தமிழமுதம்
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.. (0020)
வானின்று அமையாது ஒழுக்கு.. (0020)
* * *
ஔவையார் அருளிய
மூதுரை
நெல்லுக்கு இறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமாம் மழை..
மூதுரை
நெல்லுக்கு இறைத்த நீர்வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமாம் மழை..
* * *
அருளமு
அருளமுதம்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 02
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச்சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்!..
***
திருப்பாடல் - 02
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 02
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!..
* * *
பாடிப் பரவியோர்
சிவ தரிசனம்
பஞ்ச சபைகள்
இரண்டாவது திருச்சபை
ரத்ன சபை
திருஆலங்காடு
ரத்ன சபை
திருஆலங்காடு
ஐயனும் அம்பிகையும்
காரைக்காலம்மையாரின் பொருட்டு
ஆனந்தத் திருநடனம் நிகழ்த்திய திருத்தலம்...
காரைக்காலம்மையார் முக்தியடைந்த திருத்தலம்..
பாடிப் பரவியோர்
காரைக்காலம்மையார்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
* * *
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
* * *
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே..
வாச மலரெல்லாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே..
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே..
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே..
வாச மலரெல்லாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே..
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே..
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
* * *
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *
பாடல்களைக் கண்டேன். மனநிறைவு அடைந்தேன்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் காலைப்பொழுதில்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பதிவு.
பதிலளிநீக்குபதிவு நன்று ஜி
பதிலளிநீக்குஎங்கள் ஊர் ஜலஹள்ளி ஐயப்பன் கோவிலில் பத்து நாட்களுக்கான விழாத்துவக்கம் நேற்று இருந்தது
பதிலளிநீக்குபாடல்களும் படங்களும் பகிர்வும் அருமை ஐயா...
பதிலளிநீக்கு