நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 17, 2018

இடராழி நீங்குக 1

இன்று புரட்டாசி...

அவரவரும் - குல வழக்கங்களைச் சார்ந்து
கோவிந்தனின் திருநாமம் பாடி விரதமேற்கும் மாதம்...

அன்பும் அருளும் தழைக்கும் இவ்வேளையில்
எங்கோன் கோவிந்தராஜனைப் பாடித் தலைவணங்குகின்றேன்...

இன்றைய பதிவு -
ஸ்ரீபொய்கையாழ்வார் அருளிய திருப்பாசுரங்களுடன் மலர்கின்றது..


வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.. (2082)


அரன்நா ரணன்நாமம் ஆன்விடை புள்ளூர்த்தி
உரைநூல் மறையுறையும் கோயில் - வரைநீர்
கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
உருவமெரி கார்மேனி ஒன்று.. (2086)

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு - என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி.. (2102)

கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்
தைய மலர்மகள்நின் ஆகத்தாள் - செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆகத்திறை.. (2109)


பெற்றார் தளைகழலப் போந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் - நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர் கொண்டு ஏத்துவரால் நின்று.. (2101)


இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயும் ஆவான் - பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி.. (2110)

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது.. (2120)


நன்றுபி ணிமூப்புக் கையகற்றி நான்கூழி
நின்று நிலமுழுதும் ஆண்டாலும் - என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான்மாட் டன்பு.. (2152)

அன்பாழி யாழியானை அணுகென்னும் நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி ஏத்தென்னும் - முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.. (2153)


வழிநின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவார் - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங் கடம்.. (2157)
***

புரட்டாசியில் நோற்போம்..
புண்ணியங்கள் ஏற்போம்!..

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    புரட்டாசி மாதத்தின் பகிமை அறிந்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. இடராழி நீங்குகவே என்று - தலைப்பைப் பார்த்ததும் ப்ரபந்தம் நினைவுக்கு வந்து இடுகைக்கு வந்தேன்.

    முதலாழ்வார்கள், தங்கள் முதற் பாடலில் ஒரே அர்த்தம் த்வனிக்கும்படிப் பாடியுள்ளனர்.

    பொய்கையாழ்வார், இந்த உலகமே பெரிய அகல் விளக்காகவும் நீண்ட கடல் அந்த விளக்கின் திரியாகவும், வெம்தையான சூரியனை விளக்கின் சுடராகவும் கற்பனை செய்கிறார்.

    பூத்த்தாழ்வார், அன்பு அகல்விளக்காகவும், ஆர்வம் நெய்யாகவும், மனத்தைத் திரியாகவும், ஞானத்தைச் சுடர் விளக்காகவும் கொண்டு இறைவனைத் துதிக்க ஆரம்பிக்கிறார்.

    இப்படி இரு ஆழ்வார்களும் மனமுருகிப் பாடும்போது பேயாழ்வார், அந்த இறைவனின் தரிசனம் நேரில் வாய்க்கப்பெற்று, "திருக் கண்டேன், அவன் பொன் மேனி கண்டேன், கதிரவனின் நிறமும் கண்டேன்" என்று தன் துதியை ஆரம்பிக்கிறார்.

    அருமை. புரட்டாசிஐ வரவேற்ற விதம் மகிழ்ச்சியுறச் செய்தது.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ. த..

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி...

      ஆழ்வார்கள் அளித்த அமுத விருந்தில் லயிக்கும்போது மனம் தன்னைத் தானே மறந்து விடுகின்றது....

      ஒவ்வொரு திருப்பாசுரமும்
      உயிரைக் கடைகின்றது என்றால் மிகையில்லை...

      இதற்கு விளக்கம் வரும் பதிவு ஒன்றில் தருகின்றேன்..

      மகிழ்ச்சியும் நன்றியும்...

