நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 15, 2015

வரலாறு முக்கியம்

ஐக்கிய அரபு அமீரகம்..

United Arab Emirates - UAE.,

சீர்மிகும் அரபியில் - தவ்லத் அல் - இமாரத் அல் - அராபியா..


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் - அபுதாபி..

ஐக்கிய அரபு அமீரகம் என்பது - ஏழு நாடுகளின் கூட்டமைப்பு..

கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகள் -

துபாய்
ஷார்ஜா
அஜ்மான்
புஜைரா
உம் அல் குவைன்
ராஸ் அல் கைமா -

- என்பன..

இவற்றின் அடிப்படை வளம் - பேரீச்சை.. அது மட்டுமே!..

பின்னாளில் கண்டறியப்பட்டதே - பெட்ரோலியம் மற்றும் எரிவாயு!..

இவற்றைக் கொண்டு - தன்னை வளப்படுத்திக் கொண்டதோடு -
பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வையும் வளப்படுத்திய பெருமை
அனைத்து அரபு நாடுகளுக்கும் உரியது..

அரபு தேசத்தின் வளத்தால் -
எத்தனை எத்தனையோ - உள்ளங்களும் இல்லங்களும்
ஒளி பெற்றிருக்கின்றன - என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது!..

பொதுவாக அரபு நாடுகளில் அங்கும் இங்கும் அறியக்கூடியதாக -
தவறுகள்.. இன்னல்கள்.. இடையூறுகள்..

ஆயினும்,

வேலை தேடுவோரின் நெஞ்சங்களில் விளக்காகத் தென்படுபவை -

வளைகுடாவின் பாலைவனச் சோலைகளே!..

அந்த வகையில் - இந்த மண்ணுக்கு அன்பின் வணக்கங்கள்!..

அபுதாபியில் தான் என் மருமகன் பணிபுரிகின்றார்..

செல்லத்தின் செல்லத்தைக் காண வேண்டும்..
அவர்கள் இல்லத்தில் சில நாட்கள் தங்கவேண்டும். அதற்காகவே விடுமுறை..


கடந்த சனிக்கிழமை (10 அக்டோபர்) நள்ளிரவு குவைத்திலிருந்து - அபுதாபிக்கு வந்து சேர்ந்தபின்,

நேற்றைய மாலைப் பொழுது அழகாக இருந்தது..

அபுதாபிக்கு வந்த இரவுப் பொழுதில் -
மிகக் கடுமையான - ருத்துபா எனும் புழுக்கம் நிலவியது.. செல்லும் வழி புலப்படவில்லை.. அந்த அளவுக்கு அடர்த்தியான நீராவி போன்ற காற்று..

ஆனால் - நேற்று புழுதிக்காற்று வீசவில்லை..

வெப்பத்துடன் கூடிய புழுக்கமும் காணப்படவில்லை..

வழிநெடுக -  சிலு சிலு.. என்று, இளங்காற்று!..

காரணம் -

இனியதொரு சந்திப்பு நிகழ இருந்தது - அபுதாபியில்!..

முன்னதாகவே சொல்லியிருந்தபடி - எங்கள் பயணம்..

மதீனா ஸையத் எனும் (Madinat Zayed Shopping Mall) அங்காடி வளாகத்தினைச் சென்றடைந்தோம்..


25 நிமிட தாமதம்..

ஆனாலும் - மாறாத புன்னகையுடன் அவர்கள் வரவேற்றனர்..

அவர்கள் என்றால் -

அன்புக்குரிய கில்லர் ஜி மற்றும் அன்புக்குரிய சே. குமார் ..

அவர்களைக் கண்டதுமே - என் கண்கள் பனித்தன..

ஏதோ ஆயிரம் காலம் பழகியதைப் போன்றதொரு உணர்வு..

அன்பின் மிகுதியால் வார்த்தைகள் தடுமாறின..

ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தோம்..

அப்படிச் சொல்வதை விட -

நாந்தேன்.. பேசிக் கொண்டிருந்தேன்!.. - என்று சொல்வதே பொருந்தும்..

சற்றே இடைவெளி..
அங்கிருந்த - சரவண பவன் உணவகத்தில் சிற்றுண்டி.. எளிமையாக!..

நாங்கள் பேசிக் கொண்ட விஷயங்களை நூறு பதிவுகளாகத் தரலாம்..

