நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 04, 2020

மீனாக்ஷி வருக

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திடவேண்டும்..
***

இன்று மதுரையம்பதியில்
ஸ்ரீ சுந்தரேசப் பெருமானுக்கும்
ஸ்ரீ மீனாக்ஷியம்மனுக்கும்
திருக்கல்யாணம்


சுரும்பு முரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவ சிலை போற்றி
கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்தென்னை எடுத்தாண்ட 
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம்
சிலம்பும் அடிகள் போற்றி!..
-: பரஞ்சோதி முனிவர் :-


தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே நறை பழுத்த
துறைத் தீந்தமிழின் ஒழுகும் நறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர் சிமய
இமயப் பொருப்பில் விளை யாடும்
இளமென் பிடியே எறி தரங்கம்

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம் வாய்

மடுக்கும் குழற்கா டேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!..
-: குமரகுருபரர் :-




தாயே வருக.. எங்கள்
தமிழே வருக வருக!..  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