நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 25, 2016

மார்கழிப் பூக்கள் 10

தமிழமுதம்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்.. (393)
***

ஔவையார் அருளிய
மூதுரை

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம்..
* * *

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 10



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ திருமழிசையாழ்வார்அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ கூடல் அழகர் - மதுரை
விண்கடந்த சோதியாய்வி ளங்குஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோ டிரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம் நின்னை யார்மதிக்க வல்லரே.. (778)

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவ தரிசனம்
பஞ்ச பூதத்திருத்தலங்கள்

ஐந்தாவது திருத்தலம்

திருக்கச்சி ஏகம்பம்
மண் - நிலம்



இறைவன் - ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஏலவார்குழலி
தீர்த்தம் - கம்பை நதி
தலவிருட்சம் - மா மரம்



பராசக்தியாகிய அம்பிகை
கம்பையாற்று மணலில் சிவலிங்கம் அமைத்து
வழிபட்டிருந்த திருத்தலம்..

கம்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது
ஐயனை ஆரத் தழுவிக் கொண்டனள்..

அது கண்டு ஐயன் தன்னுரு காட்டி
அம்பிகையின் திருக்கரம் பற்றி
மணக்கோலங்கொண்டனன் என்பது 
ஆன்றோர் வாக்கு...


ஸ்ரீ ஏலவார்குழலி
திருஒற்றியூரில் சங்கிலியாருக்குத் தந்த 
வாக்குறுதியை மீறி - சுந்தரர்
திருஆரூருக்குப் புறப்பட்டனர்..

அச்சமயம் இருகண்களிலும் பார்வை இழந்தார்..

ஸ்ரீ காமாக்ஷி அம்பிகை மின்னலாக ஒளிகாட்டி
காஞ்சித் திருத்தலத்தினில்
இடக்கண்னை அருளினாள்..

அவ்வேளையில் சுந்தரர் பாடிய திருப்பதிகம்
கண் நோய்களை மாற்ற வல்லது..

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு



ஆலந் தானுகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பாரவர் சிந்தை யுள்ளானை
ஏலவார் குழலி உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!.. (7/61) 

- பாடிப்பரவியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், பட்டினத்தடிகள்..
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா நாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத்து
உறைவானை அல்லது உள்காதென துள்ளமே!.. (2/12)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும்
திருவினைத் திருவே கம்பம் செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி யாங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.. (4/44)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 10


ஸ்ரீ செண்பகவல்லி - ஸ்ரீ பூவண நாதர், கோயில்பட்டி..
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்கு கின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!..

இந்த அளவில் 
திருப்பள்ளியெழுச்சி
நிறைவடைகின்றது..
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ பகவதி
கொடுங்களூர்


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடாரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கேஅணியும் திருவுடையானிடம் சேர்பவளே!.. (037)
- அபிராமிபட்டர் -
* * *


அன்பை முன் நடத்துதற்கு
அவனியில் தோன்றிய
அருட்சுடர் ஸ்ரீ இயேசு கிறிஸ்து
அவதரித்த திருநாள்..


புனிதர் பிறந்த தலம்


இயேசு பெருமான் திருவடிகள் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

4 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..