நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 07, 2016

மார்கழித் தென்றல் - 22

குறளமுதம்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.. (0484) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 22

திவ்ய தேசம் -  திருஇந்தளூர்



எம்பெருமான் -  ஸ்ரீ பரிமள ரங்கநாதன்
தாயார் - ஸ்ரீ பரிமள ரங்கநாயகி
உற்சவர் - சுகந்தவன நாதன்

ஸ்ரீ வேத சக்ர விமானம்
ஆதிசேஷன் மீது
சதுர் புஜங்களுடன்
வீர சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்



ஸ்ரீ பரிமள ரங்கநாதனின் திருமேனி
மரகதம் என்று குறிக்கப்படுகின்றது..

பெருமாளின் திருமுடியின் அருகில் காவிரியும்
திருவடியின் அருகில் கங்கையும் 
அமர்ந்திருக்கின்றனர்..



சந்திரன் தனது சாபம் தீர வேண்டி
வழிபட்ட திருத்தலம்.

சந்திரனின் சாபம்
தீர்த்தருளியதால் திரு இந்தளூர்..
இந்து எனில் சந்திரன்..

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்.

தீயெம் பெருமான் நீரெம்பெருமான் திசையும் இருநிலனு
மாயெம் பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாயெம் பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்
கேயெம் பெருமான் அல்லீ ரோநீர் இந்தளூரீரே!.. (1332) 
 - திருமங்கையாழ்வார் -

மயிலாடுதுறை நகருக்குள் காவிரியின் வடகரையில்
கல்லணை செல்லும் சாலையில் அமைந்துள்ள
திவ்ய தேசம் - திருஇந்தளூர்..


அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
அங்கண்ணி ரண்டுங்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலம் - மயிலாடுதுறை


இறைவன் - ஸ்ரீ மயூரநாதர் 
அம்பிகை - ஸ்ரீ அபயாம்பிகை
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - மாமரம்

ஸ்ரீ அபயாம்பிகை
காசிக்கு நிகரான ஆறு திருத்தலங்களுள்
மயிலாடுதுறையும் ஒன்று..

மற்றவை,
திருவெண்காடு, திருஐயாறு, திருவிடைமருதூர், 
சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம்..


அம்பிகை மயிலுருவாகத் தவம் செய்து 
சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

ஐயன் அது கண்டு மகிழ்ந்து
தானும் மயில் என வடிவங் கொண்டு
அம்பிகையுடன் ஆடி மகிழ்ந்தனன்..

ஐயனும் அம்பிகையும் மயிலுருவாக நிகழ்த்திய நடனம்
கௌரி தாண்டவம் எனப்படும்..



ஐப்பசி மாதம் முழுதும் 
கங்கை - காவிரியுடன் கலந்திருப்பதால்
இத்தலத்தில் துலா ஸ்நானம் சிறப்பு..

ஐப்பசி மாதத்தில்
சிறப்பாக பெருந்திருவிழா நிகழ்கின்றது..

திருக்கோயிலின் முன்னுள்ள ரிஷப தீர்த்தத்தினுள்
நந்தி மண்டபம் இலங்குகின்றது..

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 
திருக்கடைக்காப்பு


உரவெங் கரியின் உரிபோர்த்த
பரமன் உறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன்னையும் வன்னி
மருவும் மயிலா டுதுறையே!.. (1/38)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
இரண்டாம் திருப்பாடல்


மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்றங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்றங்கித் தித்தித்து அமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்றங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்றங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
 போன்றங்கு அனநடையீர் பொன்னூசலாடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு, புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதிவுகளில் திருப்பாவை திருவெம்பாவை தவிர உங்கள் உழைப்பும் தெரிகிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துடைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 22 ஆம் நாள் பகிர்வு அழகிய புகைப்படங்களும் நன்று தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..