நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 17, 2013

சரணம் ஐயப்பா

இருமுடி தாங்கி ஒருமனதாகி 
குரு எனவே வந்தோம்!..
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!.. 

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே!.. 
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே!.. 
ஐயப்பன்மார்களும்  கூறிக் கொண்டு 
ஐயனை நாடிச் சென்றிடுவார்!..
சபரி மலைக்குச் சென்றிடுவார்!.. 

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கார்த்திகை மாதம் மாலையணிந்து 
நேர்த்தியாகவே விரதம் இருந்து 
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப் 
பார்க்க வேண்டியே தவமிருந்து 
இருமுடி எடுத்து எருமேலி வந்து 
ஒருமனதாகி பேட்டை துள்ளி 
அருமை நண்பராம் வாவரைத் தொழுது 
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 


அழுதை ஏற்றம் ஏறும் போது 
ஹரிஹரன் மகனைத் துதித்துச் செல்வார் 
வழிகாட்டிடவே வந்திடுவார் 
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்!..
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவார் 
கரிமலை இறக்கம் வந்த உடனே
திருநதி பம்பையைக் கண்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி சங்கரன் மகனைக் 
கும்பிடுவார் சங்கடம் இன்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்!..

தேக பலம் தா!.. பாத பலம் தா!..
தேக பலம் தா!.. பாத பலம் தா!.. 

தேக பலம் தா - என்றால் 
அவரும் தேகத்தைத் தந்திடுவார்!.. 
பாதபலம் தா  - என்றால் 
அவரும் பாதத்தைத் தந்திடுவார்!..
நல்ல பாதையைக் காட்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

சபரி பீடமே வந்திடுவார்!.. 
சபரி அன்னையை பணிந்திடுவார்!.. 
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு  வணங்கிடுவார்!..
சபரிமலை தனை நெருங்கிடுவார் 

பதினெட்டுப் படி மீது ஏறிடுவார் 
கதி என்று அவனைச் சரணடைவார் 
மதிமுகம் கண்டே மயங்கிடுவார் 
ஐயனைத் துதிக்கையிலே 
தன்னையே மறந்திடுவார்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!..

சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!..
சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!.. 

முப்பது வருடங்களுக்கும் மேலாக - ஐயப்ப பக்தர்களின் உயிரில் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கும் இப் பாடலை - மீண்டும், ஐயப்ப பக்தர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். 


ஐயப்பா சரணம்!.. 
உன் அருளாலே உன்னை வணங்கி 
மாலையணிந்து 
விரதம் ஏற்கின்றேன்!.. 

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..


18 கருத்துகள்:

  1. ஐயப்ப சுவாமியின் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ இங்கே
    அனைவருக்கும் மனமுவந்து வாழ்த்துரைப்போம் .ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!. அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.
      அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தங்களின் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  3. // பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும்
    காலுக்கு மெத்தை
    சுவாமியே அய்யப்பா! //
    எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத அந்த கணீர் குரல் பாட்டை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி!

    கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.
      அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.
      அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  5. பிரபலமான பாடல்வரிகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.
      அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  6. பெயரில்லா17 நவம்பர், 2013 12:31

    சாமியே சரணம் ஐயப்பா!..
    வீரமணி அவர்கள் பாடிய அருமையான பாடல் இது.
    பதிவில் வழங்கியமைக்கு நன்றி!..
    செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!. அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  7. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

    பிரபலமான பாடல்வரிகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!. அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தாங்கள் வருகை தந்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  8. சாமி ஸரணம்!

    சாமியே சரணம் ஐயப்பா!
    இனிய பதிவு!

    அனைவருக்கும் நல் ஒளிர் மிளிரும் கார்த்திகைத் திருநால் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!. அன்பின் நல்வாழ்த்துக்கள்!.
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  9. அருமையான பாடலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.. அன்பின் நல்வாழ்த்துக்கள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..