நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 02, 2013

தீபாவளி

அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

நிறைந்த மங்கலங்களுடன் கூடிய நிகழ்வுகள் - தீபாவளி அன்று தான் - என புராணங்களில் உள்ளதாக, பலவிதமான தகவல்கள்!..


அவை எல்லாவற்றுள்ளும் - மனம் நிறைந்த ஐதீகம் விளங்குகின்றது. எனினும்,

தீபாவளியைப் பற்றி சொல்லப்படும் நிகழ்வுகளுள் உளம் நிறைந்ததாக விளங்குவது,

பராசக்தியாகிய அம்பிகை - தன்னை அலட்சியம் செய்த பிருங்கி முனிவனின் ஆணவம் அழிய, கெளதம மகரிஷியைக் குருவாகக் கொண்டு, அவர் உபதேசித்தபடி கடுந்தவம் மேற்கொண்டு - ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றனள் என்பது தான்!..


இப்படி - அம்பாள் ஈசனின் திருமேனியில் செம்பாதியாக இடம் பெற்ற நாள்  - தீபாவளி என்று கொள்ளலாம்.


பெண்மை தன் லட்சியத்தில் வென்ற நாள் தீபாவளி!.. 
- எனக்  கொண்டாலும் தவறேதும் இல்லை!..


திருச்செங்கோட்டில் மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வர திருமேனி விளங்குகின்றது. அர்த்த நாரீஸ்வர திருவடிவம் - தேவார திருமுறைகளில் பலநூறு இடங்களில் புகழப்படுகின்றது. பற்பல திருக்கோயில்களிலும் திருக்கோட்டத்தில் உமையொருபாகன் வடிவம் விளங்குவதைக் காணலாம்.


திருஅண்ணாமலையில் கார்த்திகையன்று மட்டுமே - மகாதீபம் ஏற்றிய வேளையில் மூலஸ்தானத்தில் இருந்து  வெளியே எழுந்தருளும் மூர்த்தியாக அர்த்தநாரீஸ்வர திருமேனி திகழ்கின்றது.


தீபாவளி அன்றுதான் பாற்கடலில் தோன்றிய மஹாலக்ஷ்மி - பரந்தாமனுக்கு மாலையிட்டாள் - என ஒரு ஐதீகம்.

எல்லோரும் சொல்லும் நரகாசுரன்  கதையில்  - நரகாசுரனை வீழ்த்தியவள் - சத்ய பாமா!..


பகீரதனின் கடுந்தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் - தன் ஜடாமகுடத்தில் இருந்து மிகச்சிறிய அளவாக கங்கையை விடுத்த வேளை தான்  -

தேய்பிறைச் சதுர்த்தசியின் பிரம்ம முகூர்த்தம்!..

தீபாவளி அன்று சூர்யோதயத்திற்கு முந்திய பொழுதில் அனைத்து தீர்த்தங்களும்  - கங்கையாகித் திகழ்கின்றன.

கங்கையின் வருகையினால் - பூமி புனிதம் அடைந்த நாள். அதனால் தான்  -

''கங்கா ஸ்நானம் ஆயிற்றா!..'' - என, அனைவரும் மகிழ்வுடன் கேட்பது!..


இந்நாளில் தான் குபேரன் சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் இருந்து புஷ்பக விமானத்தையும் சங்க நிதி பதுமநிதி - இவற்றையெல்லாம் திரும்பப் பெற்றான்.

வடபாரதத்தில் - லக்ஷ்மி பூஜையுடன் குபேர பூஜையும் செய்து - புதுக்கணக்கு எழுதுவர் என்பது யாவரும் அறிந்த உண்மை!..

ஆக - தீபாவளி என்பது அனைவரும் விரும்பிக் கொண்டாடப்படும் பண்டிகை என்பதில் ஐயம் ஏதுமில்லை!..  


''..தீபாவளி எனில், தீப - ஆவளி. தீபங்களின் வரிசை. ஆகையால் இந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும்!..''

