நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 08, 2019

பெண்மை வெல்க..

மனம் நிறைந்த
மகளிர் தின நல்வாழ்த்துகள்...




எல்லாரும் நல்லா இருக்கணும் சாமீ..


கோலமும் போடுவாள் - குலமங்கை
கொடும்பகை தீர்க்கக் 
கூர் வேலையும் ஏந்துவாள்...

வீர மங்கை குயிலி..
வையகம் வாழ்ந்திட
வான்புகழ் எய்திட
வாழ்கவே பெண்மை..
வளர்கவே திண்மை...

பெண்மை போற்றுதும்..
பெண்மை போற்றுதும்..
ஃஃஃ  

23 கருத்துகள்:

  1. மனம் கவர்ந்த மாருதியாரின் ஓவியத்துடன் மனம் நிறைந்த மகளிர்தின வாழ்த்துகள். பலே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு... வாழ்க நலம்..

      நீக்கு
    2. மாருதியார் மனம் கவர்ந்தவரா? இல்லை ஓவியம் மனம் கவர்ந்ததா? அப்படீன்ன அனுஷ்கா என்ன ஆனாங்க ஸ்ரீராம்?

      நீக்கு
  2. பாரதியின் வரிகளைக் கடன் வாங்கி கொண்டு நானும் மகளிர் தின வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
    அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
    அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
    உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
    உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      மகாகவியின் வரிகளுடன் தங்களது கருத்துரை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான சுருக்கமான பதிவுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எல்லா நாளும் மகளிர்க்கான நாளே. பெண் இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்? ஆக்கமும் அவளே, அழிப்பதும் அவளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா...

      தாங்கள் சொல்வது போல எல்லா நாளும் பெண்மைக்குரியவையே..
      அவளின்றி அவனியில் ஆவது ஒன்றுமே இல்லை..

      வாழ்க நலம்...

      நீக்கு
    2. கீதாக்காவின் கருத்தை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்...

      துரை அண்ணா நல்ல பதிவு அழகான படங்கள்.

      கீதா

      நீக்கு
  4. அன்பு துரை ராஜு, உங்கள் இல்ல மகளிருக்கும் வாழ்த்துகள்.
    உங்கள் வாழ்த்துகளும் எங்களுக்கு இனியதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
      நெஞ்சார்ந்த நன்றி... வாழ்க நலம்..

      நீக்கு
  5. தாய்மையை, மிக வயதானவரை - இந்த இரண்டு கோலத்தையும் விட்டுவிட்டீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      இந்தப் பதிவு மிகுந்த போராட்டத்துக்கிடையில் வெளியானது...
      ஆனாலும் தங்களது கருத்து இன்னொரு பதிவுக்கு வித்திட்டு விட்டது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகிய படங்கள் ஜி
    இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. அருமை...

    மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான மகளிர் தின வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    எல்லையற்ற ஆற்றுலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
    எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
    வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் - அற்புதமே!
    வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனைபேர்.

    இவ்வளவு சிறப்புகள் பெருமைகள் கொண்ட பென்ணினத்தை எந்த ஒரு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கொள்கிறார்களோ அந்த குடும்பத்தில் அமைதியும், மகிழ்வும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும்.
    -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      அருட்திரு வேதாத்ரி ஸ்வாமிகளின் அமுத வாக்குடன் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  9. பொருத்தமான நாளில் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  10. பெண்மையை பேணுவோம் .......போற்றுவோம் ....

    படங்களும் கவி பேசுகின்றன...அழகு

    பதிலளிநீக்கு
  11. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. ஓவியங்கள், படங்கள் என அசத்தலாக இருக்கிறது மகளிர் தின சிறப்புப் பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..