நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2021

ஆடிப் பூரம்

   

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று முற்பகலில் இருந்து
ஆடிப் பூரம்..


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின்
திரு அவதார நாள்..


கோதிலாக் கோதை நாச்சியார்
நம் குறைகளைக்
களைவாளாக..


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!..
- : வாழித் திருநாமம் :-

ஸ்ரீ ஆண்டாள்
திருவடிகள் போற்றி போற்றி..
***

மேலும்
முன்பொரு கல்பத்தில்
ஜகந் மாதாவாகிய
பராசக்தி அம்பிகை
கன்னிகையாய் திரு அவதாரம்
செய்திருந்த போது
பெண்மையில் பூத்து நின்ற நாள்
ஆடிப் பூரம் என்பது
ஐதீகம்..


இந்நாளில்
திருக்கோயில்களில்
அம்பிகைக்குப் பலவிதமான
வளையல்களைச் சாற்றி
ஆராதனை செய்வர்..

கும்பகோணத்தை அடுத்துள்ள
பட்டீஸ்வரம்
ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில்
அம்பிகைக்கு
பல்வளை நாயகி என்றே
திருப்பெயர்..

இந்த அளவில்
இன்றைய பதிவில்
ஜகத்காரணியாகிய
அம்பிகையின்
திருவடிகளைப் போற்றி
இச்சிறு கவிதையினைச்
சமர்ப்பிக்கின்றேன்..


தாயவளைத் தூயவளைத்
தனியமுது தந்தவளை
தண்தமிழ் ஆனவளைத்
தளிரெனத் தான் வந்தவளை
மாயவலை மாய்ப்பவளை மண்ணுலகைக் காப்பவளை
பல்வளையின் நாயகியைப்
பணிவாய் நெஞ்சே..

முத்துவளை ரத்னவளை
சங்குவளை தங்கவளை
பல்வளையும் அணிபவளை பக்தர்களைக் காப்பவளை
நெல்விளையும் வயற்சோலை வேணுவன வஞ்சியளை
பூங்குவளைக் கண்ணியளைப்
புகழ்ந்துநீ பேசுவாய் நெஞ்சே..


விண்ணவளை மண்ணவளை
வேதவடி வானவளை
முன்னவளைத் தென்னவளைத்
தென்றலெனத் திகழ்பவளை
அலைபரணிக் கரையினளை
அன்புமொழி கேட்பவளை
காந்திமதி அன்னையளை
கைகூப்பிப் பணிவாய் நெஞ்சே..

அண்ட முழுதானவளை 
அக்னி வடிவானவளை
வந்துவரம் தருபவளை
வானமழை ஆனவளை
அருணமலை உறைபவளை
அமுதமழை பொழிபவளை
கண்ணவளைக் கருத்தவளை
அன்னவளைப் போற்றுவாய் நெஞ்சே..


திசையெங்கும் நின்றவளை
திசையெட்டும் வென்றவளைத்
தென்றலெனத் திகழ்பவளைத்
தீவினைகள் தீர்ப்பவளை
பூத்தவளைக் காத்தவளைப்
புவன முழு தாண்டவளை
நறுமலர்ப் பூமுடித்தவளை
நாவாரப் பேசுவாய் நெஞ்சே...

குன்றாகக் குவித்தவளைக்
குறையாது அளந்தவளைக் 
குங்குமத்தின் நிறத்தவளை
குலம்வாழ வைத்தவளை
குணவேழன் தாயவளை
குமரேசன் அன்னையளை
கோவிந்தர்க் கிளையவளை
கோடியெனப் பேசுவாய் நெஞ்சே!..
***
இன்று
ஸ்ரீ ஆண்டாள் தரிசனத்துடன்
திருநாகை
ஸ்ரீ நீலாயதாக்ஷி
திருநெல்லை
ஸ்ரீ காந்திமதி
திருஐயாறு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
- எனத் திருக்கோலஙகள்
பதிவாகியுள்ளன..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. ஆடிப்பூர சிறப்பு பதிவு அருமை.
    உங்கள் கவிதை மிக அருமை.
    ஆண்டாள் மற்றும் அன்னைகளின் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி.

    மாயவரம் கோயிலில் ஆடிப்பூரம் அன்று களி செய்து படைப்பார்கள். பச்சைபயிறு முளைகட்டியதில் வெல்லம் சேர்த்து படைப்பார்கள்.வளையல் அணிவித்து மகிழ்வார்கள். வரும் சுமங்கலி பெண்கள், சிறு பெண் குழந்தைகளுக்கு வளையல் கொடுத்து மகிழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்...

      நீக்கு
  2. வழக்கம் போலவே அருமையான கவிதை.  ஆடிப்பூர சிறப்புப் பதிவு நன்று.  ஆனால் ஆடிப்பூரம் நாளைதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      இன்று முற்பகலில் இருந்து பூரம்...
      அந்தி மாலையில் விளக்கேற்றும் வேளையில் பூரம் இருப்பதால் இவ்வாறு சொன்னேன்.. இன்றும் நாளையும் அனுசரித்துக் கொள்ளலாம்..

      நன்றி.. நன்றி..
      வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்...

      நீக்கு
  3. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகையுடன் கருத்துரை மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. ஆடிப்பூரம் - சிறப்பான தகவல்களும் படங்களும்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூரத்தினத்தன்று தாங்கள் அன்னைக்கு படைத்த கவிதை வரிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. கவிதை வரிகளை வாசித்து மனங்குளிர்ந்தேன். மேலும் அத்தனை அன்னைகளின் தரிசனமும் கண்டு பெரும்பேறு பெற்றேன். நெல்லை அன்னை காந்திமதியின் தரிசன பகிர்வு கிடைத்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அழகிய அன்னையர்களின் படங்கள், அருமையான கவிதை மலர்ச்சரங்கள் என இன்றுதான் என்னால் காண முடிந்தது. எல்லாம் என் கர்மாவின் பலன்படிதானே அமையும். அன்று உடனடியாக வந்து இந்த ஆன்மீக அமுதங்களை பெறாததற்கு அன்னையிடமும் உங்களிடமும் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..