்தனை எத்தனை சந்தோஷம்...
வரகு எனும் தானியக் கதிர்களை மாலையா போட்டுக்கிற தெய்வம் இவள் ஒருத்திதான்!..
தல புராணம் என்னக்கா?..
தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால இந்தக் கோயில் உருவானதா வரலாறு.. அவங்க இந்த வழியா ராமேஸ்வரம் போகும்போது - விஷ ஜூரம் வந்துடுது.. பயணம் தடைப்படுது.. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் ஒன்னும் முடியலை.. அவங்களுக்கு இஷ்ட தெய்வமான தஞ்சாவூர் மாரியம்மனை வேண்டிக்கிறாங்க..
அடடா!..
அன்றைக்கு சாயங்கால வேளையில சின்னப் பொண்ணு ஒருத்தி சிவப்பு பாவாடை கட்டிக்கிட்டு தலை நிறைய பூ வச்சிக்கிட்டு வர்றா.. அவகூட குதிரை வீரன் ஒருத்தனும் கம்பீரமா!...
ம்!..
என்னன்னு கேட்கிறா.. வேதனையில இருந்தவங்க விஷயத்தைச் சொல்றாங்க... அந்தப் பொண்ணும் ஒன்னும் தெரியாதவ மாதிரி எல்லாத்தையும் கேட்டுக்குறா..
அந்தப் பொண்ணு அம்பாள் தானே!..
வரகு எனும் தானியக் கதிர்களை மாலையா போட்டுக்கிற தெய்வம் இவள் ஒருத்திதான்!..
தல புராணம் என்னக்கா?..
தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால இந்தக் கோயில் உருவானதா வரலாறு.. அவங்க இந்த வழியா ராமேஸ்வரம் போகும்போது - விஷ ஜூரம் வந்துடுது.. பயணம் தடைப்படுது.. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் ஒன்னும் முடியலை.. அவங்களுக்கு இஷ்ட தெய்வமான தஞ்சாவூர் மாரியம்மனை வேண்டிக்கிறாங்க..
அடடா!..
அன்றைக்கு சாயங்கால வேளையில சின்னப் பொண்ணு ஒருத்தி சிவப்பு பாவாடை கட்டிக்கிட்டு தலை நிறைய பூ வச்சிக்கிட்டு வர்றா.. அவகூட குதிரை வீரன் ஒருத்தனும் கம்பீரமா!...
ம்!..
என்னன்னு கேட்கிறா.. வேதனையில இருந்தவங்க விஷயத்தைச் சொல்றாங்க... அந்தப் பொண்ணும் ஒன்னும் தெரியாதவ மாதிரி எல்லாத்தையும் கேட்டுக்குறா..
அந்தப் பொண்ணு அம்பாள் தானே!..
சரி.. உடம்பு சரியில்லாம இருக்கீங்க.. ரொம்பவும் பேசக்கூடாது.. தொண்டையெல்லாம் காய்ந்து போயிருக்கும்.. முதல்ல தண்ணி குடிங்க.. அப்படின்னு.. பக்கத்தில இருந்த குளத்தில இருந்து தண்ணி எடுத்து எல்லாருக்கும் கொடுக்கிறாள்..
ஆகா!..
நீ .. யாரும்மா!.. ந்னு கேட்டதுக்கு நான் இந்தப் பக்கம் தான் சுத்திக்கிட்டு இருப்பேன்.. காலையில வந்து பார்க்கிறேன்..ன்னு சொல்லிட்டுப் போய் விடுகின்றாள்.. கொஞ்ச நேரத்தில ஜூரமும் போயிடுது.. எல்லாருக்கும் ஆச்சர்யம்.. அன்னைக்கு ராத்திரி கனவுல வந்து தரிசனம் கொடுக்கிறாள்...
புல்லரிக்குது அக்கா!..
பொழுது விடியறப்ப - மறுபடியும் அம்பாள் காட்சியளிக்கிறா.. அம்மா.. நாடி வந்த அம்மா!.. ந்னு விழுந்து புரண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாங்க..
நாடியம்மன் என்ற பேருக்கு இது தான் காரணமா!..
உடனேயே புதிதா கோயில் திருப்பணி செய்றாங்க.. அம்பாள் கூட வந்த வீரனுக்கும் சந்நிதி கட்டுறாங்க..
