கடந்த திங்களன்று (4/5) தஞ்சையில் நடைபெற்ற
24 கருடசேவை மகோத்சவத்தின் திருக்காட்சிகள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...
நிகழ்ச்சியின் முதல்நாளாகிய ஞாயிறன்று
திவ்ய தேச மங்களாசாசன வைபவங்கள் நிறைவேறிய பின்,
திங்கட்கிழமை (4/5) காலையில் -
திருமங்கையாழ்வர் அன்னவாகனத்தில் எழுந்தருளி முன்னே சென்றார்..
ஆழ்வாரைத் தொடர்ந்து - திவ்யதேச மூர்த்திகளாகிய,
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளுடன் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும்
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளும் ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளும்
கருடவாகனத்தில் ஆரோகணித்து -
தஞ்சை நகரின் ஈசான்ய மூலையாகிய கொடிமரத்து மூலையில்
எழுந்தருளினர்...
தொடர்ந்து
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்மூர்த்திகள் எழுந்தருள -
நகரின் ராஜவீதிகள் நான்கிலும் கருடசேவை வைபவம் நடைபெற்றது..
இவ்வைபவத்தைத் தரிசிப்பதற்கு வெளியூர்களிலிருந்தும்
பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்...
கருடசேவை புறப்பாடாகிய திருக்கோயில்களின் விவரம்..

கடந்த ஆண்டுவரை 23 கருடசேவை என்றிருந்த வைபவம்
இந்த ஆண்டு கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவின்
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இருந்தும்
கருடசேவை புறப்பாடாகியதால்
இந்த ஆண்டு 24 கருடசேவை என்றாகியிருக்கின்றது...
நாட்டின் எந்தப் பகுதியிலும்
இப்படியான கருடசேவை வைபவம் நிகழ்வதில்லை!...
- என்று பெருமை கொண்டாலும்,
இந்தக் கோயில்கள் அனைத்துமே
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பவை
என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
இந்த ஆண்டு கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவின்
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இருந்தும்
கருடசேவை புறப்பாடாகியதால்
இந்த ஆண்டு 24 கருடசேவை என்றாகியிருக்கின்றது...
நாட்டின் எந்தப் பகுதியிலும்
இப்படியான கருடசேவை வைபவம் நிகழ்வதில்லை!...
- என்று பெருமை கொண்டாலும்,
இந்தக் கோயில்கள் அனைத்துமே
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பவை
என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
கருடசேவை புறப்பாடாகிய திருக்கோயில்களின் விவரம்..
1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்
2) ஸ்ரீ வீர நரசிம்ஹ பெருமாள்
3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்
4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்
5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை
6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்
7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்
8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை
9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை
10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்
16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை
18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்
19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேல ராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேல ராஜவீதி
21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு
22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி
23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி
24) ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி - கொள்ளுபேட்டைத் தெரு, கீழவாசல்
கடந்த திங்கட்கிழமை (4/5) நடைபெற்ற
கருடசேவை வைபவத்தினைத் தொடர்ந்து
நேற்று செவ்வாய்க்கிழமை (5/6) காலையில்
நவநீத சேவை எனப்படும் - வெண்ணெய்த்தாழி உற்சவம்
நடைபெற்றது...
இந்நிகழ்வில் - மாநகரிலுள்ள 15 திருக்கோயில்களிலிருந்து
வெண்ணெய்த்தாழி பல்லக்குகள் புறப்பாடாகின..
நான்கு ராஜவீதிகளிலும் பெருந்திரளான பக்தர்கள் கூடிநின்று
பெருமாளைத் தரிசித்து இன்புற்றனர்...
இன்று வெண்ணாற்றங்கரையிலுள்ள
திவ்யதேசத் திருக்கோயில்களில்
தீர்த்தவாரி நடைபெறுவதுடன்
கருடசேவைத் திருவிழா இனிதே நிறைவடைகின்றது...
வைபவத்தின் நிகழ்வுகளை
அழகிய படங்களாக காணொளியாக வழங்கிய
திரு.தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி...
***
குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெரிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்.. (0956)
-: திருமங்கை ஆழ்வார் :-
ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