நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 26, 2016

இனிய பாரதம்..

எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..



அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***



எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
***







Sukhoi Su-30-MKI

வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!.. 
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!.. 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!..

கங்கை நதிபுறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!..
***
Reena Devi, Contingent Commander

Army Contingent- led by Captain Divya Ajith
Navy Contingent  Led by  Lt.Commander Sandhya
Air Force Contingent  led by Squadran Leader  Sneha  Shehavath
Madras Regiment

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!...


தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா!..

இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வாவா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா!..

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 
விநயம் நின்ற நாவினாய் வா வா வா 
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்முகத்தினாய் வா வா வா!.. 
- மகாகவி பாரதியார் - 


சத்ய மேவ ஜயதே!.. 
வாய்மையே வெல்லும்!.. 
(முண்டக உபநிஷத்) 

பாரத தேசத்தின் சுவாசமே இதுதான்!.. 
அதனால் தான்,

வெளியிலிருந்து வந்த விஷக்கிருமிகள் 
வெருண்டோடிப் போயின!..
உடன் பிறந்த நோய்கள் 
உருக்குலைந்து ஒழிய இருக்கின்றன!..


  
நின்று விளங்கும்.. 
பாரதம் 
என்றும் விளங்கும்!..

ஜய் ஹிந்த்!.. 
* * *

16 கருத்துகள்:

  1. தாய்நாட்டின், குடியரசின் பெருமை பேசும் பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் ஊக்கமளிக்கின்றது..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான பகிர்வு ஐயா... இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  3. ஆண்டுதோறும், இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசுதினம் இரண்டினுக்கும் மறக்காமல், தவறாமல் பதிவுகள் எழுதும் சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    இந்த பதிவும் படங்களும் பாரதியின் வரிகளும் மனதைத் தொட்டன. எனது உளங்கனிந்த இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      தங்களின் வாழ்த்தும் பாராட்டுரையும் -
      இன்னொரு பதிவுக்கு என்னைத் தூண்டி விட்டது..

      நன்றி..

      நீக்கு
  4. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஐயா.பாடலும் படம் பொருத்தம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பின் ஜி இனிய குடியரசு தின வாழ்த்துகள்
    நிறைய விடயங்கள் அறிந்தேன் புகைப்படங்கள் அருமை நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்.. நன்றி..

      நீக்கு
  6. ஜெய்ஹிந்த்.....

    சிறப்பான பகிர்வு.

    உங்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்..
      வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  7. தாமதமாக வந்தாலும் என்றுமே வந்தே மாதரம் தானே...அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் என்றைக்கும் மகிழ்ச்சியே.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் நலம் தானே,

    நான் மிக விரும்பும் பாரதியின் வரிகள், தங்கள் தேர்வுகளில் எப்பவும் புகைப்படங்கள் அருமை, அழகு, அருமையான தொகுப்பு,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகாகவி பாரதியின் பாடல்வரிகளை விரும்பாதவர் - யார்?..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..