நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
வியாழக்கிழமை
தஞ்சாவூர் சப்தஸ்தான பெருவிழா
தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி எனப்படும் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் சப்தஸ்தான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது..
ஜூன் 1 அன்று காலையில்
வெட்டி வேர் பல்லக்கில்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி தேவியும்
விசித்திர கண்ணாடிப் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரருடன் பாலாம்பிகையும் எழுந்தருள ஜூன் 1 ஜூன் 2 ஆகிய நாட்களில் தஞ்சை வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர், கடகடப்பை, புன்னை நல்லூர், தஞ்சை கீழவாசல் மற்றும்
ராஜ வீதிகள் என
ஏழூர் வீதி வலம் நடைபெறும்...
அனைவரும் வருக
ஓம் நம சிவாய
***


கோவில் பிரம்மோற்சவம்... சிறப்பு.
பதிலளிநீக்கு