அதனால் தானே மாநிலத்தில் எங்கெங்கு இருந்தபோதும்
ஐயனின் திருவாசலில் வருடாந்திரத் திருவிழாவின்போது
ஆயிரம் ஆயிரமாக மக்கள் கூடுவது...
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத அருஞ்சுனை காத்த ஐயனார்
தென் மாவட்டங்களில் விளங்கும் திருப்பெயர்களுள் குறிப்பிடத்தக்கது...
திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில்
குரும்பூரில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது மேலப்புதுக்குடி...
இந்த ஊரில் தான் அருஞ்சுனை காத்த ஐயனார் என திருக்கோயில் கொண்டுள்ளார் - ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்...
பரிவார மூர்த்திகளாக பேச்சியம்மன், சுடலை மாடன், தளவாய் மாடன், கருப்ப சாமி, இசக்கியம்மன், முன்னோடியார்...
திருமுருகன் சந்நிதியும் தனித்து விளங்குகின்றது...
பங்குனி உத்திரம் இங்கே பெருவிழா...
பங்குனி உத்திரம் - ஸ்ரீ ஹரிஹரசுதனின் திருநட்சத்திரம்...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நிகழும் திருவிழாவிற்கான கொடியேற்றம்
நேற்று காலையில் சிறப்பாக நிகழ்ந்தது...
இத்திருக்கோயில் எங்களது சம்பந்தி வீட்டாரின் குலதெய்வக் கோயிலாகும்...
அங்கே நிகழ்ந்த வைபவத்தின் நிழற்படங்கள் FB வழி கிடைத்தன...
யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக!.. - என்று
இன்றைய பதிவில் - அருஞ்சுனை காத்த ஐயனின் தரிசனம்....
கீழே உள்ள படங்கள் சென்ற வருட பங்குனி உத்திர விழாவின் போது எடுக்கப்பட்டவை...
ஐயனின் திருவாசலில் வருடாந்திரத் திருவிழாவின்போது
ஆயிரம் ஆயிரமாக மக்கள் கூடுவது...
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத அருஞ்சுனை காத்த ஐயனார்
தென் மாவட்டங்களில் விளங்கும் திருப்பெயர்களுள் குறிப்பிடத்தக்கது...
திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில்
குரும்பூரில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது மேலப்புதுக்குடி...
இந்த ஊரில் தான் அருஞ்சுனை காத்த ஐயனார் என திருக்கோயில் கொண்டுள்ளார் - ஸ்ரீ ஹரிஹரபுத்ரன்...
பரிவார மூர்த்திகளாக பேச்சியம்மன், சுடலை மாடன், தளவாய் மாடன், கருப்ப சாமி, இசக்கியம்மன், முன்னோடியார்...
திருமுருகன் சந்நிதியும் தனித்து விளங்குகின்றது...
பங்குனி உத்திரம் இங்கே பெருவிழா...
பங்குனி உத்திரம் - ஸ்ரீ ஹரிஹரசுதனின் திருநட்சத்திரம்...
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நிகழும் திருவிழாவிற்கான கொடியேற்றம்
நேற்று காலையில் சிறப்பாக நிகழ்ந்தது...
இத்திருக்கோயில் எங்களது சம்பந்தி வீட்டாரின் குலதெய்வக் கோயிலாகும்...
அங்கே நிகழ்ந்த வைபவத்தின் நிழற்படங்கள் FB வழி கிடைத்தன...
யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக!.. - என்று
இன்றைய பதிவில் - அருஞ்சுனை காத்த ஐயனின் தரிசனம்....
திருமூலத்தானத்தில் ஸ்ரீ பூர்ண புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார். |
கோயிலுக்கு அருகிலுள்ள அருஞ்சுனை |
இன்னும் இந்தத் திருக்கோயிலுக்குச் செல்லும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை...
ஐயன் அருளுண்டு
என்றும் பயமில்லை..
அருஞ்சுனை காத்த ஐயனே சரணம்..
ஹரிஹர சுதனே சரணம்.. சரணம்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
ஐயன் அருளிருக்க ஜெயமே..
பதிலளிநீக்குகுட்மார்னிங்.
அன்பின் ஸ்ரீராம்..
நீக்குத்ங்களுக்கு நல்வரவு..
எங்கள் குலதெய்வமும் ஐயனே... பாலசாஸ்தா எனும் சாத்தியப்பா... மழுவச்சேரி சாத்தியப்பா.
பதிலளிநீக்குசுக தரிசனப் படங்களுக்கு நன்றி.
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
இனிய காலை வணக்கம் துரை அண்ணா..
பதிலளிநீக்குபுது பெயர் அருஞ்சுனை காத்த ஐயனார்!!
பங்குனி உத்திரம் ஸாஸ்தா கோயில்களில் சிறப்பு என்றால் லக்ஷ்மிக்கும் சிறப்பு என்று கொண்டாடப்படுவதுண்டு..