ஆயினும், இப்போதைக்கு - இதோ, சில காட்சிகள்!..






அன்பின் கில்லர் ஜி அவர்களும் குமார் அவர்களும் பரிசுகளுடன் என்னை மகிழ்வித்தது - எதிர்பாராத சிறப்பு..

அவர்களுடைய அன்பு எனும் வலைதனில் சிக்கிக் கொண்டேன்..

எங்கள் சந்திப்பினை எதிர்நோக்கியே - அந்த வளாகம் முழுதும்,
மின் விளக்குகளால் ஜொலித்தது என்பதனைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்!..

(ஏ.... சாமீய்.... சதாசிவோம்!?....)

இரவுப் பொழுதும் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் -

பிரிவதற்கு மனமில்லாமல் விடை பெற்றுக் கொண்டோம்..


நவராத்திரி வைபவம் அனுசரிக்கப்படும் வேளையில் அனைவரும் அம்பிகையிடம் ஆயிரமாயிரம் வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்..

அது நியாயமும் கூட!..

ஆனால், நாம் வேண்டுவதெல்லாம் -

ஆன்றோர்கள் குறித்தபடி - நல்ல நட்பினையே.. நல்ல உறவுகளையே!..

அந்த வரங்களையே - அம்பிகை நமக்கும் அருளியிருக்கின்றனள்!..

இந்த இனிய சந்திப்பு - 
அன்பின் இனிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!..

வாழ்க நலம்!..
* * *

26 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    சந்தித்தது எமது வாழ்வின் பொன்னான தருணங்களே..
    தங்களின் விழிகள் பனித்ததை நான் உணர்வால் உணர்ந்தேன் ஆகவேதான் நம்மில் பேச்சொலி வர சிறிய இடைவெளி... அதனை பிறகே தொடர்ந்தது அடைமொழியுடன் நமது இனிய தமிழ் மொழி...
    எமது பதிவுக்கு நான் எழுதிய வார்த்தை எப்படி ? தங்களின் பதிவில்.... அதுவும் ஒரே நேரத்தில் ஆச்சர்யமாக இருக்கின்றது கூடவே நம் இருவரின் சிந்தனையும் ஒரே நேர் கோட்டில் சந்திப்பது கண்டு ஆனந்தமும்கூட...
    தங்களிடம் பேசிய அனுபவ மொழியின் வாயிலாக நண்பர் சே. குமார் அவர்களுக்கு 1000 பதிவுகளுக்கு விடயம் அளித்து விட்டீர்கள் அவரின் சார்பாக நன்றி கூறுகிறேன்..
    வாழ்வின் பொன்நாள் 14.10.2015 புதன்கிழமை அபுதாபி.
    வாழ்க வளமுடன்.... பேத்தி வர்ஷிதாவுடன்....
    அன்புடன்
    - கில்லர்ஜி -

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா...
      அண்ணா உண்மையைச் சொல்லுங்க அந்த 1000 எனக்கா அல்லது தங்களுக்கா...?

      காமராஜர், அண்ணாத்துரை, கணக்குப்பிள்ளை, வெள்ளை அடித்தது கொள்ளை அடித்தது, உவேசா என தங்களுக்கான தலைப்புக்களை எல்லாம் பதிந்து வைத்து விட்டீர்களா?

      நீக்கு
    2. நாமிருவருமே கேட்டுக்கொண்டு இருந்தது உண்மையே...
      ஆனால் ? அவைகள் தங்களிடம் பதிவாகிக் கொண்டு இருப்பதை தங்களது கண்களில் படித்தேன்....

      நாந்தேன் ஜியில் பேச்சில் மயங்கி வாயில் கொசு போவது கூட தெரியாமல் வீட்டுக்கு வந்துதானே பார்த்தேன் ''வாய்க்குள் கொசு''

      நீக்கு
    3. ஆமாம் வாய்க்குள் கொசு போவது தெரியாமல்தானே மனசுக்குள்ள்... நல்லாக் கவனிங்க குமாரின் 'மனசு'க்குள் இல்லை... தங்களின் மனசுக்குள்ளே பதிந்து வைத்துக் கொண்டீர்கள்...

      விரைவில் மலரட்டும் பதிவுகளாய்....

