நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 26, 2017

முருக தரிசனம் 3

தஞ்சை மாநகருக்குள் இலங்கும் முருகன் திருக்கோயில்களைத்
தரிசனம் செய்து கொண்டிருக்கின்றோம்..
மேல அலங்கம், குறிச்சித் தெரு, அரிசிக்காரத் தெரு மற்றும்
ஆட்டுமந்தைத் தெரு ஆகிய நான்கு இடங்களிலுள்ள கோயில்களை
முந்தைய பதிவுகளில் கண்டோம்..

இன்றைய பதிவில் காணும் இரண்டு திருக்கோயில்களுடன்
இந்தத் தொடர் நிறைவடைகின்றது...

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்..
வடக்கு அலங்கம் -  வடக்கு ராஜ வீதி





வடக்கு ராஜவீதி ஸ்ரீகாளி கோயிலின் அருகே பிரியும்
பூக்குளம் சாலையில் அமைந்துள்ளது..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள்
மாலை நேர சூரியனின் கதிர்கள்
மூலவரைத் தழுவிப் படர்கின்றன..

திருக்கோயிலுக்குள் சிவ சந்நிதிகளும் திகழ்கின்றன...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
கொடிமரத்து மூலை பேருந்து நிறுத்தத்தில் 
இறங்கினால் - அரை கி.மீ தொலைவில் கோயில்..
*** 

ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்..
பூக்காரத்தெரு (ஜங்ஷன் அருகில்)






மூலஸ்தானத்தில்
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன்
திருமுருகன் திகழ்கின்றனன்..
மூலவருக்கு அருகிலும்
பஞ்சலோக திருமேனிகள் விளங்குகின்றன..

இந்தத் திருமேனிகள் நூறாண்டுகளுக்கு முன் 
திருச்செந்தூரில் பணி புரிந்த தஞ்சைவாசி ஒருவருக்கு
அங்கிருந்த துறவி ஒருவரால் வழங்கப்பட்டது...

அவர் அந்த விக்ரகங்களுடன்
சிறு குடில் ஒன்றினை அமைத்தார்..

காலப்போக்கில் 
அழகான கோயிலாக மலர்ந்து
இன்றைய நாளில் கொடிமரத்துடன்
இரண்டு திருச்சுற்றுகளை உடையதாக
விளங்குகின்றது - திருக்கோயில்...


தஞ்சை மக்களின் செல்லப்பிள்ளையாகத்
திகழ்பவன் பூக்காரத் தெரு முருகன்..

திருக்கோயிலைச் சார்ந்து
பூச்சந்தை அமைந்துள்ளது...
ஏராளமான காய்கறிக்கடைகளும் இருக்கின்றன..
அருகம் புல்லில் இருந்து ஆட்டுக்குட்டி வரைக்கும் வாங்கலாம்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
விளார் செல்லும் பேருந்துகள் 
கோயில் வாசல் வழியாகச் செல்கின்றன..
கான்வென்ட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும் 
கோயிலுக்கு வரலாம்...
***
தஞ்சாவூர் திரு. ஞானசேகரன் அவர்கள் - ..
Fb வழியாக வழங்கிய படங்கள்
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றன..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
***

கீழுள்ள படங்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
வழங்கியவை..

அவர் தமக்கும் மனமார்ந்த நன்றி..

சிக்கல் சிங்காரவேலன்
சிக்கல் சிங்காரவேலன்
திருச்செந்தூர்



சுவாமிநாத ஸ்வாமி 
திருப்பரங்குன்றம் 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..(51)
-: கந்தர் அநுபூதி :-

முருகா சரணம் முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
கந்தா சரணம் கடம்பா சரணம்..
கார்த்திகை பாலா சரணம்.. சரணம்!..

ஓம்
சுப்ரம்மண்யோம்.. சுப்ரம்மண்யோம்.. 
சுப்ரம்மண்யோம்!..
*** 

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    முருகனின் தரிசனம் கண்டேன்

    பதிலளிநீக்கு
  2. அழகான முருகன் தரிசனம்.
    செல்லபிள்ளை முருகன் கோவில் விவரம் அருமை.
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்.

    // கான்வென்ட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி... //​

    அந்த கான்வென்டில் நான்காம் வகுப்பு வரையும், ஐந்தாம் வகுப்பிலிருந்து தூய அந்தோணியார் பள்ளியிலும் படித்தவன் நான்!

    பதிலளிநீக்கு
  4. தஞ்சையில் அதிக எண்ணிக்கையிலுள்ள கோயில்களில் முருகன் கோயில்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வழக்கம்போல் பதிவு படங்களோடு மின்னுகிறது

    பதிலளிநீக்கு
  6. முருகா சரணம்...!

    மிக அழகிய படங்கள்..

    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்
    உள்ளத்தில் அமைதியுண்டோ - முருகா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..