மதுரை வீரனா... அக்கா!..
இல்லேம்மா.. அவர் வேற.. இவர் வேற.. பட்டுக்கோட்டை பக்கம் வீரனார் கோயில் நிறைய இருக்கு.. வீரன் அம்பாளுக்கு காவல் நாயகன்.. ஊர்க்காவல்.. இந்தப் பக்கம் நிறைய பேருக்கு வீரன்.. வீராசாமி ..ன்னு பேர் வைக்கிறதுல இருந்தே வீரனார் சிறப்பை புரிஞ்சுக்கலாம்..
ஆச்சர்யம் அக்கா!..
பட்டுக்கோட்டை வட்டாரத்தில கிராமத்துக்குப் பத்துப் பேராவது நாடிமுத்து, நாடியப்பன்..ன்னு இருப்பாங்க.. நாடியம், நாடியம்பாள் புரம் அப்படி..ன்னு கிராமங்களே இருக்கு..
அந்த அளவுக்கு நாடியம்மன் அவங்க வாழ்க்கையோட கலந்து இருக்கிறா..
இன்னைக்கு நாடியம்மன் தேர் ஏறி வீதி வலம் வர்றா.. வரகரிசி மாலை அன்னைக்கு கூடின கூட்டம் போல இன்னைக்கும் கூடும்.. நாளைக்குத் தான் தேர் நிலைக்கு வரும்..
நேற்றைக்கு அம்பாளுக்கு மாவிளக்கு வைபவம்!.. எத்தனை பேர் மாவிளக்கு போட்டிருப்பாங்க .. சொல்லு பார்ப்போம்!..
ஆயிரம்.. இரண்டாயிரம்!..
அதெல்லாம் இல்லை.. பல்லாயிரக் கணக்கு .. லட்சத்தைத் தாண்டி!..
அடேயப்பா!..
அதெல்லாம் எண்ணி முடியாது..
அம்பாள் பெருமையை சொல்லி முடியாது.. தாமரை!..
நம்பிக்கை வைத்தவரை நாடி வருபவள் - நாடியம்பாள்!..
அவளப் பத்தி இவ்வளவு நேரம் பேசினதே புண்ணியம்!..
இன்னொரு தடவை ஆர அமர போய்ட்டு வரணும் அக்கா!..
ஆமாம் தாமரை.. இப்போ பார்த்தாயா.. இங்கே கோடியம்மன் காளியாட்டத் திருவிழா முடிஞ்சதும் பெரிய கோயில்..ல கொடியேத்திட்டாங்க...
தஞ்சை ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயில் திருவிழா
ஸ்ரீ காளியாட்ட வைபவம்
***
பச்சைக்காளி - தஞ்சை |
பச்சைக்காளி - தஞ்சை |
பவளக்காளி - தஞ்சை |
(ஸ்ரீ காளியாட்ட விழாக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி)
நானும் மாமா அத்தை எல்லாரும் கோடியம்மன் கோயிலுக்குப் போயிருந்தோமே!.. பச்சைக் காளி பவளக் காளி ஆட்டம்.. அடேயப்பா.. மாமா பெரிய மாலையா ரெண்டு சாமிக்கும் போட்டு விட்டார்.. என்னை கிட்ட கூப்பிட்டு தலைல கை வைச்சி விபூதி பூசி எலுமிச்சம் பழம் கொடுத்தாங்க!.. அப்ப உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு!..
அப்புறம் என்ன.. அடுத்த வருஷம் தாலாட்டு தான்!..
என்னக்கா.. நீங்க!...
தஞ்சை திருத்தேர் - 2015 |
போன வருஷம் மாதிரி இல்லாம - முன்னாலேயே போயிடணும்..
போன வருஷந்தான் - தேர் பார்க்கிறதுக்கு..ன்னு நடுராத்திரியே ஜனங்க ராஜ வீதியில கூடிட்டாங்களே..
ஆமாங்கா.. எங்க தெருக்காரங்க ஒன்னாக்கூடி தண்ணீர் பந்தல் மோர் வழங்க
ஏற்பாடு செஞ்சிருக்காங்க!...
நல்லது தானே!..
சரி..க்கா.. நானும் கிளம்பறேன்!..
