நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 25, 2025

தேங்காய்ச் சட்னி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை

இன்று பாரம்பரிய 
தேங்காய்ச் சட்னி பற்றி சிறு வரைவு..


தேங்காய்த் துருவலுடன் மிளகு ( இன்றைய நடைமுறை பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்)  உப்பு, இவைகளை தேவையான அளவில் சேர்த்து அம்மியிலோ, ஆட்டுரலிலோ பக்குவமாக அரைத்தெடுத்து இரும்பு வாணலியில்  எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலை  தாளித்து கொத்த மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கினால் அடடா! ... 

இந்நாளில் சிறிதளவு தேங்காய் துருவலுடன் பொட்டுக் கடலை பெருமளவில்  வற மிளகாயைச் சேர்த்து அரைத்து தேங்காய் சட்னி என்று உருட்டுகின்ற உணவகங்கள் இங்கே பெருகி விட்டன... இதில் மிளகாய்ச் சட்னி தனி..

வற மிளகாய் என்றைக்குமே வயிற்றுக்குக் கேடானது என்பதை நினைவில் கொள்க


பொட்டுக் கடலைக்குப் பதிலா  நிலக்கடலை சேர்த்தும் தேங்காய்ச் சட்னி செய்வதுண்டு..


தேங்காய் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது.. 

தாதுக்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக புரதம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமான கால்சியம், இரத்த உற்பத்திக்கு அவசியமான இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள வைட்டமின்கள் B, C ,E  ஆகியவை பொதிந்துள்ளன.. 

தேங்காயில் உள்ள கொழுப்பு சிறப்பு வகை  ஆகும். இது ஆரோக்கியமானது...

ஆனால் சிலருக்கு தேங்காயில் உள்ள கொழுப்பு ஒத்துக் கொள்தில்லை...
நன்றி விக்கி

வாழ்க நலம்..

நமது நலம்
நமது கையில்..

ஓம் சிவாய நம ஓம்
**

5 கருத்துகள்:

  1. அட, இந்த தேங்காய் சட்னியிலேயே நிறைய வகைகள் செய்யலாம்.  இதிலேயே கொத்தமல்லியையும் சேர்த்து அரைக்கலாம்.  இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. தேங்காய் கெடுதல், சாப்பிடக் கூடாது என்று சிலர் சொல்லிக்கொண்டு தேங்காய் போட்ட கறி கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள்.  நான் எவ்வளவோ எடுத்துச் சொல்வேன்.  ஊஹூம். 

    எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.  பட்டாம்பூச்சியில் ஹென்றி ஷாரியர் பல நாட்கள் உணவில்லாமல் இருக்க இந்தத்தேங்காய்கள் அவரை பாதுகாத்திருக்கின்றன என்று படித்திருக்கிறேன்.  அதையும் அவர்களுக்குச் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் கெடுதலல்ல. (பச்சைத் தேங்காய்). கொட்டைத் தேங்காய் அவ்வளவு நல்லதல்ல. ஹென்றி ஷாரியர் ஆங்கிலப் புத்தகம் எத்தனையோ முறை படித்திருக்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எந்த வகையான காலை உணவுக்கும் தொட்டுகையாக செய்யும் தேங்காய் சட்னிக்கு நிகர் வேறு எதுவுமில்லை. அருமையான செய்முறைகளோடு பக்குவம் சொல்லியுள்ளீர்கள். படங்களும் கண்களையும் , மனதையும் கவருகின்றன.

    எ. பியில் இன்று செய்த சீரா, மிளகு சாதத்திற்கு பொருத்தமாக இங்கு தேங்காய் சட்னியை சுவைத்து விட்டேன். அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. தேங்காயுடன் பொட்டுக்கடலையோ, வேறெதுவோ சேர்த்தால் எனக்குப் பிடிக்காது!  ஆனால் நிலக்கடலை சட்னி ரொம்பப் பிடிக்கும். ஒரு சோகம் என்னவென்றால் நமக்குத் பிடிப்பது வீட்டில் அடிக்கடி செய்யப்பட மாட்டாது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..