நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 08, 2016

மார்கழித் தென்றல் - 23

குறளமுதம்

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.. (0096) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 23

திவ்ய தேசம் - திருச்சேறை
பஞ்ச சார க்ஷேத்ரம்



எம்பெருமான் - ஸ்ரீ சாரநாதன் 
தாயார் - ஸ்ரீ சாரவல்லி  

இந்த ஸ்தலத்தில்
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி,
மஹாலக்ஷ்மி, சாரநாயகி - என
ஐந்து தேவியருடன்
எம்பெருமான் திருக்காட்சி நல்குகின்றனன்..

உற்சவர் - மாமதலைப் பிரான் 
ஸ்ரீ சார விமானம்



நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்



கங்கையைப் போல தானும் சிறப்புற வேண்டும்!..
என, காவிரியாள் கடும்தவம் இருந்த ஸ்தலம்..

காவிரியின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான்
தைப்பூச நன்னாளன்று ஒரு மழலையாகத்
திருக்காட்சி நல்கியதோடு
காவிரியின் மடி தவழ்ந்து
காவிரியைப் பெருமைப்படுத்தினான்..

திருக்கோயிலில் காவிரி அன்னைக்கும்
தனி சந்நிதி உள்ளது..
***



மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்


பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும் வண்டார்நீலம்
செய்விரியும் தண்சேறை எம்பெருமான் திருவடியை சிந்தித்தேற்குஎன்
ஐயறியும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்என் அன்புதானே!.. (1584)
- திருமங்கையாழ்வார் -

***

மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலம் - திருச்சேறை 



இறைவன் - ஸ்ரீ சாரபரமேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானவல்லி
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம்
தலவிருட்சம் - மாவிலங்கை

ருண விமோசன ஸ்தலம்...

ருண விமோசனம் எனில் 
கடன் தீர்வது..

கடன் என்றால் - 
பக்கத்து வீட்டில் வாங்கிய கடனா?..

ஆடம்பரச் செலவுகளுக்காக
அங்குமிங்கும் அலைந்து திரிந்து
வாங்கிய கடனா?..

பகட்டு வாழ்க்கைக்காக
பலரிடத்தும் பற்களைக் காட்டி
பணிந்து பெற்ற கடனா?..

அதெல்லாம் இல்லை..

பெற்ற கடன்
அதனால் நமக்கு உற்ற கடன்..

பெற்றெடுத்து பேரன்பு காட்டி
பிரியமுடன் வளர்த்து ஆளாக்கிய
தாய் தந்தையர்க்கும்
உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும்
உற்றாருக்கும் ஏனைய சுற்றத்தார்க்கும்

உதவுவதற்கு மனம் இருந்தும்
காலக்கொடுமையினால்
பொருளாதாரம் இன்றி
ஏதும் செய்ய இயலாது
தவித்துத் தள்ளாடும்
நெஞ்சங்கள் அனைத்தும்

தேடிச் சென்று வணங்க வேண்டிய
திருத்தலம் - திருச்சேறை..


பொருள் இருந்தும் மனம் இல்லாமல்
அன்னை தந்தையரைத் 
தவிக்க விட்டவர்களுக்கு இது பொருந்தாது..




அற்றாருக்கும் அலந்தாருக்கும்
அவரவர் அல்லல்கள் 
நீங்கிட நல்லருள்பொழிகின்றனர்

ஸ்ரீ சாரபரமேஸ்வரரும்
அன்னை ஞானாம்பிகையும்!..



இத்தலத்தில் 
ஸ்ரீ வைரவமூர்த்தி
சிறப்புடன் விளங்குகின்றார்..

திருநாவுக்கரசர் தமது திருப்பதிகத்தில்
கால வைரவ மூர்த்தியைப்
புகழ்ந்து போற்றுகின்றார்..

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வைரவனாகி வேழம்
உரித்து உமைஅஞ்சக் கண்டுஒண்திரு மணிவாய்விள்ள
சிரித்து அருள்செய்தார் சேறைசெந்நெறிச் செல்வனாரே!.. (4/73) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்



திருப்பொன்னூசல்
மூன்றாம் திருப்பாடல்


முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்னீறு எனக்களித்துத் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

9 கருத்துகள்:

  1. மார்கழித் தென்றலின் 23 ஆம் நாள் பகிர்வு நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பொருள் இருந்தும் தவிக்க விட்ட,,,,,,ம்ம்,
    பொருள்பொதிந்த பாடல்கள், தங்கள் தொப்பு அருமை, புகைப்படங்களும், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே பாலமகி பக்கங்களில் தங்களைக் காணவில்லை,,,

      நீக்கு
    2. அன்புடையீர்..

      தங்கள் பதிவுகளுக்குத் தவறாமல் வருகின்றேனே!..
      வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அழகு. பாடல்கள், தகவல்கள் என அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..