திருச்சோற்றுத்துறை திருவேதிகுடியில் பல்லக்குகளைத் தரிசனம் செய்வதற்குச் செல்வோர்களாலும்
திருச்சோற்றுத்துறை திருவேதிகுடியில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு
திருக்கண்டியூருக்குச் செல்வோர்களாலும் அந்தச் சாலை பரபரப்பாக இருந்தது...
இதற்கிடையில் - வயதானவர்களை ஏற்றிக் கொண்டு ஏழூர் தரிசனம் செய்விக்கும் ஆட்டோக்களும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தன...
பொழுது விடிந்ததில் இருந்து வரிசையாக பல்லக்குகள் வந்து - தங்கி - புறப்படும் வரை இந்த வட்டத்திலுள்ள எல்லாக் கோயில்களும் நடை திறந்தேயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...
திருவேதிகுடியிலிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கெல்லாம் திருக்கண்டியூர் வீரட்டத்தை அடைந்து விட்டோம்...
சப்த ஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது திருத்தலம்...
இவற்றுள் மேற்கு நோக்கிய திருக்கோயில் இது மட்டுமே...
பிரமனின் ஆணவம் அழியும்படிக்கு
ஐந்தாவதாக இருந்த சிரம் அரியப்பட்டதால்
ஈசனின் அட்ட வீரட்ட தலங்களுள் இத்தலமும் ஒன்றாகின்றது...
கண்டியூர் வீரட்டத்திற்கு எதிர்புறம் சற்றே தென்புறமாக
திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்...
திருக்கண்டியூர் வீரட்டத்தில் -
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 13,14,15 ஆகிய மூன்று நாட்களிலும் மாலை நேரச் சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்வது கண்கொள்ளாக் காட்சி...
ஆனாலும் -
விரிவாக்கம் என்ற பெயரில் சாலையின் மட்டம் உயர்த்தப்படுவதும் எதிர்புறம் தேவையற்ற ஆக்ரமிப்புகளும் பிரச்னைகளாகின்றன...
வெளிச் சுற்றும் உள் சுற்றுமாக சற்று பெரியகோயில்...
கருவறையில் ஸ்ரீ பிரம்மசிரக்கண்டீஸ்வரராக விளங்கும் இறைவனைத் தரிசிக்க நீண்ட வரிசையில் அன்பர்கள் காத்துக் கிடந்தனர்...
அடியாரொடு அடியாராக நின்று சிவதரிசனம் செய்து விட்டு
சந்நிதியின் வடபுறமாக துர்கையின் கோட்டத்துக்கு அருகில்
புன்னகை தவழ வீற்றிருக்கும் நான்முகனையும் தேவி சரஸ்வதியையும்
தரிசனம் செய்தோம்...
கருவறையின் பின்புறம் திருச்சுற்று மண்டபத்தில் நடுவில் அபூர்வமான கலைப்படைப்பாக அமர்ந்தநிலையில் மாதொருபாகன்...
இப்போது யாரும் அருகில் நெருங்க முடியாதபடிக்கு கம்பித் தடுப்பு வைத்திருக்கின்றார்கள்...
திருச்சுற்றில் வலம் வந்து வெளிப்புறம் ஸ்ரீமங்களாம்பிகையின் தரிசனம்...
வெளியூர்களிலிருந்து சப்தஸ்தான தரிசனத்துக்கென்று வந்திருக்கும் சிவனடியார்கள் தேவார பாராயணம் செய்து கொண்டிருந்தனர்...
திருவேதிகுடியிலிருந்து மாலை நேரத்தில்
இங்கு வந்து சேரும் மாப்பிள்ளை பெண்ணுக்கு
சித்ரான்னம் நிவேதனம் செய்வது குறிப்பிடத்தக்கது...
இங்கிருந்து நந்தீசனின் பல்லக்கு புறப்படும்போது
கட்டுசோறு கட்டிக் கொடுத்து அனுப்புவது மரபு...
கண்குளிரத் தரிசனம் கண்டபின் அங்கிருந்து திருப்பூந்துருத்தியை நோக்கிப் புறப்பட்டோம்...
