நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 20, 2016

மாமதுரைத் திருவிழா 6


மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
பத்தாம் திருநாளாகிய நேற்று (19/4) காலை -
ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்தது.

தொடர்ந்து -

பத்தாம் திருநாள் மற்றும் பதினொன்றாம் திருநாள் நிகழ்வுகளை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின் 
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!.. (37) 

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


பத்தாம் திருநாள் (19/4) வைபவம்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம் 

-: காலை :- 
அதிகாலை 4.00 மணியளவில் புறப்பாடாகிய இளங்கிளி மீனாள்
சித்திரை வீதிகளில் வலம் வந்தருளி - முத்துராமையர் மண்டபத்தில்
கன்னி ஊஞ்சலாடி அருளினாள்.

அதன் பின் - திருமண மண்டபத்திற்கு எழுந்தருள,
திருக்கல்யாணம் கோலாகலமாக நிகழ்ந்தது.

-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசர் யானை வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை 
ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும்
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.






ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 
இன்று காலை 
பதினொன்றாம் திருநாள் (20/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருத்தேரோட்டம்!..

-: காலை :-
தேரடி கருப்ப ஸ்வாமிக்கு பூஜைகள் நிகழ்ந்தபின் அதிகாலை  
ஐயன் சுந்தரேசப் பெருமானும் அன்னை மீனாட்சி அம்பிகையும் 
திருத்தேருக்கு எழுந்தருளினர்.

காலை 6.00 மணியளவில் 
ஹர ஹர சுந்தரா.. மீனாட்சி சுந்தரா.. 
எனும் முழக்கங்களுடன் 
திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.












பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில்
திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் கோலாகலமாக நிகழ்ந்தது.

-: இரவு :-
ஸ்ரீசுந்தரேசப்பெருமானும் அங்கயற்கண் அம்பிகையும் 
சப்தாவர்ண சப்பரத்தில் ஆரோகணித்து 
மாசி வீதிகளில் வலம் வந்தருள்வர்.


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!.. (50)
-: அபிராமி அந்தாதி :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி வழக்கம் போல் அழகிய புகைப்படங்கள் மாமதுரைத் திருவிழா 6 நன்று
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி நமது சகோதரர் தேவகோட்டை திரு. ஜி. கணேசன் அவர்கள் தங்களை நலம் விசாரித்தார் தங்களது பதிவுகளை எனது செல்லின் வழியே தொடர்கின்றார்.

      நீக்கு
    2. ஜியே...ஜிக்காக சொல்லிக்கிட்டார்.... போல...வாழ்க நலம்

      நீக்கு
  2. சித்திரை தேரோட்டம்...அருமை...

    பதிலளிநீக்கு
  3. பதிவு அருமை
    பதிவில் படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... அன்னையின் திருக்கல்யாணப் படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  5. தேரோடும் வீதியிலே....என்று பாடலாம் போல அழகான புகைப்படங்கள்!! தகவல்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. அயல்நாட்டிலிருந்து பதிவுகள் எழுதினாலும் அதைச் செம்மைப்படுத்த புகைப்படங்கள் உதவுகின்றன கொடுத்ட்கு உதவிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. ஊர் கூடி தேர் இழுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது தானே முன் வந்து தேர் இழுக்கும் சிறு வயது இளைஞர்கள் உற்சாகத்துடன் தேர் இழுத்து சென்றதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. மதுரையம்பதியைப் பற்றி தஞ்சையம்பதியில் கண்டேன்,, அழகு அழகு அருமை

    பதிலளிநீக்கு
  9. மதுரையம்பதியைப் பற்றி தஞ்சையம்பதியில் கண்டேன்,, அழகு அழகு அருமை

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..