நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 17, 2022

ஏழூர் விழா 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று வைகாசி 2 (16/5) திங்கட்கிழமை சப்த ஸ்தானப் பெருவிழா..

திருமழபாடியில் நந்தீசன் சுயம்பிரகாஷினி தேவி இவர்களது திருமணம் நிறைவேறியதும் அடுத்து வரும் விசாகத்தை அனுசரித்து திருப்பழனம் முதல் திருநெய்த்தானம் வரையிலான ஆறு ஊர்களுக்கும் மண மக்களை அழைத்து வருவதாக ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் வாக்களித்திருந்தனர்..






அதன்படி மாப்பிள்ளை பெண்ணுடன் திரு ஐயாற்றில் இருந்து காலையில் புறப்பட்ட பல்லக்குகள் உள்ளூர் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு  திருப்பழனத்திற்கு வந்து காவிரி, குடமுருட்டி ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி வழியாக திருக் கண்டியூருக்கு வந்து அங்கிருந்து திருப்பூந்துருத்தி சென்று மீண்டும் குடமுருட்டி, காவிரி ஆறுகளைக் கடந்து திருநெய்த்தானத்தை அடைந்து அங்கிருந்து எல்லாப் பல்லக்குகளும் திருவையாற்றில் எழுந்து மகா தீப ஆராதனையும் மலர் வழிபாடும் நிகழும்..



ஆயிரக் கணக்கான மக்கள் இதற்காகவே காத்திருந்து  திரு ஐயாற்றில்  இருந்து பல்லக்குகளுடன் புறப்பட்டு ஏனைய ஊர்களின் வழியாக மீண்டும் திரு ஐயாற்றிற்கு வந்து சேர்வர்..


வழியெங்கும் மோர், பானகம், 
சித்ரான்னங்கள், விருந்து உபசரிப்பு என்று பாரம்பர்யம் ஓங்கி நிற்கும்..

இந்த அளவில் கண்டியூரில் வைத்து பல்லக்குகளைத் தரிசிக்கலாம் என 4:00 மணியளவில் அங்கு சென்றேன்.. ஏறத்தாழ ஈராயிரம் பேருக்கும் மேல் கோயிலில் கூடியிருந்தனர்.. 


இதோ.. இதோ.. என்று சொல்லச் சொல்ல ஆறு மணியளவில் இளந்தூறலாக மழை தான் வந்து சேர்ந்தது..



ஒரு மணி நேரம் கழிந்தும் பல்லக்குகள் வந்து சேரவில்லை..


ஒன்பது மணிக்குத் தான் தெரிந்தது -  பல்லக்குகள் அனைத்தும் திருச்சோற்றுத்துறையில் தான் இருக்கின்றன.. அவை  திருவேதிகுடிக்கு எழுந்தருளி அங்கிருந்து கண்டியூர் வந்து சேர்வதற்கு விடியற்காலை ஆகிவிடும்  - என்பது!..

உள்ளூர் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமான அளவில நான் தஞ்சைக்குத் திரும்பி விட்டேன்..


இறையருளால்
மீண்டும் பயணம் தொடரும்..




மூலஸ்தானத்தில் சிறப்பான அலங்காரம்...
ஸ்ரீ பிரம்மனும் சரஸ்வதியும் வெள்ளிக் கவசத்தில் திகழ்ந்தனர்.. மங்களநாயகிக்கு சந்தனக் காப்பு செய்திருந்தனர்..



பல்லக்கில் ஸ்ரீ ப்ரம்ம சிரக்கண்டீசரும் மங்கள நாயகியும்.. அங்கிருந்த குருக்கள் எடுத்துக் கொடுத்த படங்கள் அவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

15 கருத்துகள்:

  1. என் அம்மா அடிக்கடி உபயோகிக்கும் பதம் ஏழூர் பல்லக்கு. அது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் சிறப்பாகவும், உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும் விஸ்தாரமான திருவிழா என்று தெரிகிறது.​ படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் தங்களுக்கு நல்வரவு.. தாங்கள் சொல்வது போல உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் திருவிழா இது..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஏழூர் பல்லக்கு - இந்த முறை வந்து பார்க்க எண்ணியிருந்தேன் - ஆனாலும் வர இயலவில்லை. வாய்ப்பு அமைய வேண்டும். தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பல்லக்கு படங்கள் சிறப்பு.
    விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. ஏழூர் பல்லக்கு முன்பு ஒரு பதிவில் போட்டு இருக்கிறீர்கள். இந்த தடவை நேரே போய் பார்த்து பதிவு அருமை.
    பல்லக்கில் எழுந்தருளி இருக்கும் அம்மனையும், அப்பனையும் தரிசனம் செய்து கொண்டேன். குருக்கள் எடுத்த படங்களும் நீங்கள் எடுத்த படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இதற்கு முன் ஏழூர் வலம் பற்றி பல பதிவுகள் இட்டிருக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. துரை அண்ணா இந்த ஏழூர் பல்லக்கு பதிவு முன்னாடி ஒரு முறை போட்டிருக்கீங்க என்ற நினைவு. அருமையான நிகழ்வு. இப்போது நீங்களே நேரில் கண்டு புகைப்படங்களோடு பதிவு படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.
    எனக்கு இதை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்லக்கு என்ன அழகு!!! மிகவும் ரசித்தேன். முன்பு நீங்கள் பல்லக்குகள் ஒவ்வொரு பகுதியாக வருவதைப் போட்டிருந்தீர்கள்.

      கீதா..

      நீக்கு
  6. ஓ குருக்கள் எடுத்துக் கொடுத்தாரா அருமை. அதான் அருகில் அம்மன் தெரிகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. படங்களும் விழாவும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அம்மை அப்பன் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. ஏழூர்த்திருவிழா பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் அவ்வளவெல்லாம் பார்த்தது இல்லை. இந்தக் கோயில்களிலேயே திருவையாறு மட்டும் 2,3 தரம் பார்த்திருக்கோம். திருவேதிக்குடியும் போன நினைவு. நாங்க போனப்போத் திருவிழாக்காலம் தான். ஆனால் எந்த எந்தக் கோயில்கள் என்பது நினைவில் வரலை. :(

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..