நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 03, 2017

எங்க ஊர் திருவிழா

தஞ்சையில் சித்திரைப் பெருந்திருவிழா..

கடந்த ஏப்ரல் 21/4 வெள்ளியன்று -
காலை ஏழு மணியளவில் தஞ்சை பெரிய கோயிலில்
சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் மங்கலகரமாக நிகழ்ந்தது.

அதிகாலையில் -
ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருள - பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ந்தது.

இரண்டாம் திருநாளன்று (22/4)
சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமான் -
மூன்றாம் திருநாளன்று (23/4) மூஷிக வாகனத்தில் வலம் வந்தருளினார்.


நான்காம் திருநாளன்று (24/4) காலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு..
அன்று மாலை - ஸ்ரீசுப்ரமணியர் மேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

ஐந்தாம் திருநாளன்று (25/4) காலை ஸ்ரீ சுப்ரமணியர் பல்லக்கு..
மாலையில் திருமுருகன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.

ஆறாம் திருநாளன்று (26/4) காலை வள்ளி மணவாளனுக்கு சந்தனக்காப்பு...
மாலையில் சைவ சமயாச்சார்யார் நால்வர் திருவீதி உலா..

தொடர்ந்து நாளும் மூலஸ்தானத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும், வெண்ணெய்த் தாழி, பல்லக்கில் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.

ஏழாம் திருநாளன்று (27/4) காலையில் நால்வர் பல்லக்கில் உடன்வர -
ஸ்ரீ சந்திரசேகரர் பட்டம் கட்டி திருச்சுற்றில் வலம் வந்து
வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்..
அன்று மாலை ஸ்ரீ சந்திரசேகரர் சூரிய பிரபையில் திருவீதி உலா..

எட்டாம் திருநாளன்று (28/4) ஸ்ரீ தியாகராஜர் யதாஸ்தான பிரவேசம்..
காலையில் பல்லக்கில் எழுந்தருளிய சந்திரசேகரர் -
மாலையில் - சந்திர பிரபையில் திருவீதி வலம் வந்தருளினார்.

ஒன்பதாம் திருநாளன்று (29/4) அஷ்ட திக்கு துவஜாரோகணம் நிகழ்ந்தது. 
அன்று இரவு ஸ்ரீ சந்திர சேகரர் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செங்கோல் வைபவம்.

பத்தாம் திருநாளன்று (30/4) ஸ்ரீ தியாகராஜர் யதாஸ்தானம் எழுந்தருள -
மாலையில் ஸ்ரீ சந்திரசேகரர் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா..

மேலும் அன்றைய தினம் திருத்தேர் அலங்கரிப்புக்காக பந்தற்கால் நடப்பட்டது..

பதினோராம் திருநாளன்று (1/5) காலையில் பூப்பல்லக்கு.
மாலையில் பூத வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி எழுந்தருளினர்..


பன்னிரண்டாம் திருநாளன்று (2/5) ஸ்ரீ சந்திரசேகரருக்கு சந்தனக்காப்பு..
மாலையில் ஸ்ரீ சந்திரசேகரர் யானை வாகனத்தில் திருவீதி உலா..

பதின்மூன்றாம் திருநாளன்று (3/5) காலையில் பல்லக்கு..
மாலையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்கள் திருவீதி எழுந்தருளல்..

பதினான்காம் திருநாளன்று (4/5) காலையில் பல்லக்கு.
மாலையில் கயிலாய வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் திருவீதி உலா

சிறிய ரிஷப வாகனம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, மேஷ வாகனம்,  
மான் வாகனம், மயில் வாகனம் சிம்ம வாகனம், பூத வாகனம், 
வெள்ளி யானை வாகனம், பெரிய ரிஷப வாகனம், முத்துப் பல்லக்கு - 

- என, திருவீதி உலா சிறப்பாக நிகழ்வுற்ற வேளையில் -

சித்திரைத் திருவிழாவின் பதினைந்தாம் திருநாளன்று (5/5)திருத்தேர்..

விடியற்காலை நான்கு மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள்ளாக -
ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீ அல்லியங்கோதையுடன் சோமாஸ்கந்த மூர்த்தியாக மூலஸ்தானத்திலிருந்து திருத்தேருக்கு எழுந்தருள்கின்றார்..

சோமாஸ்கந்த மூர்த்தியாக ஸ்ரீ தியாகராஜர் - ஸ்ரீ அல்லியங்கோதை
முத்துமணி அலங்காரச் சப்பரத்தில் 
பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்..


தேர்த்திருவிழா - 2016
சித்திரைத் திருவிழாவின் 
பதினைந்தாம் நாள் 
பெருந்தேர்..

மே 05 வெள்ளியன்று காலை 
மகத்தான தேரோட்டம்..

மகா தீப ஆராதனைக்குப் பின் - 
காலை ஆறு மணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாக 
திருத்தேர் வடம் பிடிக்கப்படுகின்றது..