      நீக்கு
    4. ஆம் நண்பரே உண்மையே.... 63 ஆண் கொசுக்களும், 57 பெண் கொடுக்களும், 28 குஞ்சுகளும் இருந்தது எண்ணிக்கையில் வந்தாக கண்டவராயன்பட்டி, கணக்குபிள்ளை கனகரத்தினம் எழுதி வைத்துள்ளார்.

      நீக்கு
    5. ஆக மொத்தம் 148 பதிவுகள் ரெடியாகி இருக்கு... அந்த 4 மணி நேரத்தில்...

      நீக்கு
    6. அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும்
      அன்பின் குமார் அவர்களின் அன்பிற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்!..

      நீக்கு
  2. நீங்கள் கில்லர்ஜியையும் குமாரையும் சந்தித்த நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் நெகிழ்ச்சியடைய வைத்தது. நீங்கள் அங்கு, உங்கள் அனைவரின் எண்ணங்களோ இங்கு. அவ்வாறே நாங்கள் இங்கு, எங்களின் எண்ணங்களோ கடல்கடந்து பணியாற்றும் தங்களைப் போன்றோரின் நண்பர்களைப் பற்றியே. நல்ல ஒரு வரலாற்றுப் பதிவு, நட்பைப் புலப்படுததுவது. கில்லர்ஜியின் பின்னூட்டம் எங்களை இன்னும் நெருக்கமாக உங்களிடம் கொண்டு சேர்த்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..

      நீக்கு
  3. அன்பின் ஐயா அவர்களுக்கு
    வணக்கம்.
    நேற்றிரவு சந்தித்ததற்குள் பகிர்வா...? நன்றி.
    தங்களைச் சந்தித்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
    ஆம்... தாங்கள்தான் பேசினீர்கள்... நாங்கள் மாணவர்களாய் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தோம்... ஏறக்குறைய 4 மணி நேரங்கள்...
    இயந்திரமான வாழ்க்கையில் இது போன்ற பேச்சுக்களைக் கேட்பது அரிதாகிவிட்டது....
    அப்படி இருக்க நிறைய விஷயங்களுடன் நிறைந்த சிந்தனையுடன் அழகான நகைச்சுவையுடன் தாங்கள் பேசியதை கேட்டுக் கொண்டுதான் இருக்கத் தோன்றும்... அப்படியே நாங்களும் அமர்ந்திருந்தோம்....

    எனக்கு ஒரு ஆச்சர்யம்.... நான் எப்பவுமே அதிகம் பேச மாட்டேன்.... அது கில்லர்ஜி அண்ணாவுக்குத் தெரியும்... ஆனால் கில்லர்ஜி அண்ணாவும் பேசாததுதான் ஆச்சர்யம்...

    எவ்வளவு விஷயங்கள்... எத்தனை ஆத்மார்த்தமான பேச்சு... ஆன்மீகமாய் சிந்திக்கும் ஐயாவுக்குள் எவ்வளவு விஷயங்கள்... எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் தங்களின் சந்திப்பு.


    எனது கதைகள் குறித்து தாங்கள் சொன்னது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது... சினிமா விமர்சனம் குறித்துச் சொன்னதும் மகிச்சி....

    நிறைய விஷயங்கள்... எத்தனையோ சிறுகதைகள் எழுதலாம்...

    தாங்கள் எங்களை கட்டி அணைத்து தங்கள் அன்பைப் பகிர்ந்த போதே இப்படி ஒரு அன்பை உறவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி என்றுதான் சொல்லத் தோன்றியது... அந்த அணைப்பு ஆயிரம் அன்பையும் நம் உறவின் உன்னதத்தையும் உணர்த்தியது.

    இந்த நட்பு... இந்த உறவு... கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

    மறக்க முடியாத நாளாகிவிட்டது நேற்றைய நாள்...

    வர்ஷிதாக் குட்டி நம் சந்தோஷங்களை இன்னும் அதிகமாக்கியவர்...

    தங்கள் மகள், மாப்பிள்ளை என அனைவரின் அன்பிலும் திளைத்தோம்...

    மீண்டும் சந்திப்போம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே நாம் அனைவருமே அரபு தேசங்களில் வாழ்வதால்தான் கட்டிப்பிடித்து அன்பைப்பொழியும் பழக்கத்தை பழகிக் கொண்டோம் 80 மறுக்க முடியாத உண்மை...

