நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 22
வெள்ளிக்கிழமை
திருப்புகழ்
பவானி
தனதான தானத் தனதான
தனதான தானத் ... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ... தருவாயே..
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
கலை மிகுந்த
ஞான ஒளி எனும் கடலிலே குளித்து
ஆசைகளான கடலினைக் கடந்து,
பலத்த சத்தத்துடன் சமய வாதங்களில்
நான் மாறுபட்டுக் கிடக்காமல்,
இறைவனைப் பற்றிய
சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக.
மலைக்குற மகளான வள்ளியின் மனதில்
வீற்றிருக்கின்ற குமரேசனே,
வில்லைக் கையில் ஏந்தி - வள்ளிக்காக
வேடன் என வந்தவனே..
சேவற் கொடிதனை உடையவனே
செல்வமும் கல்வியும் கூடுகின்ற
கூடற்பதியாகிய பவானியில்
வீற்றிருக்கும் பெருமாளே..
**
முருகா முருகா
முருகா முருகா
ஓம்
நம சிவாய
சிவாய
திருச்சிற்றம்பலம்
***
முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா.. கந்தா என்றழைக்கவா.. கதிர்வேலா என்றழைக்கவா... எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்...
பதிலளிநீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குகார்த்திகை வெள்ளி நாளில் சேவல் கொடியோன் பாதம் பணிவோம்.
பதிலளிநீக்குகந்தா போற்றி.
கார்த்திகை பாலா போற்றி ! திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குமுருகா சரணம்...
பதிலளிநீக்கு