இரும்மா.. புதினா மோர் கொண்டு வருகிறேன்.. ஒருவாய் குடி!..
புதினா மோர் வயிறு வேக்காளத்துக்கு நல்லது... ஜீரண கோளாறுகள் சரியாப் போகும்.. புதினா சட்னி எவ்வளவு நல்லது தெரியுமா!..
அப்பா!. ஜில்லு..ன்னு இருக்கு.. கண்ணுல கண்டதையெல்லாம் குடிக்காம வெயிலுக்கு மோர் குடிக்கிறதே நல்லது.. அதுவும், அக்கா கையால குடிக்கிறது ரொம்ப நல்லது.. சரிக்கா.. போய்ட்டு வர்றேன்!..
சரிம்மா!.. பத்திரமா.. போய்ட்டு வா!.. உன் டார்லிங்கை அங்கே தேவகோட்டை பெரிய மீசையையும் வெள்ளந்தி மனசு குமாரையும் பார்க்கச் சொல்லு.. பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்!..
ஆகட்டும் அக்கா!.. அங்கே அபுதாபியில.. அஞ்சு கிலோவை வெச்சிக்கிட்டு ஆராய்ச்சி பண்றாராம்.. தேவகோட்டை.. அதென்னான்னு.. பார்க்கணும்!..
* * *
அக்கா தங்கையின்
அடுத்த சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றன
அடுத்த சந்திப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றன
அங்கிருக்கும் குண்டு மல்லிப் பூக்கள்!..
வாழ்க நலம்..
***
அன்பின்ஜி
பதிலளிநீக்குஅக்காவும், தங்கையும் உரையாடிய அழகிய விடயங்கள் அறியக்கண்டேன்
நாடியம்மனின் வரலாறு படித்துக் கொண்டேன்.
தென்னை மரங்கள் பற்றிய விபரங்கள் அறிந்து கள்ள வேண்டியவை
புகைப்படங்கள் மிகவும் தெளிவு.
5 கிலோ சமாச்சாரம் நீங்கள் இன்னும் மறக்கவில்லையா ஜி ?
தற்போது ப்ரீஜரில் வைத்து இருக்கின்றேன்.
வல்லாஹி இந்த சிஜில் வாஜித் மஜ்பூத்.... மப்ரூஹ் யா...ஹி.
அன்பின் ஜி..
நீக்குசுக்ரான்.. சுக்ரான்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
அன்பின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி..
ஒரு திருவிழா பதிவை உரையாடலில் சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது வித்தியாசமாய் இருந்தது
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
நாடியம்மன் திருவிழாவை அக்கா தங்கயின் உரையாடலில் அழகாய் கண்டு மகிழ்ந்தோம். பட்டுக்கோட்டை பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டோம். நாடியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபணிச்சுமைகளுக்கு இடையேயும் தாங்கள்
தளத்திற்கு வருகையளித்தது மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..
திருவிழாவை உரையாடல்
பதிலளிநீக்குமூலமாய் அருமையாக
சொல்லி இருக்கீங்க நண்பரே....
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
அன்பின் கருத்துரைக்கு நன்றி..
அக்கா தங்கை உரையாடலுக்கிடையே நண்பர்களையும் அழைத்துச் சென்ற விதம் அருமை.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
ரசித்துப் படிக்க வைத்த உரையாடல் ஐயா...
பதிலளிநீக்குஎங்க எல்லாரையும் இழுத்து விட்டு...
படங்கள் அம்மனை தரிசித்த சந்தோஷத்தைக் கொடுத்தன...
அன்பின் குமார்..
நீக்குஎல்லாம் நல்லதொரு உற்சாகம் தானே!.
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உங்கள் ஊர்க்காரர்கள் எல்லோரையும் சொல்லி அருமையான உரையாடல் வழியாகப் பலதகவல்களை, நாடியம்மன் பற்றியும் அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. அருமை...தொடர்கின்றோம் அடுத்த உரையாடல்..
பதிலளிநீக்குஅன்பின் துளசிதரன்..
நீக்குநேரில் பார்க்க நாட்கள் பலவானாலும் - பதிவுகளில் ஒருவருக்கு ஒருவர் அன்பினை பரிமாறிக் கொள்வது நல்லது தானே!..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..