நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 01, 2016

மார்கழித் தென்றல் - 16




பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலங்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும்தா..
- ஔவையார் - 
* * *



அனைவருக்கும் 
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
* * *

குறளமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தழைத்து. (0125) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 16

திவ்ய தேசம் - திருக்கோழி
உறையூர் 



எம்பெருமான் - அழகிய மணவாளன் 

உறையூர் வல்லி எனும் கமலவல்லி நாச்சியார்
தனியாக சந்நிதி கொள்ளாமல்
மூலவருடனேயே வீற்றிருக்கின்றாள்.. 

உற்சவர் -  அழகிய மணவாளன்


ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ கல்யாண விமானம்
பிரயோக சக்கரத்துடன் நின்ற திருக்கோலம்
வடக்கு நோக்கிய திருமுக மண்டலம்



சோழ மன்னனின் திருமகள் கமலவல்லியை
திருமணம் கொண்டதால்
திருஅரங்கத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது
ஆயில்ய நட்சத்திரத்தன்று
அழகிய மணவாளன் உறையூருக்கு எழுந்தருள்கின்றார்..

இத்தலத்தில்
 பங்குனி ஆயில்ய சேர்த்தி வைபவம் சிறப்பானது..



அதிகாலையில் உறையூருக்கு எழுந்தருளும்
அழகிய மணவாளன்
அன்றைய தினம் இரவு 10.30 வரை 
கமலவல்லித் தாயாருடன் சேர்த்தி அருள்கின்றார்.

அதன்பின் - இரு நாட்களும் அங்கே இங்கே என்று உலவி விட்டு
உத்திரத்தன்று திருஅரங்கத்திற்கு எழுந்தருள்கின்றார்..

அங்கே - திருமகள் ஊடல் கொள்ள
மட்டையடி வைபவம் நடக்கின்றது..

நம்மாழ்வார் எழுந்தருளி சமாதானம் செய்து வைக்க
திருஅரங்கத்தில் மஹாலக்ஷ்மியுடன் சேர்த்தி வைபவம்..


திருப்பாணாழ்வாரின் அவதாரத் திருத்தலம்

சேவல் ஒன்று யானையை எதிர்த்து
நின்று விரட்டியடித்ததால்
திருக்கோழி என தலத்திற்குப் பெயர்..

புகழ் பெற்ற சிவாலயமாகிய 
ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலும்
உறையூரில் விளங்குகின்றது..

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
குலசேகராழ்வார்
***


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதேநீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருச்சிராப்பள்ளி 


ஸ்ரீ உச்சிப் பிள்ளையார்
உச்சிமலையில் 
உமை மைந்தன் - ஓங்கார ஸ்வரூபன்
அல்லல் தீர்க்கும் அருட்சுடராக
வீற்றிருக்கின்றார்.. 


இறைவன் -  ஸ்ரீ தாயுமானவர் 
அம்பிகை - ஸ்ரீ மட்டுவார்குழலி 
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், காவிரி
தலவிருட்சம் - வில்வம்

மேற்கு நோக்கிய திருத்தலம்.



ஆதரவற்றுத் தவித்த கர்ப்பிணிக்கு
அவளுடைய பேறு காலத்தில்
தாய் வடிவாக வந்து
எம்பெருமான்
துணையிருந்த திருத்தலம்..

மக்கள் குறை தீர்க்கும்
முறையறியா மன்னனை ஒறுத்து
இத்திருத்தலத்தில்
நீதி நிலை நாட்டப்பட்டது
என்பது தலபுராணம்..


ஸ்ரீ மாணிக்க விநாயகர்
மலையடிவாரத்தில் - மாணிக்க விநாயகர் சந்நிதி..
நடுவே மட்டுவார்குழலியுடன் ஸ்ரீ தாயுமானவர் திருக்கோயில்..
குன்றின் சிகரத்தில் உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்..

திருமறைக்காட்டில் தோன்றிய
தாயுமான ஸ்வாமிகள் துறவு பூண்டு
வாழ்ந்திருந்த தலம்..

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான்,
மாணிக்கவாசகர்.
* * *

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

நன்றுடையானைத் தீயதில்லானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானை
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே!.. (1/98) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருஅம்மானை
திருப்பாடல் 11 - 12




செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

28 கருத்துகள்:

  1. திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன், உணர்ந்தேன். நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
      எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  2. புத்தாண்டில் தேவாமிர்த பதிவை அருளியமைக்கு நன்றி!
    அடியேன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
      எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  3. மார்கழித் தென்றலின் 16 ஆம் நாள் பகிர்வு அழகிய படங்களுடன் நன்று

    அன்பின் ஜி தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
      எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  4. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
      எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  5. படங்களும் பகிர்வும் அருமை ஐயா...


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    மற்ற மார்கழித் தென்றலையும் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
      எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  7. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  9. அருமையான அழகான பதிவு ஐயா!

    வாழ்த்திற்கு நன்றிகூறி என் அன்பு வாழ்த்தினையும்
    இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  11. எங்கள் திருச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் மற்றும் தாயுமானவர், உறையூர் நாச்சியார் மற்றும் பஞ்சவர்ண சுவாமி – ஆகிய தலங்கள் பற்றிய தரிசனம் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சகோதரருக்கு நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      இன்னும் விவரமாகக் கூறுதற்கு இயலவில்லை..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு

  12. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  13. பிள்ளையாரிடம் நான் இதைத் தருகிறேன் நீ அதைத்தா என்னும் பேரம் ஔவையாரே துவங்கி வைத்து விட்டார், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பது சரியில்லையா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      பிள்ளையார் வேண்டுதல் வேண்டாமை உடையவர்..
      ஆனால் - நமக்கு வேண்டியாதாக இருக்கின்றதே..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலமுடன்!..

      நீக்கு
  14. ஆஹா நான் இந்த பதிவையும் விட்டேனோ?

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலமுடன்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..