நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 11, 2016

வீர வணக்கம்..

நாடு தழுவிய பிரார்த்தனைகளையும் மீறி -

இன்று காலை 11.45 மணியளவில் வீரமரணத்தைத் தழுவினார் - லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா!..


உலகின் மிக உயரமான போர்முனையாகிய சியாச்சனில் - கடந்த மூன்றாம் தேதி நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கினர் - நமது வீரர்கள்..

கடுமையான பனிச்சரிவில் அவர்கள் உயிர் பிழைத்திருப்பது அரிது -என்பதனால்,

வீரர்கள் பத்து பேரும் மரணமடைந்ததாக நமது ராணுவம் அறிவித்தது..


நாடெங்கும் வேதனை அலைகள் பரவிய நிலையில் - சில தினங்களுக்கு (9/2)முன்,  ராணுவத்தின் மீட்புப் பணிகளின் பயனாக பனிப்பாறைகளுக்குக் கீழ் 25 அடி ஆழத்தின் கீழ் உறை நிலையில் ஹனுமந்தப்பா கண்டறிப்பட்டார்..

அரிதினும் அரிதான அதிசயமாகக் கருதப்பட்டது -  இந்நிகழ்வு..

உறைபனிக்குள் மயக்க நிலையில் ஆறுநாட்கள் என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்..

ராணுவ மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட ஹனுமந்தப்பாவுக்கு  தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது..


உறைபனிக்குள்ளிருந்து மயக்க நிலையில் மீட்க்கப்பட்ட மாவீரன் இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டி நின்றனர் நாட்டுமக்கள்..

பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்த்ர மோதி அவர்களும் - மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹனுமந்தப்பாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கேட்டறிந்தார்..

இந்நிலையில் -

நேற்று கோமா நிலையை எய்தினார் ஹனுமந்தப்பா..

நாடு முழுதும் ஹனமந்தப்பாவின் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்தது..

ஆயினும் -

பாரதத்தின் வீரப்புதல்வன் - தாயவளின் மடி தேடிப் பறந்து விட்டான்..


கண்கள் கலங்கி நெஞ்சம் விம்முகின்றது..
நாட்டுக்கு உழைத்து இன்னுயிர் ஈந்த மகன்
அமைதியில் ஆழ்ந்திருக்க அஞ்சலி செலுத்துகின்றேன்..


உறைபனிக்குள்ளும் உயிர்த்திருந்த
இதயத்தின் வலிமையைக் கூறிட
வார்த்தைகளேதும் இல்லை..

இந்தியா இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள்
இரும்புக்கோட்டையென விளங்குதற்கு
இத்தகைய இதயங்களே ஆதாரம்!..

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்..

ஜய்ஹிந்த்
***  

12 கருத்துகள்:

  1. நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரன் ஹனுமந்தப்பாவுக்கு வீரவணக்கம்
    அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.... ஜெய்ஹிந்த்

    பதிலளிநீக்கு
  2. அம் மாவீரருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்,,

    நேற்று தான் தி ஹிந்து பேப்பரில் அவர் மணைவியின் மகிழ்ச்சியான புகைப்படம் பார்த்தேன்,,

    அவரின் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனதாபங்கள்,,

    பதிலளிநீக்கு
  3. அவருடைய ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் ..மறைந்த வீரர்கள் அனைவருக்கும் அஞ்சலிகள் .
    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதலையும் தேற் றுதலையும் தர இறைவனை வேண்டுவோம்

    பதிலளிநீக்கு
  4. மறைந்த வீர்கள் அனைவருக்கும் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிச்சரிவுக்கடியில் உயிர் பிழைத்தது எதிர்பாராதது ஆனால் இந்த முடிவு எதிர்பார்த்தது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....! நானும் அஞ்சலியில் பங்கேற்கிறேன்

      நீக்கு
    2. அன்பின் ஐயா..

      நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  5. நாட்டுக்காக வீர மரணம் அடைந்த மாவீரனுக்கு வீர வணக்கம்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..