நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி வளர்பிறை துவாதசி..
ஸ்ரீ வாமன ஜெயந்தி..
தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு
காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும்
திருக் குமரனாக
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
திரு அவதாரம் செய்தருளிய நாள்..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்!.
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஸ்ரீ வாமன ஜெயந்தி திரு நாளில் உலகெங்கும் நலம் பெருகட்டும்.
படங்கள் அற்புதம். உலகம் காக்க ஓங்கி உலகளந்த உத்தமன் ஸ்ரீ ஹரி உதித்த இந்நாளை போற்றி அவன் புகழ் பாடி அவனை ஆராதிப்போம்.
ஸ்ரீ ஹரி பரந்தாமான் சேவடி போற்றி.
ஓம் நமோ நாராயணாய நமஃ.
தெய்வீக பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாமனனாய் வந்து உலகம் உய்வித்தவன்
பதிலளிநீக்குஇன்றும் பூவுலகைக் காப்பவன். மக்கள் துயரங்களைப் போக்கட்டும்.
கேரளத்தில் மிகவும் பிரமாதமாக்க் கொண்டாடப்படும். கேரள தேசமே பரசுராமக்ஷேத்திரம் என அழைக்கப்படுவது.
பதிலளிநீக்குதிருக் குறளப்பன் நம்மைக் காக்கட்டும்.
இறைவன் காக்க வேண்டும்...
பதிலளிநீக்குநாடு நலம் பெறட்டும்.
பதிலளிநீக்குஇப்பதிவினைக் கண்டதும் காஞ்சிபுரத்தில் நாங்கள் கண்ட உலகளந்த பெருமாள் நினைவிற்கு வந்துவிட்டார்.
பதிலளிநீக்குதமிழ்நாட்டிலும் கொண்டாடப் பட்டு வந்திருக்கிறது. இது குறித்து முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னார் நான் ஒரு பதிவும் போட்டிருக்கேன். இப்போத்தான் மெல்ல மெல்ல நம் மொழியின் சிறப்பான வார்த்தைகள் மலையாளம் போனது போல் வாமன ஜயந்தியும் ஓணமும் மலையாளத்துக்கு உரியதென ஆகி விட்டது.
பதிலளிநீக்குhttps://sivamgss.blogspot.com/2015/08/blog-post_28.html
பதிலளிநீக்குஎங்கள் மாமா வீட்டில் உண்டு இந்த பண்டிகை . மாமா திருவனந்தபுரம்.
பதிலளிநீக்குபடங்கள், பாடல் பகிர்வு எல்லாம் அருமை.
உலகை காக்க வேண்டும் உலகளந்தபெருமாள்.
வாமன ஜெயந்தி! எல்லோருக்கும் நல்லதையே பரந்தாமன் அருளட்டும்.
பதிலளிநீக்குவாமனர் திருவடிகளே சரணம் ...
பதிலளிநீக்கு