நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 11
புதன் கிழமை
ஸ்ரீ விநாயக சதுர்த்தி
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.. (1/123)
-: திருஞானசம்பந்தர் :-
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன் ..
-: திருமூலர் :-
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-
வக்ர துண்ட மஹாகாய
சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா,.
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள
ஓம் கம் கணபதயே நம:
சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..