படங்கள் எல்லாம் மிக அழகு ஆனையாரும், அந்தச் சுனையும் வெகு அழகு...இந்தச் சுனை இப்போதும் இப்படியே இருக்கிறதோ...அழகாக இருக்கிறது...இப்படிச் சுனைகள், ஆறுகள் அருவிகள் மலைகள் கோயிலுக்கு அருகில் இருந்தால் நான் இப்படியான இயற்கை இடங்களில் நேரம் செலவிட விரும்புவேன்...
நன்றி அண்ணா
கீதா
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....
நீக்குஅந்தச் சுனை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது...
ஐயனைக் குலதெய்வமாகக் கொண்டவர்களுக்கு இதுவே புனித தீர்த்தம்....
மகிழ்ச்சியும் நன்றியும்...
அருஞ்சுனை காத்த அய்யனார் ஆலயம் கொடியேற்ற விழா பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குஅனைவரையும் காக்க வேண்டும்.சுனையில் வற்றதா நீர் ஊற்று இருக்க வேண்டும் இறைவன் அருளால் .
படங்கள் எல்லாம் அழகு.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....
பதிலளிநீக்குஅருஞ்சுனை எனப்படும் இந்தத் திருக்குளம் வற்றியதில்லை என்கிறார்கள்... குளத்து நீரில் துள்ளித் திரியும் மீன்களுக்கு பொரி போடுதல் வழக்கமான ஒன்று....
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....
அன்பின் ஜி
பதிலளிநீக்குஅழகிய திருவிழாக் காட்சிகள் தரிசித்தேன் வாழ்க நலம்.
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
அருமையான தரிசனம்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
இன்னிக்கு இங்கேவந்திருந்த விருந்தினருடன் பேசுகையில் ஐயனார் குறித்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் ஐயனார் குடி இருப்பதையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். இங்கே வந்தால் அருஞ்சுனை காத்த ஐயனாரின் தரிசனம். மிக அருமை! அந்த சுனை நீரிலேயே சமைத்து சமாராதனை மாதிரி செய்து (சாஸ்தாப்ரீதி என்பார்கள்) அனைவருக்கும் அன்னதானம் செய்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....
நீக்குதாங்கள் அறியாததல்ல....
நினைப்பவர் மனமே கோயிலாக் கொள்பவன் இறைவன் - என்றுரைக்கிறார் திருநாவுக்கரசர்...
நம் வீட்டில் ஏற்றாமலேயே தூபம் மணம் கமழும்... உணர்ந்து இருக்கின்றீர்களா!..
அப்படித்தான் இதுவும்....
தங்கள் அன்பும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
அருஞ்சுவை காத்த ஐயனார்... படங்களும் விவரங்களும் கண்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பின் நெ.த.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅவசரத்தில “அஞ்சுவை” என வாசிச்சு ஒரு கணம் ஸ்ரொப் பண்ணினேன்:)) ஹா ஹா ஹா:).
நீக்குஅருஞ்சுனை இந்தப் பெயரிலேயே அருமை. அருஞ்சுவை சுனைகாத்த ஐய்யனார் கதையும் இருக்கிறதா. தென் மாவட்டங்களில்
பதிலளிநீக்குஅதிகப்படியாக இந்த வீர சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்ததுண்டு.
அந்தச் சுனையும் களங்கம் இல்லாமல் போற்றப் படுவது தெரிகிறது.
யானையின் அழகு...அதுதனி.
ஒவ்வொரு ஊரின் எல்லையிலும் ஒவ்வொரு வீரச் செயலோடு எழுந்தருளி இருக்கும் இந்தக் காவல் தெய்வங்களை வணங்குகிறேன்.
மிக நன்றி துரை செல்வராஜு.
தங்கள் அன்பின் வருகைக்கும் மகிழ்வான கருத்துரைக்கும் வணக்கம்...
நீக்குதங்களது கருத்துரை என்னை உற்சாகப்படுத்துகிறது.. நன்றி..
அழகான படங்கள்....
பதிலளிநீக்குஐய்யனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.....
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
கடசியாக இருக்கும் படம் முன்பும் எங்கயோ பார்த்தேன்.
பதிலளிநீக்குஅந்தக் குதிரையும், கீழே குட்டியாக மனித சிலைகளும் அழகு, அதிலும் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் ஜோடி சூப்பராக இருக்கு பார்க்க.
அன்பின் தீர்க்கதரிசி....
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் படம் எங்கள் குலதெய்வக் கோயிலில் உள்ள குதிரை வாகனத்தின் கீழ் உள்ளவையாக இருக்கலாம்....
இதற்கு முன் வெளியிட்டிருக்கிறேன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....
எங்கள் உறவினரின் குலதெய்வக் கோயில். இதுவரை சென்றதில்லை. செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்புடையீர்...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....