நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 16, 2023

வெயிலே ..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 30
சனிக்கிழமை


திருமண வைபவம் ஒன்றிற்காக மதுரைக்கு சென்றிருந்த நான் நேற்று - நமது மரியாதைக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களை  அவர்களது இல்லத்தில் சந்தித்துப் பேசியது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்..

அன்பும் அருளும் தவழ்ந்து கொண்டிருக்க
கோயிலாகத் திகழ்கின்றது இல்லம்..

திருக்கயிலாய மான சரோருவத்தில் இருந்து கொணர்ந்த தீர்த்தம் கொடுத்தார்கள்.. என்னே நான் பெற்ற பேறு!.. 

அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் வரை உருகிய கண்களும் மனமுமாக இருந்தது.. ஏனென்று தெரியவில்லை..

அவர்களது முகவரியை அன்பின் ஸ்ரீராம் அவர்கள் கொடுத்து உதவினார்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
**

 தீபாவளிக்கு முந்தைய 
வியாழன் பதிவு ஒன்றில் 
 ஸ்ரீராம் அவர்களது 
கைவண்ணத்தில் வெளியான  
வெயில் கவிதையை அடுத்து 
நானெழுதியவை இங்கே..

தீபாவளி, சஷ்டி, கார்த்திகை 
ன்று பல பதிவுகள் 
வரிசை கட்டி நின்றதனால் 
சற்றே தாமதம்..
 

வெயிலே வெயிலாய்
மழையே மழையாய்..
இருக்கட்டுமே அதில்
என்ன பிரச்சினை?..

வெயிலே வெயிலாய்
இளங்கதிர் தகிப்பாய்
மழையே மழையாய்
இளம்பனித் திதிப்பாய்
மாற வேண்டும்
மாற்ற வேண்டும்..

வெயிலே மழையாய்
மழையே வெயிலாய்
பிரிய வேண்டும்
பிரிக்க வேண்டும்..


அவசர உலகின் ஆசை
இதில் இருந்து அதையும்
அதில் இருந்து இதையும்
பிரித்திடல் வேண்டும்..

அவசர உலகின் அவலம்
இதில் இருந்து அதுவும்
அதில் இருந்து இதுவும்
பிரிந்திடல் வேண்டும்.

அதுக்கும் இதுக்கும் அளவு 
வேணுமாமே அளவு!..
அவரவர்க்கும் ஆயிரம் அளவு
அவரவர்க்கும் ஆயிரம் கனவு
எதை நம்பிக் காய்வது..
எதை நம்பிப் பேய்வது..

வெயில் நனைகின்றது
மழை காய்கின்றது
கண்டது எல்லாம் 
கண்ணைக் கெடுக்கக் 
கல்லாய்த் திரியும் மானுடமே..

அவசரம் வேண்டாம்
அவதியும் வேண்டாம்
இதோ.. இதோ..
இதில் இருந்து அவனும்
அதில் இருந்து இவனும்
எனப் பிரிந்திடுகின்றோம்..

பிரிக்க நினைத்த மானுடமே!..
பிரிந்த பின் எம்மைப்
 
பிடித்து வைத்துக் கொள் எங்காவது 
அடைத்து வைத்துக் கொள்
முடிந்தால் எதிலும்
முடிந்து வைத்துக் கொள்..

எதில் இருந்து இனி
பிழைக்க இருக்கின்றாய்?..
என்று பார்த்து
விடுகின்றோம்!..
**
வெயிலில் விளையாட 
வந்ததற்கு வெகுமதி
(காணொளியாளருக்கு நன்றி)


கடிபட்ட முதலையின்
கண்ணீர் கவிதை..

சாக்கடைத் தண்ணிக்கு தப்பித்து 
கரைக்கு வந்தால் 
நம்மள மாதிரி நாலு காலு ங்க 
மேல விழுந்து புடுங்குதுங்க..

அதுகள் தான் அப்படி.. ன்னா
இவன் வேற வெயிலு வேக்காடு.. ன்னு 
பாட்டு படிச்சிக்கிட்டு இருக்கான்.. 

இரக்கம் என்று
இல்லாமல்
ஏண்டா இப்பிடி இருக்கீங்க?..
**
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
***

16 கருத்துகள்:

  1. நான் முகவரி தரவில்லை.  அலைபேசி எண் மட்டுமே தந்தேன்.  அதுமட்டும்தான் எனக்கும் தெரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. நீங்கள் கொடுத்த தொலைபேசி எண் வழியே அவர்களுடன் பேசி முகவரியைப் பெற்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கவிதை நன்று. படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. காணொளி கண்டேன்.  என்னதான் கரையில் இருந்தாலும் அந்த முதலை வாலால் ஏன் ஒரு சாத்து சாத்தவில்லை?  ஒரு கடி கடித்தால் ஓடிவிடும் செல்லங்கள்..  அதன் பலமறியாது பயமுறுத்துகின்றன!  முதலையாருக்கு டெங்கு ஜுரம் போல...  ஜூர சமயத்தில் தண்ணீரில் இருக்க வேண்டாம் என்று கரைக்கு வந்தால் இப்படி ஒரு தொல்லையா என்று பலவீனமாய் திரும்புகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///தண்ணீரில் இருக்க வேண்டாம் என்று கரைக்கு வந்தால் இப்படி ஒரு தொல்லையா...///

      வேற என்ன வேண்டும் என்று தெரியவில்லை

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. மனஸ் ஸரோவர் - மனசரோவர் ஸரோவர் - ஏரி. மனஸ் - மனது, அறிவு புத்திசாலித்தனம்...... பல அர்த்தங்கள் உண்டு. கொடுத்துவைத்திருக்கிறது உங்களுக்கு.

    கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது மகிழ்ச்சி. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே பாடல் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புண்ணியம் மிகுந்த நேரம்...

      தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கருடா சௌக்யமா? யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. பாடலை காணொளி நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      அவரவர்க்கு வாய்த்த இடமே அவரவர்க்கு பலம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உங்கள் வரவு எனக்கும் மகிழ்ச்சி அளித்தது சகோ.
    சாரின் நினைவுகளில் உங்கள் கண்களும், மனமும் உருகியது. அவர்கள் இருக்கும் போது வந்து இருந்தால் அவர்களும் மகிழ்ந்து இருப்பார்கள்.

    கவிதை அருமை. முதலை காணொளி பார்த்தேன் ஸ்ரீராம் சொன்னது போல வாலை சூழற்றி இருந்தால் நாய் பயந்து போய் இருக்குமே! தண்ணீரில் தான் அதற்கு பலம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அவர்கள் இருக்கும் போது வந்து இருந்தால் அவர்களும் மகிழ்ந்து இருப்பார்கள்.///

      எனக்கு அந்தப்பேறு கிட்டவில்லை...

      நீக்கு
  7. கோமதிக்காவைக் கண்டது மிக்க மகிழ்ச்சி துரை அண்ணா.

    கவிதை வரிகள் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் மகிழ்ச்சியான நேரம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.
      நன்றி சகோ..

      நீக்கு
  8. காணொளி கண்டேன். செல்லங்கள் என்ன இப்படித் தைரியமா கிட்ட போகுதுங்க. முதலை கண்டுக்காம திரும்புது! ஆச்சரியமா இருக்கிறதே. ஆழம் தெரியாம காலை விட்டுப் பார்க்கற....பொழச்சுப்போ என்று நினைத்து திரும்பி நடக்குதோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழம் தெரியாம காலை விட்டுப் பார்க்கற.. பொழச்சுப்போ!.. என்று நினைத்த கதை தான்..

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..