சப்த ஸ்தானத்தன்று கண்டியூரில் எடுக்கப்பட்ட படங்கள்
ஒழுங்கு செய்யப்பட்டபோது எங்கே சென்று மறைந்து கொண்டனவோ தெரியவில்லை...
அதனால் முன்பு எடுக்கப்பட்ட படங்களைப் பதிவு செய்துள்ளேன்..
இத்துடன் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் படங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன... அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
திருச்சோற்றுத்துறை திருவேதிகுடியில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு
திருக்கண்டியூருக்குச் செல்வோர்களாலும் அந்தச் சாலை பரபரப்பாக இருந்தது...
இதற்கிடையில் - வயதானவர்களை ஏற்றிக் கொண்டு ஏழூர் தரிசனம் செய்விக்கும் ஆட்டோக்களும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்தன...
பொழுது விடிந்ததில் இருந்து வரிசையாக பல்லக்குகள் வந்து - தங்கி - புறப்படும் வரை இந்த வட்டத்திலுள்ள எல்லாக் கோயில்களும் நடை திறந்தேயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...
திருவேதிகுடியிலிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கெல்லாம் திருக்கண்டியூர் வீரட்டத்தை அடைந்து விட்டோம்...
சப்த ஸ்தானத் தலங்களுள் ஐந்தாவது திருத்தலம்...
இவற்றுள் மேற்கு நோக்கிய திருக்கோயில் இது மட்டுமே...
கடன் வறுமை நீக்கும் ஐந்து திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம்...
ஐந்தாவதாக இருந்த சிரம் அரியப்பட்டதால்
ஈசனின் அட்ட வீரட்ட தலங்களுள் இத்தலமும் ஒன்றாகின்றது...
கண்டியூர் வீரட்டத்திற்கு எதிர்புறம் சற்றே தென்புறமாக
திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்...
திருக்கண்டியூர் வீரட்டத்தில் -
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 13,14,15 ஆகிய மூன்று நாட்களிலும் மாலை நேரச் சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்வது கண்கொள்ளாக் காட்சி...
ஆனாலும் -
விரிவாக்கம் என்ற பெயரில் சாலையின் மட்டம் உயர்த்தப்படுவதும் எதிர்புறம் தேவையற்ற ஆக்ரமிப்புகளும் பிரச்னைகளாகின்றன...
வெளிச் சுற்றும் உள் சுற்றுமாக சற்று பெரியகோயில்...
கருவறையில் ஸ்ரீ பிரம்மசிரக்கண்டீஸ்வரராக விளங்கும் இறைவனைத் தரிசிக்க நீண்ட வரிசையில் அன்பர்கள் காத்துக் கிடந்தனர்...
அடியாரொடு அடியாராக நின்று சிவதரிசனம் செய்து விட்டு
சந்நிதியின் வடபுறமாக துர்கையின் கோட்டத்துக்கு அருகில்
புன்னகை தவழ வீற்றிருக்கும் நான்முகனையும் தேவி சரஸ்வதியையும்
தரிசனம் செய்தோம்...
கருவறையின் பின்புறம் திருச்சுற்று மண்டபத்தில் நடுவில் அபூர்வமான கலைப்படைப்பாக அமர்ந்தநிலையில் மாதொருபாகன்...
இப்போது யாரும் அருகில் நெருங்க முடியாதபடிக்கு கம்பித் தடுப்பு வைத்திருக்கின்றார்கள்...
திருச்சுற்றில் வலம் வந்து வெளிப்புறம் ஸ்ரீமங்களாம்பிகையின் தரிசனம்...
ஸ்ரீமங்களாம்பிகை |
திருவேதிகுடியிலிருந்து மாலை நேரத்தில்
இங்கு வந்து சேரும் மாப்பிள்ளை பெண்ணுக்கு
சித்ரான்னம் நிவேதனம் செய்வது குறிப்பிடத்தக்கது...
இங்கிருந்து நந்தீசனின் பல்லக்கு புறப்படும்போது
கட்டுசோறு கட்டிக் கொடுத்து அனுப்புவது மரபு...
கண்குளிரத் தரிசனம் கண்டபின் அங்கிருந்து திருப்பூந்துருத்தியை நோக்கிப் புறப்பட்டோம்...
