நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

வெள்ளி மணி 5

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆடி மாதத்தின்
ஐந்தாவது வெள்ளிக்கிழமை

இன்றைய பதிவில்
ஸ்ரீ அபிராம பட்டர் அருளிச் செய்த
அபிராமி திருப்பதிகத்தின்
திருப்பாடல்..


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராஜ தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள்
வெற்றி ஆகுநல் ஊழ் நுகர்ச்சி


தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி
மங்கள விசாலி

மகவு நான் நீதாய் அளிக்கொணாதோ
மகிமை திருக்கடவூரில் வாழ் வாமி
சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி
அபிராமி உமையே..



ஓம் காத்யாயனாய வித்மஹே 
கன்ய குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:


அம்பிகே பரமேஸ்வரி..
நல்லருள் புரிக.. என் தாயே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. அண்டத்தைக் காக்க அபிராமியை வேண்டுவோம்.  அவர் தாள் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நற்காலை வணக்கம் அன்பு துரை.
      எல்லா நல்ல வெள்ளிக்கிழமைகளிலும் அன்னையரைத் தரிசித்து
      அவள் புகழ் பாடவும்
      சந்தர்ப்பம் கிடைத்தது.
      காரணமும் அவளே.
      காரியமும் அவளே.
      அனைவரின் உள்ளத்தையும், உடல் நலனையும் அவளே காக்க வேண்டும்.

      நீக்கு
  2. அம்பிகையின் அருள் அனைவரையும் காத்து அருளட்டும். நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. அமிராமியின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. அன்னையின் இனிய தரிசனம் ....

    அவள் தாள் பணிவோம் ..

    பதிலளிநீக்கு
  5. அன்னையின் படங்கள் அருமை பாடலை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அம்மையின் தரிசனம் நன்று.

    படங்கள் சிறப்பு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. உலகம் முழுவதும் நன்மை பயத்திட அன்னை அருள்புரியட்டும். தரிசனம் நன்று

    படங்கள் எலலம் மிக அழகாக இருக்கின்றன துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    ஆடி வெள்ளிக் கிழமையில் அன்னையின் படங்கள் அனைத்தும் அருமை. அத்தனை அன்னையர்களையும் அன்புடன் வணங்கி, உலகம் நலம் பெற பிராத்தனைகள் செய்து கொண்டேன்

    தலை சாய்த்து அருள் பாலிக்கும் அம்மன் அவ்வளவு அழகு. ஓம் சக்தி..பராசக்தி.. என்றிட நம்முள்ளும் ஒரு சக்தி பிறக்கிறது. இந்த சக்தி நம் அனைவர் உள்ளங்களிலும் எந்நாளும் நிலைத்து நின்றிட வேண்டும்.
    🙏 🙏.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..