      நீக்கு
  3. அருமையான பாசுரங்கள். அதைத் தக்க நேரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. கண்ணனைக் கட்டி இழுத்து வரும் கோபிகை(ராதை?) மனதைக் கவர்கிறாள்! மனமென்னும் கயிற்றால் கட்டினானே வந்துடுவானே! அவளுக்குத் தெரியாததா? எனினும் வெளி உலகுக்குக் காட்ட இப்படி இழுத்து வருகிறாள் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான்... அதேதான்...
      அவளுக்கும் தெரியும்.. அவனுக்கும் தெரியும்!...

      நம் கண்களுக்குத் தெரியவேண்டாமா!. கருத்துக்குத் தெரியவேண்டாமா!...

      அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே.. என்றனர் ஆன்றோர்...

      அதுதான் இந்தக் கயிறு விஷயம்...

      தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
    2. "கட்டினானே" இல்லை, கட்டினால் தானே வந்துடுவானே எனப் படிக்கவும். தவறைக் கவனிக்கலை! :) என்றாலும் அவன் நம் மனதைத் தன் அன்பெனும் கயிறால் கட்டினான் தான்! :)

      நீக்கு
    3. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இதெல்லாம் தவறாகப் பிடிபடவில்லை...
      பொருள் விளங்கிற்று தானே...

      வாழ்க நலம்...

      நீக்கு
  4. இப்போத் தான் தொலைக்காட்சியில் பிரம்மோத்சவ மலையப்பர் தரிசனமும் கிடைச்சது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையப்பனின் தரிசனம் - Fb ல் வந்தது - ஒன்றிரண்டு படங்கள் தான்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான புரட்டாசித் தொடக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரட்டாசியின் புண்ணியங்கள் எல்லாருக்கும் ஆகட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. என் போன்றோர்பாசுரக்கள் அதிகம்படிக்காதவர்கள்பொழிப்புரையும் கூறி இருந்தால் நலமாயிருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  7. புரட்டாசி மாதம் சிறப்பாக ஆரம்பித்து விட்டது.
    பொய்கையாழ்வார் பாடலுடன் பதிவு மலர்ந்து விட்டது மகிழ்ச்சி.
    நெல்லை சொன்ன பாடல்கள் படிக்கும் போது மனபாடப் பகுதி.
    பாசுரங்கள் பகிர்வுக்கு நன்றி.
    படங்கள் மிக பொருத்தம்.
    அன்பால் கட்டி வைக்கலாம்
    அன்புக்கு கட்டுப் படும் தாமோதரன் அல்லவா?


    பதிலளிநீக்கு
  8. பெருமாளுக்குகந்த பாசுரங்கள்.
    புரட்டாசி இனிதே பிறந்து விட்டது. இனி அனைத்துக் கோவிலகளிலும் உத்சவங்கள் தொடங்கும்.
    அனைவரும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. அதுக்குள் இவ்வருடப் புரட்டாசியும் பிறந்து விட்ட்டதே.. என்னா ஸ்பீட்டூஊஊ:).

    பதிலளிநீக்கு
  10. அருமையான பாசுரங்கள்.

    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  11. அருமையான தொடக்கம்...

    சிறப்பான பகிர்வோடு..ஓம் நமோ நாராயணா

    பதிலளிநீக்கு
  12. துளசிதரன்: ஓ புரட்டாசி மாதம் தமிழ்நாட்டில் ரொம்பவே சிறப்பு இல்லையா...அழகான பாடல்களுடன் சிறப்பான பதிவின் முதல் பகுதி.

    கீதா: பாசுரங்கள் அழகு. கஜேந்திர மோக்ஷம் படம் பார்க்கும் போதோ யாரேனும் கதை சொல்லிக் கேட்டாலோ குறிப்பிட்டாலோ உடனே எனக்கு பாரதியின் காலா உன்னை நான் சிறு புல்லென மிதிக்கிறேன் பாடலில் வரும் ஆதி மூலா என்று கதறிய யானையைக் காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே வரிகள் நினைவுக்கு வரும்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..