நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 14, 2022

தேரழகு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
திரு ஐயாறதனில் நிகழ்ந்த திருத் தேரோட்ட காட்சிகள் 
இன்றைய பதிவில்..


நேற்று அதிகாலையில் யதாஸ்தானத்தில் இருந்து  
ஸ்ரீ சோமாஸ்கந்தராக  திருத்தேருக்கு ஏகினார்
ஐயாறப்பர்.. உடன் அறம் வளர்த்த நாயகி, விநாயகர் முருகப் பெருமான் சண்டிகேசர்..









காலை 9:30 மணியளவில் மங்கல இசையுடன் மகா தீபாரதனை..
 சிவகண வாத்தியங்களின் பேரொலியுடன் 
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவயானை சமேத முருகப் பெருமான் திருத் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டன..  தொடர்ந்து
ஸ்ரீ ஐயாறப்பரின் பெருந்தேர் வடம் பிடிக்கப்பட்டது..





உலுக்கு மர கைங்கர்யம்
அதைத் தொடர்ந்து ஸ்ரீ அறம் வளர்த்த அம்பிகையின் தேரும் சண்டிகேசர் தேரும் ..







" ஐயாறா.. ஐயாறா!.. " எனும் முழக்கம் எங்கும்.. பன்னிரண்டு மணியளவில் மேலரத வீதியில்  நிறுத்தப்பட்ட தேர்கள்
 மீண்டும் நான்கு மணிக்கு வீதி வலம் வந்து தேரடியில் நிலை பெற்றன...






பல இடங்களில் மோரும் பானகமும் வழங்கப்பட்டன..
சித்ரான்னங்களும் அன்ன தான விருந்து உபசரிப்பும் வழக்கம் போல..



கடைகளும் உணவகங்களும்  இன்று விடுமுறையில்.. காவல் துறை பங்களிப்புடன் திருவிழா சிறப்புடன் நிறைவு பெற்றது..

நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 6:00 மணியளவில் சப்த ஸ்தான பல்லக்கு..


நண்ணியொர் வடத்தின் நிழல் நால்வர்முனி வர்க்கு அன்று
எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர் இடஞ்சீர்த் தண்ணின்மலி சந்தகிலொடு உந்திவரு பொன்னி மண்ணின் மிசை வந்தணவு வண்திரு ஐயாறே..2.032. 4
-: திருஞானசம்பந்தர் :-

செல்வாய செல்வந் தருவாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. தேரோட்டப் படங்கள் சிறப்பு.  திருவிழா காண மகிழ்ச்சி.  திருவையாற்றில்தான் தங்கி இருக்கிறீர்களா?  இல்லை, தினம் சென்று வருகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.

    தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான விரிவான விளக்கங்களுடன் கூடிய படப் பகிர்வு. இங்கேயும் தாயுமானவர் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவும் நடந்தது, படங்கள் வீடியோவில் கிடைத்தன. இந்த வருஷம் அநேகமாக எல்லா ஊர்களிலும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சைக்கருகே உள்ள ஊரைத் தவிர்த்து! என்ன செய்யலாம்! :(

    பதிலளிநீக்கு
  4. தேரழகிற்கு நிகர் தேரழகே. கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து
    கோயில் விழாக்களை லயித்து ரசித்து வாழ்ந்த எனக்கு இதுபோன்ற விழாக்களை அதிகம் ரசிப்பேன். இப்பதிவு அந்நாள்களை நினைவூட்டின. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தேரோட்ட படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. தேரோட்டங்கள் பார்த்தே நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. ஓடும் தேரை பார்ப்பதற்கே புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். திருவையாறு இறைவனையும், இறைவியையும் மனதினிலுள் ஓடும் தேரோட்ட காட்சிகளுடன் கண்டு வணங்கிக் கொண்டேன் .பதிவில் தாங்கள் வழங்கிய தேரோட்ட படங்களும், அது குறித்த விவரணைகளும் கண்டு, படித்து தங்களுடேனேயே தேரோட்டத்தில் கலந்து கொண்ட திருப்தியும் கிடைத்தது. தாங்களும் தினமும் உங்கள் பதிவின் மூலம் இறையருள் காட்சிகளை வழங்கி வருவதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அருமை...

    ஓம் நம சிவாய....

    பதிலளிநீக்கு
  7. திருவாரூர் தேர் பார்த்து பல வருடம் ஆச்சு. அந்த ஊர் மக்களின் விருந்தோம்பல் அருமையாக இருக்கும். தேரோட்ட படங்கள் பகிர்வுக்கு நன்றி. நேரில் தரிசனம் செய்தது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. தேரோட்டக் காட்சிகள் அனைத்தும் அழகு. அதிலும் தேரில் இருக்கும் சிற்பங்கள் படங்களும், கடைசிப் படம் கோபுரமும் அதற்கு முந்தைய படம் பல படிகள் ஏறிப் போகும் அந்தப் படமும் வெகு அழகு!

    விவரங்களும் தெரிந்து கொண்டோம். எங்கள் ஊர் தேர்த் திருவிழாவும் முடிந்தது. படங்கள் வந்தன. சேமித்து வைத்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தேரோட்டம் அழகு. சப்த ஸ்தான விழா பார்க்க ஆவல். தொடரட்டும் சிறப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  10. தேரும், வீதி உலாவும், காட்சிகள் எல்லாமே அழகாக இருக்கின்றன.

    அழகான தரிசனம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..