தேரடியிலிருந்து புறப்படும் திருத்தேர் - 
ஸ்வாமி தரிசனம் மற்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக - 
கீழ்க்குறிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படுகின்றது.


மேல ராஜவீதியில் -
1) ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் (உக்கடை அம்பாள் பள்ளி அருகில்)
2) ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் 
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயில் 
ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயில்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்களைக் கடந்து
3) ஸ்ரீமூலை ஆஞ்சநேயர் திருக்கோயில்
ஆகிய இடங்களிலும்,

வடக்கு ராஜவீதியில் -
4) ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில்
5) ஸ்ரீ ரத்னபுரீஸ்வரர் திருக்கோயில்
6) ஸ்ரீ குருகுல ஆஞ்சநேயர் திருக்கோயில் (FCI அருகில்)
ஆகிய இடங்களிலும்

தொடர்ந்து - கீழ ராஜவீதியில் -
7) ஸ்ரீமாரியம்மன் கோயில் (கொடிமரத்து மூலை)
8) ஸ்ரீ விட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் (அரண்மனை எதிரில்)
9) ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில்
10) ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் 
ஆகிய இடங்களிலும் -

தெற்கு ராஜவீதியில் -
11) ஸ்ரீ கலியுக வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
12) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர் திருக்கோயில்
13) ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில்
14) ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோயில் 
ஆகிய இடங்களிலும் திருத்தேர் நிறுத்தப்படும்..


திருத்தேரின் முன்பாக ஸ்ரீ விநாயகப் பெருமானும் 
ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமானும் 
அலங்கார சப்பரங்களில் எழுந்தருள்வர்..

பெருந்தேரினை அடுத்து அம்பிகை திருநிலைநாயகியாக எழுந்தருள
தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வார்..

தேரோட்டத்தின் நிறைவில் திருத்தேர் மேலராஜவீதி தேரடியில் நிலை நிறுத்தப்படும்.

தேரோட்டத்திற்குப் பிறகு - தொடரும் திருவிழாவின் -

பதினாறாம் திருநாளன்று (6/5)காலையில் முத்துப் பல்லக்கு.
மாலையில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.

பதினேழாம் திருநாளன்று (7/5)ஸ்ரீ தியாகராஜர் தோரணப் பந்தல் தரிசனம்..


பதினெட்டாம் திருநாளன்று (8/5) காலையில்
ஸ்ரீ தியாகராஜர் ருத்ரபாத மூர்த்தியாக யதாஸ்தான பிரவேசம்.

அதைத் தொடர்ந்து நடராஜர் சிவகாமசுந்தரியுடன் திருவீதியுலா.

மதியம் ஸ்ரீ சந்திரசேகரர் திருச்சுற்றில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல்.

அன்று மாலையில் - கொடியிறக்கம்.

ஸ்ரீ பிரகதீஸ்வரர் பிரஹந்நாயகியுடன் பெரிய ரிஷபத்தில் எழுந்தருள -
பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா..

அத்துடன் மங்கலகரமாக சித்திரைத் திருவிழா நிறைவடைகின்றது.

இன்றைய பதிவில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த தேரோட்ட வைபவத்தின் படங்கள் அலங்கரிக்கின்றன..


ஊர்கூடித் தேர் இழுத்தல் நமது பண்பாடு..
தொன்று தொட்டு வரும் கலாச்சாரம்..

தஞ்சையில் நிகழும் தேர்த்திருவிழாவினைக் 
கண்டு மகிழ அன்புடன் அழைக்கின்றேன்..

மகிழ்ச்சியும் பக்திப் பெருக்கும் 
ததும்புகின்ற தருணம் இது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

7 கருத்துகள்:

  1. திருவிழாக் காலங்கள்.

    பதிலளிநீக்கு
  2. புகைப்படங்களுடன் விளக்கம் தந்த தொகுப்பு கண்டு பிரமித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. ஆஹா !! அருமை ஐயா .கோவில் திருவிழா எல்லாம் புகைப்படத்தில் மட்டுமாவது ரசிக்க முடிந்ததில் சந்தோஷம் எனக்கு

    பதிலளிநீக்கு
  4. அருமையான விழா. விழா படங்கள் அழகு. விவரங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கோவில்கள் திருவிழாக்கள் எல்லாம் சிறப்பானவை எங்கள் ஊரில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் துவங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கோலாகலம்தான்

    பதிலளிநீக்கு
  6. அருமை...
    படங்களும் அருமை...
    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  7. ஓ பங்குனி சித்திரை வந்தாலே கோயில்களில் கொண்டாட்டம்தான்!!!!

    கீதா: எங்கள் ஊரான திருவண்பரிசாரத்திலும் மே 7 ஆம் தேதிதான் தேரோட்டம் நடந்து முடிந்து திருவிழாவும் முடிந்தது.!! ஆனால் என்னால் செல்ல இயலவில்லை. பலவருடங்களாகிவிட்டது...படங்களும் அருமை பகிர்வும் அருமை..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..