      மனம் சிலிர்த்த தருணங்களே... ஜியை சந்தித்தது தித்தித்ததே...

      நீக்கு
    2. ஆம் அண்ணா...
      அந்த அணைப்பில் ஒரு தந்தையின் அரவணைப்பை உணர்ந்தேன் அண்ணா...
      எவ்வளவு விஷயங்கள்... தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள் அல்லவா... எத்தனை செய்திகள்....
      உண்மையில் நாம் பாக்கியவான்கள்...

      நீக்கு
    3. அன்பின் கில்லர் ஜி அவர்களின் அன்பிற்கும்
      அன்பின் குமார் அவர்களின் அன்பிற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்!..

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    உளம் நிறைந்திருக்கும் உன்னத நட்புகளைச் சந்தித்த மகிழ்வினை எமக்கும் பகிர்ந்ததைக் கண்டு உள்ளம் பூரித்தேன்! மிக மிக அருமை ஐயா!

    படங்கள் பளிச்சென அழகு! நண்பர்களுடன் தங்களையும் ஒன்றாகக்
    காட்சியில் கண்டது மிகச் சிறப்பு. நட்புக்கு இணை ஏதுமில்லை ஐயா!
    நானும் வலையுலக நட்புகளால் உறவுகளால்தான் இந்த அளவிற்கேனும் உலவுகிறேன்.
    உன்னதமான உங்கள் நட்பு வளமும் நலமும் ஓங்கிச் சிறக்க வேண்டுகிறேன்!

    தங்களுக்கும் சகோதரர்கள் கில்லஜி, குமார் இருவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பு வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. முகம் அறியா வலை நட்புகள் சிலரைக் கண்டதும் அறிந்த நட்புகளோடு இன்னும் இறுக்கம் ஏற்பட்டதும் நானும் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன் எத்தனையோ விஷயங்களில் கருத்து ஒத்துப் போகாமல் இருக்கலாம் ஆனல் அவை நல்ல நட்பில் கரைந்து விடும் நட்பு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும்
      வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி
      நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..

      நீக்கு
  6. இனியதோர் சந்திப்பின் மகிழ்ச்சி உங்கள் பதிவில் தெரிகிறது. வலையுலகம் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் நட்பு தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. மிகுந்த மகிழ்ச்சியே,
    தங்கள் எங்களையே நேரில் சந்தித்தது போன்ற ஓர் மகிழ்வு,,,
    மகிழ்ச்சியை பகிர்ந்தது இன்னும் அழகு
    அழகான படங்கள், அதிலும் தங்களைக் கண்டது இன்னும் மகிழ்ச்சி,,,
    வாழ்க நல் உறவுகளுடன், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் என வாசிக்கவும்,
      தங்கள் குட்டிமாவுக்கு வாழ்த்துக்கள்,
      என்றும் வளமுடனும் இறையருளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
      நன்றி.

      நீக்கு
    2. தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் வர்ஷிதாவை வாழ்த்தியமைக்கு நன்றி..
      நட்பும் நல்லுறவும் தழைக்கட்டும்..

      வாழ்க நலம்...

      நீக்கு
  8. இப்போதுதான் பரிவை சே.குமார் மற்றும் கில்லர்ஜி பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்தேன். வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது, இப்போது வெளிப்படையாக வலைத்தளங்களில் வெளியாவது, தமிழ்க் கணினி உலகிற்கு வளர்ச்சியின் அறிகுறியே ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவுகளில் மட்டுமே கண்டிருந்த நண்பர்களை சந்திக்கும்போது மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
      தங்களின் இனிய வருகையும் அழகிய கருத்தும் மகிழ்ச்சி..

      நீக்கு
  9. நண்பர் கில்லர்ஜி பதிவு பார்த்துட்டு வர்ரோம்...உங்க பதிவு
    அருமையான சந்திப்பு மட்டுமல்ல புகைப்படங்களுடன் எல்லா தகவல்களும் நம் குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகள் போல பரிமாறிக் கொள்ளபடுவது எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது இல்லையா ஐயா...

    மிக்க மகிழ்ச்சி

    வாழ்க நலமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உண்மையில் மனம் அடைந்த மகிழ்ச்சி பெரிது..

      தங்களுடைய அன்பான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு உற்சாகமாக இருக்கின்றது..

      நன்றி ஐயா.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..