சப்த ஸ்தானத்தன்று கண்டியூரில் எடுக்கப்பட்ட படங்கள்
ஒழுங்கு செய்யப்பட்டபோது எங்கே சென்று மறைந்து கொண்டனவோ தெரியவில்லை...
அதனால் முன்பு எடுக்கப்பட்ட படங்களைப் பதிவு செய்துள்ளேன்..
இத்துடன் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் படங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன... அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...
ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் |
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே...(4/93)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
குட்மார்னிங்.
பதிலளிநீக்குகண்டியூரும் திருக்கண்டியூரும் ஒன்றுதானா?
அன்பின் ஸ்ரீ ராம் ...
நீக்குதங்களுக்கு நல்வரவு..
அடுத்துத் தொடர்ந்து படிக்கும்போதே பதில் வருகிறது. இந்தக் கோவில் எல்லாம் பார்த்ததே இல்லை.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குகோயில்களையும் ஊர்களையும் - திரு - என்ற அடைமொழியுடன் வழங்குதல் மரபு..
காலத்தால் மாறாதபடிக்கு சில திருத்தலங்களின் பெயர்கள் அமைந்து விட்டன... ஏனைய திருவூர்களைக் குறிக்கும்போது திரு என்று சேர்த்துச் சொல்லவேண்டும் என்பர் ஆன்றோர்...
முதன்முதலாக சென்னைக்கு வந்து பேருந்தில் பயணித்தபோது - எழும்பூர் - என்று சொன்னதற்காக சிலர் ஏளனமாகச் சிரித்தது நினைவில் இருக்கின்றது...
படங்கள் வழக்கம் போல அழகு. தரிசனம் செய்துகொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகிய காட்சிகள்
பதிலளிநீக்குவழக்கம்போல் அருமையாக சொல்லிச் சென்ற நடை.
அன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான தரிசனம் காலை வேளையில்.
பதிலளிநீக்குஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குநல்ல தரிசனம் கிடைக்கப் பெற்றேன். திருக்கண்டியூர் போனதில்லை. அழகான படங்கள். நல்ல விவரணைகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குதஞ்சை நகரில் தங்கிக் கொண்டு 20 திருக்கோயில்களைத் தரிசிக்கலாம்...
இதில் தஞ்சை நகருக்குள் உள்ள கோயில்கள் சேர்க்கப்படவில்லை..
ஆனாலும் கும்பகோணம் தான் முன்னிலை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது....
அதனால் தானே திருநள்ளாறும் திருக்கடவூரும் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இருப்பதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்....
அன்பின் நன்றியுடன்..
நன்றி ஐயா
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குஅருமையான தரிசனம் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
திருக்கண்டியூர் திருவேதிக்குடியிலிருந்து அருகில் தானா.
பதிலளிநீக்குபல்லக்குகளும் அத்தனை எளிதில் வந்துவிடுமோ. அப்ப மிக அருகில் போலும்.
அருமையான படங்கள் துரை அண்ணா. கதையும் விவரணமும் அருமை. கோபுரம் அழகாக இருக்கிறது.
கீதா
அன்பின் கீதா அவர்களுக்கு...
நீக்குஇதையெல்லாம் நேரில் வந்து கண்டு களிக்க வேண்டும்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
படங்கள் அழகு. சிற்பங்களின் படங்கள் சிறப்பு. சிற்பங்கள் ரொம்பவும் அழகு.
பதிலளிநீக்குதொடர்ந்து உங்கள் பதிவு மூலம் கோவில் உலா. நன்றி.
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவுகள் மூலமாக மறுபடியும் செல்கிறேன். இம்மாதம் மூன்றாம் வாரத்தில் சப்தஸ்தானத் திருவிழா நடைபெறவுள்ளது.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா...
நீக்குதங்கள் வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி...
அழகிய தெய்வப் படங்கள்... மினக்கெட்டு இவ்ளோ டீடெயிலா எழுதுறீங்க.
பதிலளிநீக்குஅன்பின் அதிரா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
தளத்திற்கு வருவோர்க்கு ஓரளவுக்காவது விவரங்களைத் தரவேண்டுமே...
என்னால் இயன்ற பணி...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.... நன்றி...