நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மாதத்தின்
மூன்றாவது வெள்ளிக்கிழமை..
பதினாறு பேறுகளையும்
தந்தருளும்
அம்பிகையின் திருவடிகளைச்
சிந்தித்திருப்போம்..
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
மா தேவி! நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த
வாழ்வு அளிப்பாய் சுகிர்த குண சாலி! பரி பாலி! அநுகூலி!
திரிசூலி! மங்கள விசாலி!
மகவு நான் நீ தாய் அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!..
- : அபிராமி திருப்பதிகம் :-
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே!.. (28)
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.. (37)
-: ஸ்ரீ அபிராமி பட்டர் :-
கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற
தையல் நல்லாளே.. (28)
-: வயிரவி மந்திரம் :-
-: ஸ்ரீ திருமூலர் :-
அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி பாரதியார் :-
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ
அந்த வரிகளை படிக்கும்போதே கம்பீரமான சீர்காழி குரல் மனக்காதில் ஒலிக்கிறது. அது அவர் பெருமை.
பதிலளிநீக்குஅம்மாவை வணங்கி சரணடைவோம். ஆடிவெள்ளி சிறப்புப் பதிவு அருமை.
ஓம் சக்தி...
பதிலளிநீக்குஆடிவெள்ளி சிறப்புப் பதிவு நன்று. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.
பதிலளிநீக்குஆடி வெள்ளியில் அபிராமி அந்தாதி , திருமூலர் திரு மந்திர பாடல், மகாகவி பாடல் எல்லாம் பாடி வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குநிறைவான தரிசனம்.
பதிலளிநீக்குதரிசனம் நன்று ஜி
பதிலளிநீக்கு