நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

காளீ... தருக!...

இன்று மகாகவியின்
நினைவு தினம்..

11 செப்டம்பர் 1921
எண்ணிலாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவியாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்
வெம்மையும் பெருந் திண்மையும் அறிவும்
தண்ணிலாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றெனதன்னை என்காளி
மண்ணில் ஆர்க்குந் துயரின்றிச் செய்வேன்..
வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்...

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன்
நான் விரும்பின காளி தருவாள்!...


துன்பம் இனியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக.. தீமையை ஓட்டுக..
- மகாகவி :-

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. ஓவியமும் தேர்ந்தெடுத்த கவிதையும் பாரதிக்கு மிக அழகிய சமர்ப்பணம்! மிக அருமை!

    பதிலளிநீக்கு
  2. சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம், வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழி என்றே துதிப்போம். மிக அருமையான சமர்ப்பணம்.

    பதிலளிநீக்கு
  3. பாரதி நினைவைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  4. இன்று பாரதியின் நினைவு தினம் சற்று முன் போலீஸ்காரர்களிடம் இதனைக்குறித்து பேசிக்கொண்டு இருந்தேன்.

    இதோ இன்று இப்பொழுதில் பரமக்குடியில் 6000 போலீஸ் குவிப்பு.

    ஊர் ரெண்டு பட்டுக்கொண்டு இருக்கிறது மக்களுக்கு உயிர்ப்பயம் அதிகமாகும் காலங்கள் இனி வளரும்.

    வாழ்க தாய்த்திருநாடு.

    பதிலளிநீக்கு
  5. என்ன அதாரிட்டியாக மஹாகவி எழுதியிருக்கிறார். இதைத் எல்லாவற்றையும் நான் செய்வேன் பராசக்தி அருளால்.

    நல்ல இடுகை. நல்ல சமர்ப்பணம், பாரதியின் நினைவுக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கையில் முதல் முறையாக என்னா ஒரு குட்டிப் பதிவு:) நம்பவே முடியவில்லை என்னால:)

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா நேற்று அப்புறம் உங்கள் தளத்தில் பாரதியின் பதிவு வந்திருக்கும் என்று நினைத்து வர நினைத்தேன். பதிவு சிறியதாக இருந்தும் தளம் ஓபன் ஆகவே இல்லை....ஏன் என்று தெரியவில்லை...

    துளசிதரன் : பாரதியின் பாடல்களும் பதிவும் அருமை ஐயா.

    கீதா : பாரதிக்குத்தான் எத்தனை நம்பிக்கை காளியின் மீது இல்லையா....தன் வேண்டுதல்கள் காளியின் அருளால் நடக்கும் என்ற நம்பிக்கை...இதைத்தான் உண்மையான நேர்மையான பிரார்த்தனைகளை நாம் வலிமையாக நல்ல கான்சென்ட்ரெஷனுடன் பிரார்த்தித்தால் நடக்க்கும் என்று சொல்லப்படுவதோனு தோணும். நல்ல பதிவு அண்ணா...

    பதிலளிநீக்கு
  8. அருமையான பாரதி கவிதை.
    படங்கள் அழகு.
    அன்பு நெறியில் அறங்கள் வளர வேண்டும்.சக்தி தரவேண்டும்.
    ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்.

    பதிலளிநீக்கு
  9. காளியை அன்னையாக பாடுவது.

    அன்னை வடிவமடா! இவள்
    ஆதி பராசக்தி தேவியடா! - இவள்
    இன்னருள் வேண்டுமடா! - பின்னர்
    யாவு முலகில் வசப்பட்டுப் போமடா
    அன்னையின் அருள் இருந்தாள் அனைத்தும் அடையலாம்.
    அன்னை அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  11. வறுமையில் வாடிய கவி, ஆனால் வேண்டும் பொழுது எல்லோருக்குமாக சேர்த்து வேண்டுகிறானே, இவனல்லவோ கவி.!

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு நினைவாஞ்சலி. பராசக்தியின் அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..