- என்று திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் உபன்யாசத்தில் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.


ஆக,  தீபாவளி - அனைவருக்கும் இனிய பண்டிகையாக விளங்குகின்றது.

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி 
ஆயிரம் இருக்குது சுபதினம் 
அடுத்தவர் நலத்தை மதிப்பவர் தமக்கு 
ஆயுள் முழுவதும் சுபதினம்!..  

- என்று ஒரு திரைப்பாடலைக் கேட்டிருக்கின்றோம்!..


ஆகையினால்- இயன்றவரை - இந்த நன்னாளில் அற்றார்க்கும் அலந்தார்க்கும் இயன்றவரையில் உதவிகளைச் செய்து மகிழ்ச்சியில் திளைப்போம்!..


குருநாதராகிய திருமூலர் சொல்கின்றார் -

''..நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!..''

நாம் உய்வடையும் வழிக்கு உயர்ந்தோர் 
வாக்குகளை தலைமேற் கொண்டு வழி நடப்போம்!..

 வாழ்க வையகம்!..
வாழ்க மானுடம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

26 கருத்துகள்:

  1. என் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  2. முத்தான பகிர்வுகள் என்றும் இங்கே
    முழு நிலவாகத் திகழட்டும் இறைவனவன்
    பொற்பாதம் பணிந்து ஏற்றும் தங்கள்
    பொன்னான மனம் போல .........

    பதிலளிநீக்கு
  3. உளங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  4. தித்திப்புத் திருநாள் தீபாவளி வாழ்த்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  5. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  6. இனியா வாழ்த்துக்கள்.

    சாரி. சாரி.. ஹி ...ஹி ...

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  7. அருமையான பதிவு. தித்திப்புத் திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  8. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  9. இருந்தாலும் நரகாசுர வதம்தான் தீபாவளியின் முக்கிய காரணமாக எல்லோராலும் அறியப் படுகிறது. தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா!.. தீபாவளி என்றால் - நரகாசுர வதம் தான் என்று பிரதானமாகி விட்டது.ஆனால் - அதன் உட்பொருள் வேறு.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  10. நாளும் விடாது, எழுத்தால் பக்தியைப் பரப்பும் திருத்தொண்டர் நீங்கள். தீபாவளியன்று கேட்க வேண்டுமா! அர்த்தநாரீஸ்வரருக்கும் தீபாவளிக்கும் உள்ள தொடர்பு இன்று தான் பலருக்கும் தெரிந்திருக்கும். நன்றி. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களுக்கு என் பணிவான வணக்கம். எல்லாரும் இன்புற வேண்டும் என்பதே நோக்கம். அது இறையருளாலும் குருஅருளாலும் தங்களுடைய நல்லாசிகளினாலும் நிறைவேறும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  11. அன்பின் துரை செல்வராஜு

    அருமையான் பதிவு - தீப ஒளித் திருநாள் பற்றிய பதிவு - அருமை அருமை - எத்தனை எத்தனை விளக்கங்கள் - அத்தனையும் முத்துக்கள் - தேர்ந்தெடுக்கப் பட்ட படங்கள் - இரசித்துப் ப்டித்து மகிழ்ந்தேன் - இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. மிக்க மகிழ்ச்சி..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  12. அன்பின் துரை செல்வராஜு - வாரியார் சுவாமிகள் கூறிய அரிய அறிவுரை - ''..தீபாவளி எனில், தீப - ஆவளி. தீபங்களின் வரிசை. ஆகையால் இந்த நாளில் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும்!..'' நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..வாரியார் சுவாமிகள் எனும் தமிழ்க்கடல் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் பெற்ற பிறவிப்பேறு.

      தங்களின் கருத்துரைக்கும் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி!.. எங்கும் மகிழ்ச்சியும் மங்களமும் நிறைவதாக!..

      நீக்கு
  13. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா!

    நல்ல அருமையான பகிர்வு ஐயா! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. சகோதரி.. தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..