இந்த மாசி மாதத்தின் வளர்பிறை திரயோதசியும் தேய்பிறை திரயோதசியும் முறையே - பிப்ரவரி-23 மற்றும் மார்ச்-9 ஆகிய நாட்களில் சனிக்கிழமையில் நிகழ்வுறுகின்றன.
பிரதோஷ வழிபாடு செய்யும் அன்பர்கள் இதனை மகாபிரதோஷம் என சிறப்பிக்கின்றனர்.
பிரதோஷ வேளை - ஐந்து வகையாக குறிப்பிடப்படுகின்றது..

தினமும் மாலை வேளை - நித்ய பிரதோஷம்.
வளர்பிறை (சுக்லபட்சம்) - பக்ஷ பிரதோஷம்.
தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)- மாத பிரதோஷம்.
தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை - மகா பிரதோஷம்.
சர்வமும் ஈசனிடம் ஒடுங்கும் காலம் - பிரளயப் பிரதோஷம்.

மனிதர்களாகிய நாம் - நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதே சமயம் தெரிந்தோ தெரியாமலோ சில நன்மைகளையும் செய்து விடுகின்றோம். நன்மைகளுக்குப் பலன் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் -
இலகுவான குற்றங்கள் இறைவன் சன்னிதியில் மன்னிக்கப்படும் நேரம்தான் பிரதோஷ வேளை. பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்பதாகும். (தோஷம் - குற்றம்). அதனால்தான் - நமது சமய ஆசாரங்களில், மாலை நேரத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது என்பது வலியுறுத்தப் படுகின்றது.
பிரதோஷ வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் , பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் பெருமானை வணங்குவதாக ஐதீகம். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும் அவரது வாகனமாகிய நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
எண்ணெய், திரவியம், பால், தேன்,
தயிர், பன்னீர், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் இவைகளால் அபிஷேகம்
செய்தபின் வில்வம் மற்றும் நறுமண மிக்க மலர்கள் மற்றும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்வர்.
நந்தியம்பெருமானுக்கு விசேஷமாக அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்வது வழக்கம். நிறைவாக -
நந்தி தேவரது மகாதீபாராதனைக்குப் பின்னரே மூலவரான சிவலிங்கத்திற்கு மகாதீபாராதனை நடக்கும் அப்போது நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தீபாராதனையைத் தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.
அனைத்தையும் கற்றிந்தவர் நந்தீஸ்வரர். எல்லாம் அறிந்திருந்தாலும் நந்தியம்பெருமான் மிகவும் அடக்கமானவர். சிவபெருமானின் எதிரில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும். பிரதோஷ வழிபாட்டில் உணர்த்தப்படுவது அன்பும் அடக்கமும் ஆகும்.
நந்தியம்பெருமான் தான் சைவ சமயத்தில் முதற்குருவாக உணர்த்தப் படுபவர். எம்பெருமான் அம்பிகையுடன் வீற்றிருந்து உபதேசிக்கும் அருட் கருத்துக்களை அவருடைய அனுமதியுடன் - உலக நலனுக்காக மற்ற முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உபதேசித்தருள்பவர்.
இந்த பிரதோஷ நாட்களில் விரதம் அனுசரிப்பவர்களும் உள்ளனர்.
அதிகாலையில் எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட்டு, பகல் முழுவதும் உபவாசம் இருந்து இயன்றவரை - தேவார திருமுறைகளைப் பயின்று பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபடுதல் மரபாக உள்ளது.
பற்பல நன்மைகளை அளிப்பதால் பிரதோஷ வழிபாடுகளில் மக்கள் மிகுந்த நாட்டம் உடையவராக இருக்கின்றனர்.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருட காலம் இறைவழிபாடு செய்த புண்ணியமும், சனிப் பிரதோஷத்தன்று வழிபட்டால் ஐந்து வருட காலம் வழிபாடு செய்த புண்ணியமும் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
''சிவாய நம'' என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை...''
திருச்சிற்றம்பலம்!..
* * *
திருச்சிற்றம்பலம்!..
* * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..