நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 21
வியாழக்கிழமை
திருக்கார்த்திகை தீபத்தன்று திருஅண்ணாமலை
திருக்காட்சிகள்..
அன்பின் கீதா அக்கா அவர்களுக்காக
இந்தப் பதிவு..
காணொளியாளர்க்கு
நெஞ்சார்ந்த நன்றி..
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.. 1/10/1
-: திருஞானசம்பந்தர் :-
மத்தனை மதயானை உரித்த எஞ்
சித்தனைத் திரு அண்ணா மலையனை
முத்தனை முனிந்தார் புர மூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்துய்வனோ.. 5/4/3
-: திருநாவுக்கரசர் :-
விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்..
(திருஅம்மானை 10)
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அண்ணாமலையார் தீபத்திருநாள் காட்சிகளுக்கு நன்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
கீதா அக்கா கணவர் திரு சாம்பசிவம் மாமா சீக்கிரம் நலமடைய பிரார்த்தனைகள்..
பதிலளிநீக்குஎனது பிரார்த்தனையும்..
நீக்குதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் படங்கள் அருமை. கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் அவர்களின் கணவர் உடல் நலமின்றி இருப்பதாக ஊட்டங்களில் இருந்து தெரிகிறது
அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டுகிறோம்.
அண்ணாமலையார் தீபக்காட்சிகள் அருமை.
பதிலளிநீக்குகீதா அக்கா மாமா திரு சாம்பசிவம் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
கீதா
திரு சாம்பசிவம் சார் விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅண்ணாமலையார் தீபாக்காட்சிகள் படங்கள், காணொளி அருமை. தேவரங்களை படித்து அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டேன்.
படங்களும் கோயிலும் கண் கொள்ளாக்காட்சி.
பதிலளிநீக்குசகோதரி கீதாசாம்பசிவம் அவர்களின் கணவர் உடல்நிலை விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
துளசிதரன்
ஓம் நம சிவாய....
பதிலளிநீக்கு