நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

நல்வாழ்த்துகள்..

மகிழ்ச்சியாக இருக்கின்றது...

எனும் சிறப்பான தளத்தில் 
செம்மையான பதிவுகளை வழங்கி வருகின்ற -

மதிப்புக்குரிய திரு ஹரிணி அவர்களுக்கு
குறள் நெறிச் செல்வர் 
எனும் விருது வழங்கப்பட்டிருக்கின்றது..


சிறப்புடைய விருது மேலும் சிறப்புடையதாகி இருக்கின்றது..

நேற்று மாலை தஞ்சையில் நடந்த -
உலகத் திருக்குறள் பேரவையின் 
நாற்பத்து மூன்றாவது ஆண்டு விழாவின் போது 
திரு ஹரிணி அவர்கள் 
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்..

இவ்விருது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது 
திருக்கரங்களால் வழங்கப்பட்டிருக்கின்றது..

இந்தச் செய்தியினை -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள் 
தனது FB  பக்கத்தில் பதிவு செய்திருந்தார்..

விடியற்காலையில் இச்செய்தியினைக் கண்டதுமே 
மனதில் மகிழ்ச்சி ததும்பியது..


இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும் 
திரு கரந்தை JK அவர்களைத் தொடர்பு கொண்டு 
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்..

மேலதிக தகவல்கள் திரு கரந்தை JK அவர்களுடைய 
தளத்தில் வெளியாகும்..

பதினைந்து நாட்களாகவே எனக்கு உடல் நிலை சரியில்லை..

தலைவலியும் காய்ச்சலும் விட்டு விட்டு வருகின்றன...
தற்போது இங்குள்ள குளிர் காற்று ஒத்துக் கொள்ளவில்லை..

பதிவுகளில் மும்முரமாக இயங்குதற்கு 
சற்றே சிரமமாக இருக்கின்றது..

ஆயினும்,
அன்பு நண்பருக்கு அளிக்கப்பட்ட விருது மகிழ்ச்சியை 
அள்ளித் தந்திருக்கின்றது...

அந்த மகிழ்ச்சியுடன் தான் இன்றைய பதிவு..


தனக்கென்று ஒரு முத்திரையுடன்
தமிழ்ப்பணி ஆற்றி வரும் திரு ஹரிணி அவர்கள் 
மேலும் பற்பல சிறப்புகளை எய்திட வேண்டும் என்று 
மனமார வாழ்த்துகின்றேன்..



வாழ்க நலம்..
வாழ்க பல்லாண்டு..
***

21 கருத்துகள்:

  1. திரு. ஹரிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    குறள் நெறிச் செல்வர் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
    படங்களுடன் தகவல் தந்த உங்களுக்கும், சகோ கரந்தை ஜெயக்குமாருக்கும் நன்றி.


    உடல் நலம் சரி இல்லையா? உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்க்கள்.
    எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் காய்ச்சல், சளி, இருமல் என்று மிகவும் அவதி பட்டு விட்டோம். இப்போது நலம்.
    பூரண நலம்பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பிற் சிறந்த பண்பாளர் திரு ஹரிணி அவர்கள்..
      அவருடன் பழகியிருந்த நாட்கள் இனிமையானவை..

      இன்னும் சளித் தொல்லை விடவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அந்த விருதுக்கு ஒரு மதிப்பு என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஹரிணிக்குக் கிடைத்ததால் செய்திக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எனது முகநூல் பதிவிலும் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டிருந்தேன். ஹரணி என்னும் முனைவர் அன்பழகனுக்கு வாழ்த்துக்கள்!
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் FB பக்கத்திலும் இச்செய்தியினைக் கண்டேன்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் தனபாலன்..

    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அனைவரோடும் சேர்ந்து அவருக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மகிழ்ந்தேன் ஐயா
    உடல் நிலையினைக் கவனித்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் அன்பினுக்கு நன்றி..
      வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  7. கவிஞர் ஹரணி ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. விருது பெற்ற திரு ஹரணி ஐயா அவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. திரு. ஹரணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. விருது பெற்ற திரு ஹரணி ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! தங்கள் விவரணம் மிக அருமை!

    தங்கள் உடல் நலம் தற்போது எப்படி உள்ளது ஐயா? நலமா? நலமுடன் இருக்க பிரார்த்தனைகள். வாழ்க நலம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      காய்ச்சல் சற்றே குறைந்துள்ளது..
      தங்கள் அன்பிற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  11. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..