நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 28, 2017

நெடுவாசல் காப்போம்..



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும்
இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் போராட்டம் பன்னிரண்டு நாட்களைக் கடந்திருக்கின்றது..

எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஊருக்குள் வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

நெடுவாசல் கிராமத்தில் பூமிக்குக் கீழாக இயற்கை எரிவாயு மிகுந்திருப்பதைக் கண்டறிந்து அதனை எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது..

காவிரியின் கடைமடைப் பகுதியானது புதுக்கோட்டை..

இம்மாவட்டத்தில் வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் 
நெடுவாசலில் - இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் -

நீர் வளம் நிலவளம் பாதிக்கப்பட்டு வேளாண்மை முற்றிலும் அழிந்து போகும்.. 
எனவே இத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது!.. - என, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டத்தை தடுப்பதற்காக அந்தக் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

நெடுவாசலில் எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த ONGC அலுவலர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.. 

இது தொடர்பாக நெடுவாசல் கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ONGC மற்றும் இதர எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த எவரும் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலின் எல்லையிலும், வயல் வெளிகளிலும் கருப்புக் கொடிகளை கட்டியுள்ளனர். 

மேலும், தாய் மண்ணைக் காப்பதற்குப் போராடும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு அளித்து தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் நெடுவாசலில் கூடியுள்ளனர்..



சில ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் வண்டல் நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவைப் பெருமளவில் உறிஞ்சி எடுப்பதற்கு பாறை வாயு (Shell Gas)எனப் பெயருடன் வந்தார்கள்.. 

நாகை மாவட்டத்தில் நரிமணம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், ஆதிச்சபுரம், கமலாபுரம், கோயில் களப்பால், கூத்தாநல்லூர், மாத்தூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில்

எரிவாயுத் துளைகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் -

மிகப் பெரிய அளவில் பகாசுரத் தனமாக வந்ததும் 
மக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

இதனால் அந்தத் திட்டம் புகையாய்ப் போனது..

இப்போது மீண்டும் ஹைட்ரோ கார்பன் எனும் பெயருடன் 
மீண்டும் அதே திட்டம் திரும்பி வந்திருக்கின்றது..

இந்நிலையில் -

Facebookல் வந்த செய்தி - இதோ!..

எரிவாயுவுக்காக -
துர்க்மேனிஸ்தானில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்
சோவியத் ரஷ்யா தோண்டிய துளை விபரீதத்தில் முடிந்தது...

விளைவு -

பெருந்தீ மூண்டெழுந்தது..

தங்கள் முயற்சி தோல்வியடைந்ததும் -
அப்படியே போட்டுவிட்டு ரஷ்யர்கள் ஓடிப் போனார்கள்..

இந்த சம்பவம் நடந்த வருடம் 1971.

இன்று வரை அப்பெருந்தீயை அணைக்க முடியவில்லை..

இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது..

அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்ற அந்தப் பெருந்துளைக்கு - 
நரகத்தின் கதவு என்று பெயரிட்டிருக்கின்றார்கள்..



In The Hot, Expansive Karakum Desert In Turkmenistan, Near The 350 -Person Village Of Derweze, Is A Hole 230 Feet Wide That Has Been On Fire For Over 40 Years.

Locals Know The Crater As “The Gates Of Hell.”

Its Glow Can Be Seen For Miles Around.

The Gates Of Hell Were Created In 1971 When A Soviet Drilling Rig Accidentally Punched Into A Massive Underground Natural Gas Cavern, Causing The Ground To Collapse And The Entire Drilling Rig To Fall In. 

Having Punctured A Pocket Of Gas, Poisonous Fumes Began Leaking At An Alarming Rate. To Head Off A Potential Environmental Catastrophe, The Soviets Set The Hole Alight. The Crater Hasn’t Stopped Burning Since. 

The Soviet Drilling Rig Is Believed To Still Be Down There Somewhere, On The Other Side Of The “Gates Of Hell”.. 


Thanks to 
Mr. Ramachandran., Kovai..
Mr. Vairavan., Dvn..




In 1971, Soviet Geologists Were Drilling For Oil When They Accidentally Set Up A Rig Over An Enormous Cavern Of Natural Gas. 

The Rig Punched Through The Earth And The Desert Floor Collapsed, Taking The Rig With It.

The Newly-Formed Crater Was Now Leaking Methane Gas, So The Soviets Decided To Set The Cavern Ablaze And Let The Gas Burn Itself Off. Big Mistake. Over 40 Years Later, The Crater Is Still Burning.

Thanks to 
Motherboard.Vice.com



நெடுவாசலைத் தேடிவருபவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினாலும் இயற்கை நலம் காக்க விழையும் பல்வேறு அமைப்பினர் அவர்களுடன் கை கோர்த்துள்ளனர்.

விளைநிலங்களை கையகப்படுத்தி அவற்றில் எரிவாயுவிற்காகத் துளையிடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதே முதன்மையான  கோரிக்கையாக இருக்கின்றது..

இத்திட்டத்தினால் பல்லாயிரக்கான உழவர்கள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும்..

இயற்கையும் வாழ்வாதாரமும் முற்றாகச் சிதைந்து போகும்..

இயற்கையை அழித்து வாழ்வாதாரத்தைக் கெடுத்து மிகப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்..


இயற்கை எரிவாயு
தேவையான ஒன்றாக இருக்கலாம்..

ஆனால்,
கண்ணை விற்று சித்திரம் வாங்கினால்
நியாயம் என்றாகுமா?..

மண்ணையும் மக்களையும் 
கண்ணெனக் காப்பது அரசின் கடமை..

இயற்கை வாழ்க..
என்றென்றும் வாழ்க!..

வாழ்க நலம்..
***

13 கருத்துகள்:

  1. நெடுவாசலைப் பற்றிய அருமையான விழிப்புணர்வு. நெடுவாசல் காப்போம்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விழிப்புணர்வு கட்டுரை அருமை.
    நம்மாழ்வர் அவர்கள் பேசியதை எல்லோரும் கேட்க வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல் கண்ணை விற்று சித்திரம் வரைவது போல் தான்.
    மக்கள் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மண்ணில் வளம் காக்க வேண்டாமா!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இப்போதுள்ள நிலையில் தமிழகத்தில் வேளாண்மை படுத்துவிட்டது- நீர்வளம் இன்மையால். காவிரி வறண்டு விட்டது. வீராணம் வறண்டுவிட்டது. தாமிரவருணியும் சுருங்கிவிட்டது. புதுக்கோட்டையும் வேளாண்மை இன்றி வறண்டுபோகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் அரசு ஒருபுறம்; மீத்தேனுக்காக களம் இறங்கும் அரசு ஒருபக்கம். இடையில் விவசாயம் நசுக்குண்டு இறுதி மூச்சை விடும் நிலையில் உள்ளது. மக்களின் போராட்டத்திற்கு நமது வாழ்த்து. நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய மனக்குமுறலைக் கொட்டி விட்டீர்கள்..

      இவ்வளவும் ஆன பிறகு ஒரு கூட்டம் நாட்டு நலத்திற்காக தியாகம் செய்யுங்கள் என்கின்றது.. எங்கே போய் முட்டிக் கொள்வது?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வாடிவாசல் போராட்டத்துக்குப் பிறகு நெடுவாசல் போராட்டம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் ரஷ்யாவின் துர்க்மேனிஸ்தானைப் பார்த்தாவது நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். இயற்கை எரிவாயுவை விட முக்கியமான மண் வளமும், இயற்கையும். ந்ல்ல விழிப்புணர்வூட்டும் கட்டுரை! நெடுவாசலைக் காப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எரிவாயுவை விட முக்கியமானவை - மண் வளமும் மக்கள் நலமும்!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
    நெடுவாசல் காப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..