நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 11, 2017

ஊட்டுவதெல்லாம்...

மனம் வலிக்கின்றது..



ஹாசினி எனும் ஏழு வயதுடைய குழந்தையை
இருபத்திரண்டு வயதுடைய ஈனப் பிறவி ஒன்று 
சிதைத்துக் கொன்று
தீயிட்டு எரித்திருக்கின்றது

நேற்று இரவு தான் அந்த செய்தியை அறிய நேர்ந்தது..

இப்படியும் செய்யக் கூடுமோ?...

இளம் பிஞ்சின் கதறலைக் கேட்டும் 
கலங்கித் துடிக்காத செவிப்பறை குறையோ?..

இளம் பிஞ்சின் கண்ணீரைக் கண்டும் 
கண்ணீர் வடிக்காத விழி வெறுங்குழியோ?..

இளம் பிஞ்சின் அவலத்தைக் கண்டும் 
துன்பத்தில் துடிக்காத இதயமும் கருங்கல்லோ?..

அட.. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டே!..

அது கூட இல்லாமல் -
இதயம் - இறுகிய சதைப் பிண்டமாய்ப் போனதோ!..

பெற்ற வயிறெல்லாம் பற்றித் துடிக்கின்றதே..

இளகித் துடிக்கும் இதயம் என்ற ஒன்றில்லாத 
இழிபிறவி ஒன்றும் இந்த வையகத்தில் இருந்துள்ளதே!..

எப்படியடா மனம் வந்தது?..

மடியிருத்தி ஊட்டுவதெல்லாம் பாலாகுமா!..
மாதகன் உனக்கு எது ஊட்டப்பட்டதோ?..

பள்ளி பயின்றதெல்லாம் பண்பாகுமா?..
நீயடைந்த கல்வி உனக்கு எதை ஊட்டியதோ?..

உன்னை மகன் என்று பெற்றதும்
நீ கல்வி என்று கற்றதும்

இப்படியோர் இழிசெயல் நிகழ்வதற்காகவா?...

இரக்கமில்லா இழிபிறவியின் இதயம் 
ஈக்களுக்கும் புழுக்களுக்கும் இரையாகித் தொலையட்டும்!..


மகளை இழந்த பெற்றோர் 
தம் துயரைக் காலம் மற்றுவதாக!..

ஹாசினி எனும் அரும்பின் ஆன்மா 
சாந்தியடையட்டும்...


***

10 கருத்துகள்:

  1. தினமும் இந்த மாதிரி செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. மிகுந்த வேதனை...
    இந்த மனிதர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் வருகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  3. வேதனையாக இருக்கின்றது ஜி இழிபிறவிகள்

    பதிலளிநீக்கு
  4. வேதனையானது மனம் பதிவை படித்து கனத்து போனது.
    இந்தமாதிரி மிருகங்களை பூமி விழுங்கிவிட வேண்டும் உடனே

    பதிலளிநீக்கு
  5. மனித வடிவில் மிருகம்...கணநேர உடல்பசிக்குச் சிறுகுழந்தையையா பலிவாங்குவது? உரிய தண்டனை தரவேண்டும் அவனுக்கு.
    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  6. வெட்கப்படவேண்டிய, வேதனைப்படவேண்டிய நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  7. வேதனை தரும் நிகழ்வு. தினம் தினம் இம்மாதிரி செய்திகள்.... கடுமையான சட்டங்களும், அதை நிறைவேற்றும் நீதிபதிகளும், பொறுப்பான அரசும் இன்றைய முக்கியத் தேவை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..