நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


திங்கள், பிப்ரவரி 25, 2013

குவைத்

பிப்ரவரி 25 - தேசிய தினம் (National Day)

குவைத் மிகச் சிறிய நாடு.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் எண்ணெய் வளத்தை ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு.

இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் கிழக்கில் அரபு வளைகுடாவும்  - எல்லைகளாக அமைந்துள்ளன.


குவைத் நகரம்  நாட்டின் தலைநகரமாகும்.

அரபு வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள குவைத் நகரிலேயே பாராளுமன்றமும் பெரும்பாலான அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன.


மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சார, பொருளாதார மையமாகவும்  குவைத் திகழ்கின்றது. நிறைய உயர் கல்விக்கூடங்கள் விளங்குகின்றன. 

2007 இல் இந்நாட்டின் மக்கள்தொகை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாழ 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர்.

இஸ்லாம் தேசிய மதம். இந்நாட்டின்  குடிமக்கள், 75 - 80 சதவிகிதத்தினர் சன்னி பிரிவினர்.மற்றையோர் ஷியா பிரிவினர்.


இந்நாட்டில் வசிக்கும்  வெளிநாட்டினரில், 
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 3 - 4 லட்சம்.
இந்துக்கள் எண்ணிக்கை 3 லட்சம்.

பெளத்தர்கள் ஒருலட்சம் பேர்.
சீக்கியர்கள் பத்தாயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

  
ஈத்-உல்-ஃபிதர் எனும் ரமலான் (நோன்புப் பெருநாள்) ஈத்-உல்-அத்ஹா எனும்  பக்ரீத் (தியாகப் பெருநாள்) ஆகியன பெருஞ்சிறப்புடன் அனுசரிக்கப்படுபவை.

தேசிய தினத்தையும் (National Day)
)தன்னாட்சியுரிமை நாளையும் ( Liberation Day ) 
கொண்டாடும் குவைத் வாழ்க!...


வாழும் மண்ணிற்கு நல்வாழ்த்துக்கள்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக